twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    The Batman Review: ஜேம்ஸ்பாண்டுக்கு பேட்மேன் காஸ்ட்யூம் போட்டா எப்படி இருக்கும்? அப்படி மிரட்டுது!

    |

    Rating:
    3.5/5

    நடிகர்கள்: ராபர்ட் பேட்டின்சன், ஸோ கிராவிட்ஸ், பால் டானோ

    இசை: மைக்கேல் ஜியாசினோ

    இயக்கம்: மேட் ரீவ்ஸ்

    ரேட்டிங் - 3.5/5.

    லாஸ் ஏஞ்சல்ஸ்: மார்வெல் சூப்பர் ஹீரோக்கள் மல்டிவெர்ஸ் நோக்கி சென்று விட்ட நிலையில், டிசி சூப்பர்ஹீரோவான பேட்மேன் ஜேம்ஸ்பாண்டாக மாறி மிரட்டும் படம் தான் தி பேட்மேன்.

    தி பேட்மேன் படத்தை பிரம்மாண்ட திரையில் தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் ரசிகர்கள் காண இன்று இந்த படம் இந்தியாவிலும் வெளியாகி உள்ளது.

    வலிமை படத்துக்கு ஏற்கனவே நேற்று துல்கர் சல்மானின் ஹே சினாமிகா படம் வெளியாகி தியேட்டர்களை ஆக்கிரமித்துள்ள நிலையில், தி பேட்மேன் மேலும், பெரிய வசூல் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. ட்விலைட் சாகா படத்தில் பெண்களின் உள்ளங்களை கொள்ளையடித்த வெள்ளை மாதவனான ராபர்ட் பேட்டின்சன் பேட்மேனாக கரகர குரலில் கருப்பு உடையில் எப்படி மிரட்டி இருக்கிறார் என்பது குறித்து இங்கே விரிவாக பார்ப்போம்..

    விஜய்யை திருமணம் செய்ய விருப்பம்… ஓபனா ஆசையை சொன்ன ராஷ்மிகா!விஜய்யை திருமணம் செய்ய விருப்பம்… ஓபனா ஆசையை சொன்ன ராஷ்மிகா!

    டிசி ரசிகர்களின் உயிர்

    டிசி ரசிகர்களின் உயிர்

    காமிக்ஸ் உலகத்தை மார்வெல் மற்றும் டிசி உலகங்கள் கட்டி ஆண்டு வரும் நிலையில், மார்வெல் உலகில் அயன்மேன், கேப்டன் அமெரிக்கா, ஸ்பைடர்மேன், தோர், டாக்டர் ஸ்ட்ரேஞ்ச், லோகி என அவெஞ்சர்ஸ் தாண்டி மல்டிவெர்ஸ் நோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில், டிசி ரசிகர்களின் உயிராக உயர்ந்து நிற்கும் பேட்மேன் கதாபாத்திரத்தின் புதிய படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது.

    பேட்மேனாக ராபர்ட் பேட்டின்சன்

    பேட்மேனாக ராபர்ட் பேட்டின்சன்

    எத்தனையோ நடிகர்கள் இதுவரை பேட்மேன் உடையை மாட்டிக் கொண்டு கோதம் சிட்டியை பாதுகாத்து வந்திருக்கின்றனர். புதிதாக அந்த பணியை தலைமேற்கொண்டு சிறப்பாக செய்திருக்கிறார் நடிகர் ராபர்ட் பேட்டின்சன். டெனெட் படத்திலேயே அந்த குழந்தையா? என் உயிரை காப்பாற்றியது என ஹீரோவே குழம்பும் கதாபாத்திரத்தில் நடித்து அசத்திய ராபர்ட் பேட்டின்சன் டிடெக்டிவ் பேட்மேனாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை நானும் பேட்மேன் தான் நானும் பேட்மேன் தான் என நம்ப வைத்துள்ளார்.

    பேட்மேனா? ஜேம்ஸ் பாண்டா?

    பேட்மேனா? ஜேம்ஸ் பாண்டா?

