twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இன்னும் கொஞ்சம் நன்றாக தவம் செய்துருக்க வேண்டும் இயக்குனர்

    |

    நடிகர்கள்: வாசி ஆசிப், பூஜா ஸ்ரீ ,சீமான் ,போஸ் வெங்கட் மற்றும் பலர்.

    இசையமைப்பாளர் - ஸ்ரீ காந்த தேவா.

    இயக்குனர் - R. விஜய் ஆனந்த் - ஆர். சூரியன்.

    சென்னை : இதுவும் விவசாயத்தை மையமாக வைத்து உருவான கதை தான் என்பது மகிழ்ச்சி ஒருபக்கம் இருந்தாலும் இன்னுமாடா விவசயாத்த இப்படி கூவி கூவி படம் எடுத்து என்ன செய்ய போறோம் என்ற வேதனை ஒரு பக்கம்.

    அகிலா (பூஜா ஸ்ரீ) சொந்த ஊரான காரைக்குடிக்கு தன் நண்பர்களை கான செல்லகிறாள் அங்கு முருகன் (வாசி ஆசிப்) என்பவன் தான் தன்னுடைய சிறு வயது நண்பன் என்று தெரிந்ததும் அவனை காதல் செய்கிறாள்.கவர்ச்சியான உடைகள் உடுத்தி பல காட்சிகளில் வந்தாலும் கதையோடு கவர்ச்சி சரியான அளவில் ஒட்டவில்லை என்பது தான் உண்மை.

    Thavam is a movie telling about -save agricultural lands and preserve nature.

    வில்லனாக வரும் இயக்குனர் விஜய் ஆனந்த் (சிவா அண்ணா) அகிலா கண்முன் ஒரு கொலை செய்கிறார் அதை போலீஸிடம் சொல்லி சிவாவை அரெஸ்ட் செய்ய பார்க்கிறாள் ஹீரோயின் அகிலா

    Thavam is a movie telling about -save agricultural lands and preserve nature.

    அகிலாவை போட்டு தள்ள முடிவு செய்கிறார் வில்லன் , அகிலாவை முருகன் காப்பாத்த போகிறாரா இல்லையா என்பதே கதையின் இரண்டாம் பகுதி. முதல் பாதியை பார்த்து பல பேர் எப்போ டா இண்டெர்வெல் விடுவானுக வீட்டுக்கு போலாம் என்று சீட் நுனியில் நெளிந்தவர்கள் பல.

    Thavam is a movie telling about -save agricultural lands and preserve nature.

    படத்தின் முதல் பகுதி முடிவில் தான் சீமான் அவர்கள் வருகிறார். அதற்குமுன் படத்தில் எந்த வலுவான திரைக்கதை இல்லாத காரணத்தால் முகம் சுளிக்க வைக்கிறது.

    Thavam is a movie telling about -save agricultural lands and preserve nature.

    இரண்டாம் பாதியில் சீமான் விவசாயத்திலும் நில புரோக்கர் பற்றியும் பேசும் வசனங்கள் காட்சிகள் திரைக்கதைக்கு வலுவு சேர்க்கும் வண்ணம் இருந்தாலும் அது வெறும் 30 நிமிடமே தான். சீமான் பிறந்தநாள் அன்று ரிலீஸ் ஆன குறும்படம் என்று தான் சொல்ல வேண்டும். அவருடை காட்சிகள் மட்டுமே கொஞ்சம் வீரியம் உள்ளது . மழை வேண்டி கிராமத்து மக்களுடன் சீமான் பாட்டு பாடுவது எளிமையாகவும் உணர்வுபூர்வமாகவும் இருந்தது .
    போஸ் வெங்கட் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நல்லவன் போல் நடிக்கும் கெட்டவனாக நடித்து தன் திறமையை காட்டி உள்ளார். இந்த பிளாஷ் பாக் குறும்படம் முடுத்தவுடன் மீண்டும் அதே கவர்ச்சி அதே கிராமம் பழைய அலுத்து போன காட்சிகள் என்று இயக்குனர் தன் வேலையை துவங்குகிறார்.

    Thavam is a movie telling about -save agricultural lands and preserve nature.

    காதலியை காப்பதும் முயற்சியில் உயிரை விடும் முருகன். அகிலா முருகன் இருப்பதாக நினைத்து வாழும் காட்சிகள் செல்வராகவன் பட கதையில் வரும் கதிர் போல தெரிகிறது.

    Thavam is a movie telling about -save agricultural lands and preserve nature.

    கதையை சுருக்கமாக சொல்லாமல் வள வளவென இது எப்படா முடியும்னு சொல்ற அளவுக்கு கதையை நகர்த்தி இருக்கார் இயக்குனர்.

    Thavam is a movie telling about -save agricultural lands and preserve nature.

    இந்த கதைக்கும் விவசாயத்துக்கும் எந்த ஒரு ஒற்றுமை இல்லை.

    Thavam is a movie telling about -save agricultural lands and preserve nature.

    அதே போல் பாடல்கள் கேட்கும் வண்ணம் இல்லை. எந்த காட்சியும் மனதில் நிற்கும் வண்ணம் எடுக்க படவில்லை என்பது தான் படத்துக்கு மிக பெரிய பலவீனம். நிறைய செலவு செய்து எடுக்க படும் இப்படி பட்ட படங்கள் திரைக்கு வந்து பல நல்ல தயாரிப்பாளர்களை காலி செய்து விடுகிறது என்பது தான் வேதனையான விஷயம். மொத்தத்தில் தவம் இது ஒரு விவசாயப்புரட்சி !.. இல்லை இது ஒரு விஷப்பரீட்சை !.

    Thavam is a movie telling about -save agricultural lands and preserve nature.

    English summary
    Thavam is a movie telling about -save agricultural lands and preserve nature.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X