Thangalaan Review: தங்கலான்.. மங்கலான்.. சியான் விக்ரம் படத்துக்கு குவியும் கலவையான விமர்சனங்கள்!
சென்னை: பா. ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ள தங்கலான் திரைப்படம் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினமான இன்று வெளியானது. அமெரிக்கா மற்றும் இந்தியாவின் மற்ற மாநிலங்களில் காலை 6 மணிக்கே முதல் காட்சி போடப்பட்டு படத்தின் ரிசல்ட் குறித்து ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்கள் தங்கள் விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர்.
சியான் விக்ரமின் கடுமையான உழைப்புக்கு இந்த படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், காலையிலேயே நெகட்டிவ் விமர்சனங்களும் குவியத் தொடங்கி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தங்கலான் படத்திற்கான டிக்கெட் புக்கிங் இன்று வெளியான மற்ற படங்களான டிமான்ட்டி காலனி 2 மற்றும் ரகு தாத்தா படங்களை விட அதிகளவில் உள்ள நிலையில், படத்திற்கு கலவையான விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.
ப்யூர் கூஸ்பம்ப்ஸ்: தங்கலான் படத்தின் முதல் பாதி ப்யூர் கூஸ்பம்ப்ஸ் ஆக உள்ளது. இந்த படத்திற்கு முதுகு தண்டாக இருப்பது சியான் விக்ரமின் நடிப்பு தான். விஷுவல் ட்ரீட்டாக படம் உள்ளது. நிச்சயம் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் வெற்றியை இந்த படம் அடையும் என ரசிகர்கள் விமர்சனங்களை வழங்கி வருகின்றனர்.

கொஞ்சம் லேக் இருக்கு: தங்கலான் படத்தில் சில லேக் இருக்கு, ஆனாலும் படத்தின் தரம் சர்வதேச தரத்தில் உள்ளது. பா. ரஞ்சித் மற்றும் சியான் விக்ரமின் உழைப்பு ஒவ்வொரு ஃபிரேமிலும் தெரிகிறது. விக்ரமுக்கு மிகப்பெரிய வெற்றிப் படமாக தங்கலான் அமைய வேண்டும் என இந்த நெட்டிசன் விமர்சனம் கொடுத்துள்ளார்.

விஷுவல் ட்ரீட்: தங்கலான் படத்தின் முதல் பாதி முழுவதும் ரசிகர்களுக்கு சிறப்பான விஷுவால் ட்ரீட்டாக இருக்கு என இந்த ரசிகர் படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனத்தை கொடுத்துள்ளார். சியான் விக்ரமின் உழைப்புக்காகவே இந்த படத்தை தாராளமாக தியேட்டருக்கு சென்று பார்க்கலாம் என சியான் விக்ரம் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

படம் புடிக்கல: தங்கலான் படத்தில் சியான் விக்ரமின் நடிப்பு, ஜி.வி. பிரகாஷின் இசை, விஷுவல் ட்ரீட் என எல்லாமே நல்லா இருந்தாலும் படத்தின் கதை சுத்தமாக எனக்கு பிடிக்கவில்லை என இந்த ரசிகர் கடுமையாக விமர்சித்துள்ளார். முதல் 20 நிமிடங்கள் படம் புரியவே இல்லை என்றும் அந்த மொழியை புரிந்துக் கொள்ளவே முடியவில்லை என்றும் பதிவிட்டு இருக்கிறார்.

ப்ரூட்டல்: பா. ரஞ்சித்தின் இயக்கம் மற்றும் சியான் விக்ரமின் நடிப்பும் உழைப்பும் Brutal. தங்கலான் தாறுமாறாக உள்ளது. நிச்சயம் இந்த படத்துக்கு பல விருதுகள் குவியும் என இந்த ரசிகர் தனது தம்ப்ஸ் அப்பை கொடுத்திருக்கிறார்.

மங்கலான்: "தங்லான் - மங்கலான்" என கிறிஸ்டோபர் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் தங்கலான் படத்துக்கு காட்டமான விமர்சனத்தை கொடுத்திருக்கிறார். சியான் விக்ரம் ரசிகர்கள் அவரை ரவுண்ட் கட்டி பொளந்து வருகின்றனர். தங்கலான் படம் டாப் நாட்ச்சாக இருக்கும் என்று எதிர்பார்த்தால் டல் அடிக்கிறது, சாரி சியான் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரொம்ப சுமார்: சியான் விக்ரம் மற்றும் பார்வதி நல்லா நடிச்சிருக்காங்க.. ஆனால், படத்தில் வேற ஒன்றும் ரசிக்கும்படி இல்லை. ரஞ்சித்தோட வீக்கஸ்ட் படம் இது எனக்கு சுத்தமாக புடிக்கல என இந்த நெட்டிசனும் படத்திற்கு நெகட்டிவ் விமர்சனத்தை கொடுத்துள்ளார். மேலும், சாரி சியான் விக்ரம் ரசிகர்களே அடுத்து நமக்கு தரமான படமாக வீர தீர சூரன் வரும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

விரைவில் விமர்சனம்: காலை 9 மணிக்கு தமிழ்நாட்டில் தங்கலான் படம் வெளியாகிறது. பா. ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி நடித்துள்ள தங்கலான் படம் எப்படி இருக்கிறது என்பது குறித்த விரிவான விமர்சனம் விரைவில் நமது பிலிமிபீட்டில் வெளியாகும்!


Click it and Unblock the Notifications











