Thandel Review: தண்டேல் விமர்சனம்.. நாக சைதன்யா கம்பேக் கொடுத்தாரா?.. சாய் பல்லவி காப்பாற்றினாரா?

Rating:
2.5/5

நடிகர்கள்: நாக சைதன்யா, சாய் பல்லவி
இசை: தேவி ஸ்ரீ பிரசாத்
இயக்கம்: சந்து மொண்டேட்டி
ரேட்டிங்: 2.5

சென்னை: இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில் நாக சைதன்யா, சாய் பல்லவி, கருணாகரன், பப்லு பிருத்விராஜ், ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலர் நடித்து இன்று வெளியான படம் தான் தண்டேல். நடிகர் நாக சைதன்யா சமந்தாவை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். அதன் பின்னர், அவரை விவாகரத்து செய்து பிரிந்தார். கடந்த ஆண்டு சோபிதா துலிபாலாவை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.

சமந்தாவை விவாகரத்து செய்து பிரிந்ததில் இருந்து நாக சைதன்யா நடித்த படங்களான தேங்க்யூ, லால் சைங் சத்தா மற்றும் கஸ்டடி உள்ளிட்ட படங்கள் படுதோல்வியை சந்தித்தன. இந்நிலையில், 2வது மனைவி வந்த ராசி நாக சைதன்யாவுக்கு பிளாக்பஸ்டர் வெற்றியை கொடுக்குமா? இல்லையா? என்கிற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Thandel  Thandel Review  Sai Pallavi

காதலும், பிரிவும், போராட்டமும் கொண்ட வாழ்க்கையை மையப்படுத்திய இந்த படத்தின் கதை ஏற்கனவே பார்த்த சில படங்களை ஞாபகப்படுத்தும் நிலையில், தண்டேல் படத்தின் விமர்சனம் குறித்து இங்கே முழுமையாக பார்க்கலாம் வாங்க..

தண்டேல் கதை: தண்டேல் ராஜு (நாக சைதன்யா) எல்லையை தாண்டி மீன் பிடித்த காரணத்திற்காக 21 மீனவர்களுடன் பாகிஸ்தானிய கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார். சத்யாவுக்கும் (சாய் பல்லவி) ராஜுவுக்கும் இடையே என்ன உறவு? பாகிஸ்தான் சிறையில் இருக்கும் ராஜுவை காப்பாற்ற எந்தளவுக்கு போராட்டங்களை சத்யா செய்கிறார். அதில், அவர் வெற்றிப் பெற்று ராஜுவை காப்பாற்றினாரா? இல்லையா? என்பது தான் இந்த தண்டேல் படத்தின் கதை.

Thandel  Thandel Review  Sai Pallavi

படம் எப்படி இருக்கு: நாக சைதன்யா இதுவரை நடித்த படங்களிலேயே இந்த படத்தில் அவருடைய நடிப்பு சூப்பராக உள்ளது. சாய் பல்லவியின் நடிப்பு பற்றி சொல்லவே தேவையில்லை. சிறப்பான கதாபாத்திரத்தை தேர்வு செய்து ஹோம்லி லுக்கில் வழக்கம் போலவே நடிப்பை வெளிப்படுத்தி ஸ்கோர் செய்துள்ளார். அவர் சிரித்தால் சிரிக்கவும், அழுதால் அழவும் எப்படி அமரன் படத்தில் வைத்தாரோ, அதே போல டோலிவுட் ரசிகர்களை இந்த படத்திலும் எமோஷனலாக கனெக்ட் செய்து விடுகிறார். கருணாகரன் இந்த படத்தில் சப்போர்ட்டிங் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார். பப்லு பிருத்விராஜ் சாய் பல்லவியின் அப்பாவாக கொடுத்த வேலையை கச்சிதமாக செய்துள்ளார். நாக சைதன்யா மற்றும் சாய் பல்லவியின் காதல் போர்ஷன்களும் பாடல் காட்சிகளும் தியேட்டருக்கு சென்ற ரசிகர்களுக்கு நல்ல ட்ரீட் என்றே சொல்லலாம்.

Thandel  Thandel Review  Sai Pallavi

பிளஸ்: தேவி ஸ்ரீ பிரசாத் இந்த படத்திற்கு ஏகப்பட்ட தரமான பாடல்களை கொடுத்து ரசிகர்களை உருக வைத்துள்ளார். தெலுங்கில் புஷ்பா 2, தண்டேல் என கலக்கி வரும் அவர் தமிழில் கங்குவா படத்தில் மட்டும் ஏன் அப்படி செய்தார் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். "நமோ நமச்சிவாயா" பாடல் அட்டகாசம். கடல் காட்சிகளை ஒளிப்பதிவு செய்தது காதல் காட்சிகளை ரம்மியமாக படமாக்கிய விதத்தில் ஒளிப்பதிவாளர் சாம்தாத் சபாஷ் போட வைக்கிறார். நாக சைதன்யா மற்றும் சாய் பல்லவியின் நடிப்பு படத்திற்கு பெரும் பலம்.

Thandel  Thandel Review  Sai Pallavi

மைனஸ்: விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான க/பெ. ரணசிங்கம் மற்றும் ஐஸ்வர்யா ராய் நடித்து வெளியான சரப்ஜித் உள்ளிட்ட படங்களில் எப்படி பெண் கதாபாத்திரங்கள் போராட்டம் நடத்துவார்களோ அதே போன்ற ஒரு கதையை படமாக்கி உள்ளார் இயக்குநர். ஆனால், ஆரம்பத்தில் இருந்தே பல இடங்களில் ரொம்பவே ஸ்லோவான திரைக்கதை மூலம் ரசிகர்களை சோதித்து விடுகிறார். நடிகர்களின் நடிப்பு நன்றாக இருந்தும் கதை மற்றும் திரைக்கதை டல் அடித்து காணப்படுவதால் பிளாக்பஸ்டர் வெற்றி பெற வேண்டிய இந்த தண்டேல் தடுமாறிவிட்டது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X