The Flash Movie Review: டிவி சீரியல் சிஜியே பெட்டரா இருக்கும்.. ஃபிளாஷ் படத்தை பங்கம் பண்ண ஃபேன்ஸ்!
லாஸ் ஏஞ்சல்ஸ்: இது என்னடா ஹாலிவுட் படத்துக்கு வந்த சோதனை என்பது போல படு மோசமான சிஜியில் டிசி தயாரிப்பில் தி ஃபிளாஷ் திரைப்படம் இன்று வெளியாகி உள்ளதாக நெட்டிசன்கள் சர்வதேச அளவில் படத்தை கழுவி ஊற்றி பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.
இயக்குநர் ஆண்டி முஸ்சியாட்டி (Andy Muschietti) இயக்கத்தில் எஸ்ரா மில்லர் (Ezra Miller) நடிப்பில் வெளியாகி உள்ள மல்டிவர்ஸ் தீம் கொண்ட படம் தான் இந்த ஃபிளாஷ்.

ஏகப்பட்ட சூப்பர் ஹீரோக்கள் சர்ப்ரைஸ் ஆக இந்த படத்தில் வந்தாலும், ரசிகர்கள் எதிர்பார்த்த அளவுக்கு படம் மிரட்டலாக இல்லை என 1 ஸ்டார் ரேட்டிங்கை எல்லாம் போட்டு வெளுத்து வாங்கி வருகின்றனர்.
சொதப்பும் சூப்பர் ஹீரோக்கள்: மிரட்டலாக ஒரு காலத்தில் டானாக இருந்த ஹாலிவுட் படங்கள் எல்லாம் சமீப காலமாக பல நூறு கோடிகளை கொட்டி படமெடுத்தாலும் கதையே சரியாக இல்லாத காரணத்தினால் படு தோல்வியை சந்தித்து வருகின்றன.

டார்கெட் வைத்து படங்களை ரிலீஸ் செய்வது போல அவசரகதியில் உருவாக்கி வருவதால் சூப்பர் ஹீரோக்கள் டஜன் கணக்கில் குவிந்தாலும், ஹிப் ஹாப் ஆதியின் வீரன் படமே இதுக்கு பெட்டர் என சொல்லும் அளவுக்கு ஹாலிவுட் படங்கள் அடிவாங்கி வருகின்றன.
அதனால் தான் ராஜமெளலியின் ஆர்ஆர்ஆர் படத்தையெல்லாம் பார்த்து வாவ் என வாய் பிளந்தனர் என்றும் ட்ரோல்கள் பறக்கின்றன.
People totally have the right to make fun of how the Flash movie looks. I am sorry but if you are a 300 million dollar blockbuster audiences deserve something more than ugly ass CGI and painfully obvious blue screen. pic.twitter.com/vmY4ue9CET
— ClarkQuill97 (@CQuill97) June 12, 2023
தி ஃபிளாஷ் எப்படி இருக்கு?: இன்று உலகம் முழுவதும் இப்படியொரு படம் வெளியாகிறது என்பதே பலருக்கும் குறிப்பாக இந்திய ரசிகர்களுக்கே தெரியாத அளவுக்கு உள்ளது தான் இந்த படத்தின் மோசமான நிலை என்று கூறலாம்.
பிரபாஸின் ஆதிபுருஷ் படம் நாளை வெளியானால், இன்று கிடைத்த தியேட்டர்கள் கூட இந்த ஃபிளாஷ் படத்திற்கு படத்தின் பேரை போலவே மின்னல் வேகத்தில் காணாமல் போய்விடும். அதன் காரணமாகவே உஷாராக ஒரு நாள் முன்பாக வெளியிட்டுள்ளனர். ஆனால், படத்தை பார்த்த ரசிகர்கள் செம அப்செட் ஆகும் படி டிசி நிறுவனம் இந்த படத்தை ரொம்ப சுமாராக எடுத்திருப்பதாக விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.
The CGI of a TV show is far better than The Flash movie pic.twitter.com/L4M0CXDOBF
— Wanda Maximoff ᱬ (@scarlazywitch) June 7, 2023
சிஜி ரொம்ப சுமார்: ஹாலிவுட் சூப்பர் ஹீரோ படங்களின் கதை என்றாலே, உலகத்தை காப்பாற்றுவது என்கிற ஒற்றை கதையில் பல படங்கள் முடிந்து விடும் நிலையில், சிஜி காட்சிகள் தான் படத்தை பெரும்பாலும் காப்பாற்றும். ஆனால், இங்கே டிவி சீரியல் சிஜி காட்சிகளை விட படு சுமாரான சிஜியை போட்டுள்ளனர் என நெட்டிசன்கள் விமர்சனத்தால் வெளுத்து வாங்கி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