    சூப்பர் ஹீரோ படம் என்றாலும், பேட்மேன் கதாபாத்திரம் ஒரு ரியல் ஹீரோ தான் சூப்பர் ஹீரோவாக தன்னை மறைத்துக் கொண்டு எதிரிகளை துவம்சம் செய்கிறான் என்பது தான் பேட்மேன் கதையின் மையக்கரு. அதனை, முழுமையாக புரிந்து கொண்ட இயக்குநர் மேட்ரீவ்ஸ் தி பேட்மேன் படத்தை பார்க்க வந்த ரசிகர்களுக்கு சூப்பரான த்ரில்லிங்கான டிடெக்டிவ் கதையை திரையில் காட்டி மிரட்டியிருக்கிறார். படத்தை பார்த்து விட்டு வெளியே வரும் போது தான் இது பேட்மேன் திரைப்படமா? அல்லது ஜேம்ஸ் பாண்ட் படமா? என்கிற கேள்வியே எழுகிறது.

    வலிகளுடன் போராடும் நாயகன்

    வலிகளுடன் போராடும் நாயகன்

    இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு பணக்காரன் தனது நகரத்தை காப்பாற்ற பேட்மேனாக மாறும் கதையாக இல்லாமல், பெற்றோர்களை இழந்து வலியால் தவித்து வரும் சிறுவன் எப்படி பேட்மேனாக மாறுகிறான் என்கிற வலுவான பேக்ஸ்டோரியை திரைக்கதையில் வைத்து கலக்கி இருக்கிறார் இயக்குநர் மேட் ரீவ்ஸ்.

    கேட் உமன்

    கேட் உமன்

    பேட்மேனுக்கு பக்க பலமாக கேட் உமனாக நடித்துள்ள நடிகை ஜோ கிராவிட்ஸ் பட்டையை கிளப்பி இருக்கிறார். பல வருஷத்துக்கு பிறகு ஒரு சிறப்பான கேட் உமன் கதாபாத்திரத்தையும் பேட்மேனுக்கும் கேட் உமனுக்கும் இருக்கும் கெமிஸ்ட்ரியை பார்த்து டிசி ரசிகர்கள் புல்லரித்துப் போயுள்ளனர்.

    வேற லெவல் ரிட்லர்

    வேற லெவல் ரிட்லர்

    பிரிசனர்ஸ், தி பவர் ஆஃ தி டாக், தி கேர்ள் நெக்ஸ்ட் டோர் என ஏகப்பட்ட படங்களில் நடித்துள்ள பிரபல ஹாலிவுட் நடிகர் பால் டானோ தான் ராபர்ட் பேட்டின்சன் பேட்மேனாக நடித்துள்ள படத்தில் அவரை கன்னா பின்னாவென அலைய விடும் ரிட்லர் எனும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பேட்மேன் வில்லன் என்றாலே டார்க் நைட் படத்தில் நடித்த மறைந்த நடிகர் ஹீத் லெட்ஜர் தான் இன்னமும் ரசிகர்களின் ஃபேவரைட் என்கிற நிலையில், அந்த இடத்தை பிடிக்க ரொம்பவே சிரமப்பட்டு இருக்கிறார் பால் டானோ என்பது அவர் சிரிக்கும் சிரிப்பு மற்றும் அவரது கண் அசைவு வரை தெளிவாக காட்டுகிறது.

    குறைகளும் இருக்கு

    குறைகளும் இருக்கு

    தி பேட்மேன் திரைப்படம் டிசி ரசிகர்களுக்கு மிகப்பெரிய கொண்டாட்டத்தை நிச்சயம் திரையரங்குகளில் கொடுக்கும் என்பதில் எந்தவொரு மாற்றுக் கருத்தும் இல்லை. சூப்பர்ஹீரோ படத்தை பார்க்கப் போகிறோம் என நினைத்து செல்லும் ரசிகர்களுக்கு நிச்சயம் இந்த படம் சிறிய ஏமாற்றத்தை கொடுக்கும். ராபர்ட் பேட்டின்சன் பேட்மேனாக மிரட்டி இருந்தாலும், இன்னமும் ஒரு திடகாத்ரமான நடிகரை பேட்மேனாக காஸ்ட் செய்திருக்கலாம் என்கிற எண்ணம் படம் பார்க்கும் போது ஏற்படுவது பெரிய மைனஸாக மாறியுள்ளது. மற்றபடி இந்த பேட்மேன் திரைப்படம் கண்டிப்பாக தியேட்டரில் போய் பார்க்க வேண்டிய படம் தான்.

    English summary
    Robert Pattinson scores as a detective Batman in his recent release movie The Batman. Paul Dano justifies the role Riddler with his mesmerizing acting.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X