twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    MOVIE REVIEW: தி காஷ்மீர் ஃபைல்ஸ் படம் எப்படி இருக்கு ?

    |

    Rating:
    3.0/5

    நடிகர்கள் :

    அனுப்பம் கேர்
    தர்ஷன் குமார்
    மிதுன் சக்கரவர்த்தி
    பல்லவி ஜோஷி

    இசை : ரோஹித் சர்மா, ஸ்வப்னில் பண்டொட்கர்

    இயக்கம் : விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி

    ரேட்டிங் : 3/5

    சென்னை : "தி காஷ்மீர் ஃபைல்ஸ்" 80களின் பிற்பகுதியில் 90களின் நடுவே காஷ்மீரில் நிகழ்ந்த பல பிரச்சனைகள் ஆகியவற்றின் ஆவணமாக, காஷ்மீர் மக்களுள் பாதிக்கப்பட்ட பண்டிட்களின் குரலாக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

    Recommended Video

    காட்சிகளில் பதைபதைப்பு கண்களை கலங்க வாய்த்த தி காஷ்மீர் ஃபைல்ஸ்

    இந்த படத்தை பொறுத்தவரை ஒரு குறிப்பிட்ட தரப்பை நியாயமாகவும், இன்னொரு தரப்பை ஒதுக்கிவிட்டு விவாதிப்பது முறையாகாது என்று சமூக வலைதளங்களில் விவாதம் எழுந்து வருகிறது.

    கமல் நடித்த விருமாண்டி படம் போல் இரண்டு பக்கங்களையும் அலச வேண்டிய கட்டாயம் ஒரு சினிமா ரசிகனுக்கு,ஒரு சாமான்ய இந்தியனுக்கு தேவை படுகிறது என்கிற வாதம் விமரசனமாக எழுந்துள்ளது.

    இந்திய வரைபடத்தில் காஷ்மீர்

    இந்திய வரைபடத்தில் காஷ்மீர்

    இந்த படத்தின் கதையை சுருக்கமாக சொன்னால் காஷ்மீரில் நடந்த பல உண்மையான சம்பவங்களை இஸ்லாமியர்களும் பண்டிட் பிரிவினரும் அவர் தரப்பு வாதங்களை பதிவு செய்வதுதான். நிலப் பிரச்சனை, உரிமை, அடையாளம், கௌரவம் என்று பல விஷயங்களில் முரண்பாடான கருத்துக்கள் கொண்ட இரண்டு பிரிவினர்கள் மோதிக்கொள்ளும் இடமாக இந்திய வரைபடத்தில் ஒரு தனி நாடாகவே காஷ்மீர் பார்க்கப்பட்டு பிரச்சனைகளை அணுகுகிறது. இந்த படத்தின் ஒட்டு மொத்த கதையும் இவை சுற்றித்தான் என்பது இயக்குனர் பல காட்சிகள் மூலம் புரியவைக்கிறார். படத்தின் கேமரா காஷ்மீரை காட்டிய விதம் பிரம்மிக்க வைக்கிறது. அழகான காஷ்மீர் என்பதைத் தாண்டி ரத்தக்கறையுடன் துப்பாக்கி சத்தத்திற்கு நடுவே காஷ்மீர் நம் கண்களுக்கு வேறு மாதிரி தெரியும்

    பேசப் படாத காஷ்மீரின் துயரப் பக்கங்கள்

    பேசப் படாத காஷ்மீரின் துயரப் பக்கங்கள்

    இயக்குநர் விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி இயக்கத்தில் வெளியாகியிருக்கும் இந்த சினிமா அக்னியாய் பல இடங்களில் எரிந்து கொண்டு இருக்கிறது . இந்திய அளவில் இந்த படம் மிகவும் அதிகம் விமர்சனத்துக்குள்ளாகியுள்ள படமாக உள்ளது. பேசப் படாத காஷ்மீரின் மற்றுமொரு துயர பக்கத்தை தி காஷ்மீர் ஃபைல்ஸ் படம் அழுத்தமாக பல காட்சிகளில் நம் கண் முன்னே கொண்டு வருகிறது என்கிற கருத்து எழுந்துள்ளது.

    மிகச் சரியாக புரிந்து கொள்ள வேண்டும்

    மிகச் சரியாக புரிந்து கொள்ள வேண்டும்

    காஷ்மீரில் ஒரு கையில் பண்டிட்கள் மத நூலையும், இஸ்லாமியர்கள் மறுகையில் துப்பாக்கியினையும் ஏந்தி நின்றவர்கள் என்று சொல்வதோடு யார் பயங்கரவாதிகள் என்று நடை, உடை, செயல் மூலம் பலவற்றை இயக்குனர் பதிய வைக்க முயன்றுள்ளார். ஆனால் ஆள்மனதில் இவர்களை மிகச் சரியாக புரிந்து கொண்டால் மதம் வேறு, பயங்கரவாதம் வேறு என நாம் புரிந்து கொள்ள முடியும். இந்த படத்தில் இருக்கும் முரண்பாடும் இதுவே. துப்பாக்கி ஏந்தியவர்களை முஸ்லீம்கள் எனப் பொதுவாக புரிந்து கொள்ளும் ஆபத்தை இந்த காஷ்மீர் ஃபைல்ஸ் காட்சிகள் மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக விமர்சனம் எழுந்துள்ளது.

    பெண்கள் சிறுநீர் கழிக்க படும் பாடு

    பெண்கள் சிறுநீர் கழிக்க படும் பாடு

    காஷ்மீரில் இண்டர்நெட் இல்லை.' என பதிவு செய்கிறது அப்துலின் கதாபாத்திரம். அது மட்டும் அல்லாமல் அங்கு கொல்லப்பட்ட 19 பத்திரிகையாளர்கள் குறித்தும் பதிவு செய்கிறது ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்.' ப்ரோபெஸ்ஸர் ராதிகா கதாபாத்திரம் இந்த படத்தில் மிக மிக முக்கியமான ஒரு ரோல் ஆகும். பல்லவி ஜோஷி அவரது கதாபாத்திரத்தை மிகவும் நேர்த்தியாக செய்து உள்ளார். ஓடிக்கொண்டு இருக்கும் ஒரு லாரியில் பெண்கள் சிறுநீர் கழிக்க முடியாமல், அந்த வண்டி எங்கும் நிற்காமல் வேகமாக போய் கொண்டே இருக்கிறது. அந்த காட்சியின் வேதனையுடன் இன்டெர்வல் பிளாக் படத்தில் மிகவும் அழுத்தமான ஒரு மனநிலையை ஏற்படுத்தி விடுகிறது.

    ஆர்டிகிள் 370 பலகையை சுமந்தவாறு வரும் காட்சி

    ஆர்டிகிள் 370 பலகையை சுமந்தவாறு வரும் காட்சி

    இந்த எமோஷனலான படத்தை பார்த்து விட்டு விவாதங்களை முன்வைக்க வேண்டியது பார்வையார்களின் பொறுப்பு. இந்த படத்தை பார்க்கும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக புரிந்து கொள்ள முடியும் .படத்தின் திரைக்கதை மூன்று காலக்கட்டங்களாக பயணிக்கிறது. அனுபம் கேர் ஆர்டிகிள் 370'யை நீக்கச் சொல்லி போராடுகிறார். அதை தொடந்து கிட்டத்தட்ட 6000 கடிதங்களை இந்திய அரசாங்கத்திற்கு அவர் எழுதியதாகச் சொல்கிறார். ஆர்டிகிள் 370 என்ற பலகையை சுமந்தவாறு அவர் நிற்கும் காட்சி வசனங்கள் இல்லாமல் அரசை கண்டிக்கும். ஆர்டிகிள் 370 ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து குறித்தானது.

    வரலாற்று உண்மையை பிரதிபலிக்கிறது

    வரலாற்று உண்மையை பிரதிபலிக்கிறது

    1949'ல் வழங்கப்பட்ட அந்த சிறப்பு அந்தஸ்து தற்போது நீக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் இப்போது ரீலீஸ் ஆகி உள்ளது. பல இடங்களில் எந்த தடையும் இல்லாமல் ரீலீஸ் ஆகி உள்ளது என்பதற்கு பி.ஜே. பி ஆதரவு தான் காரணம் என்று பலர் சொன்னாலும் படத்தை படமாக மட்டும் பார்க்காமல் ஒரு மிக பெரிய வரலாற்று உண்மையை புரட்டி போடுகின்ற படமாக ஒவ்வொரு இந்தியனும் காஷ்மீர் பற்றி நிறைய தெரிந்து கொள்ள புரிந்து கொள்ள இந்த படம் மிகவும் உதவும் என்பது ஒரு தரப்பினர் வாதமாக உள்ளது. ஆனால் இந்தப் படத்தை பார்க்கும் ஒவ்வொருவருக்கும் பல்வேறு விதமாக கேள்விகள் வரலாம் என்பதே நிதர்சனமான உண்மை.

    அடிப்படை குணாதிசயங்களுடன் பார்க்க வேண்டும்

    அடிப்படை குணாதிசயங்களுடன் பார்க்க வேண்டும்

    உலக அரசியல், இந்திய அரசியல் என்று அறிவுப்பூர்வமான அரசியல் விவரங்களை தெரிந்து கொண்டுதான் இந்த படம் பார்க்க வேண்டும் என்ற அவசியமில்லை. சாதாரணமான மன நிலையில் பார்த்தாலே போதும். படம் குறித்து இருவேறு கருத்துகள் உள்ளது. அவை அரசியல் சம்பந்தப்பட்டவை என்பதால் அதுகுறித்து எது சரி, தவறு என்கிற விவாதங்கள், கருத்துகளை நாம் வைக்க முடியாது என்பதால் வாசகர்கள் படத்தைப்பார்த்து முடிவு செய்வதே சரி.

    குழந்தைகள் முன் எடுக்க பட்ட அந்த காட்சி

    குழந்தைகள் முன் எடுக்க பட்ட அந்த காட்சி

    நிலஆக்கிரமிப்பு, இன வெறி தாக்குதல் என வந்துவிட்டால் எந்த நாட்டு அரசாங்கத்திற்கும் அங்கிருப்பவர்கள் எந்த மதத்தை சார்ந்தவர்கள் என்பது முக்கியமே அல்ல. அதற்க்கு சிறந்த எடுத்து காட்டு ஆப்கான் போர்,சமீபத்தில் நடந்து வரும் உக்ரைன் பிரச்சனை என்று அடுக்கி கொண்டே போகலாம். மனித உயிர்கள் என்பது வெறும் நம்பர் தான். தி காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தில் துப்பாக்கியின் சத்தமும், குழந்தைகள் முன் பெற்றோரை கொடூரமாக கொள்ளும் காட்சிகளும் நம் மனதை பதபதைக்க செய்யும்.

    Convert, Leave or die

    Convert, Leave or die

    மதம், மதநம்பிக்கை , மதப்பயங்கரவாதம், இனப்படுகொலை,மக்கள் வெளியேற்றம், என்று தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் 11 மார்ச் 2022 அன்று வெளியான இந்தி மொழி திரைப்படமாகும். இத்திரைப்படத்தின் கதையை எழுதி, இயக்கிய விவேக் அக்னிஹோத்திரி மிக முக்கியமாக , அழுத்தமாக சொல்லிய விஷயம் - Convert, Leave or die என்ற முழக்கம் இஸ்லாமியர்கள் பண்டிட்களுக்கு எதிராக வைக்கப்பட்டது ஆகும் .

    காஷ்மீரில் இருந்து வெளியேற மறுக்கும் பண்டிட்கள் கொலை செய்யப்படுகின்றனர். இந்த வரலாற்று சம்பவங்களை நண்பர்களுடன் விவாதம் செய்து, பல புத்தகங்களை படித்து புரட்டி போட இந்த படம் ஒரு பெஸ்ட் எக்ஸாம்பிள். குடும்பத்துடன் கண்டிப்பாக்க பார்க்க முடியாது . வயது வரம்பு மிக முக்கியம் . ஆனால் காஷ்மீர் ஃபைல்ஸ் பற்றி குறிப்பாக எதிர்கால இந்திய குழந்தைகள் ஒரு நாள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும்.

    English summary
    "The Kashmir Files" is a 2022 Indian Hindi-language film which tells more about the history of freedom and fight between Pandits and muslims, The movie is written and directed by Vivek Agnihotri. Produced by Zee Studios, the film is based on the exodus of Kashmiri Pandits during the Kashmir Insurgency. It stars Anupam Kher, Darshan Kumar, Mithun Chakraborty and Pallavi Joshi.multiple talks going around for this movie scenes in many states and also world wide.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X