The Kerala Story Movie Review: உண்மைச் சம்பவங்களா.. உருட்டுகளா? தி கேரளா ஸ்டோரி பட விமர்சனம்!

Rating:
1.0/5

நடிகர்கள்: அதா சர்மா, சித்தி இத்னானி, தேவதர்ஷினி

இசை: விரேஷ் ஸ்ரீவல்சா

இயக்கம்: சுதிப்தோ சென்

நீளம்: 2 மணி நேரம் 18 நிமிடங்கள்

சென்னை: இயக்குநர் சுதிப்தோ சென் இயக்கத்தில் அதா ஷர்மா, சித்தி இத்னானி, சோனியா பலானி, தேவதர்ஷினி உள்ளிட்ட பலர் நடிப்பில் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் வெளியாகி உள்ளது.

முஸ்லீம் பெண்களுடன் கூட நட்பாக பழகக் கூடாது என்கிற விஷ விதையை விதைக்கும் படமாகவே தி கேரளா ஸ்டோரி உருவாக்கப்பட்டுள்ள நிலையில், தான் நாடு முழுவதும் இந்த படத்துக்கு கடும் எதிர்ப்புகள் வெடித்து வருகின்றன.

The Kerala Story Movie Review in Tamil

தி காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தைத் தொடர்ந்து தி கேரளா ஸ்டோரி படத்துக்கும் பாஜகவினர் பகிரங்க ஆதரவை தெரிவித்து வருகின்றனர். படமாக தி கேரளா ஸ்டோரி எப்படி இருக்கு என்கிற முழுமையான விமர்சனத்தை இங்கே காணலாம் வாங்க..

தி கேரளா ஸ்டோரி கதை: ஐநாவின் சிறையில் பாத்திமா எனும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதியாக ஹீரோயின் அதா சர்மா விசாரிக்கப்படுகிறார். காதலித்து திருமணம் செய்துக் கொண்டு கர்ப்பம் ஆக்கிய கணவன் தன்னை சிரியாவுக்கு அழைத்து வந்து ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதியாக மாற்றி விட்டான் என்றும் தன்னை மூளைச்சலவை செய்து மதமாற்றம் செய்தனர் என்றும் கூறுகின்றனர்.

ஷாலினி உன்னிகிருஷ்ணன் என தனது பெயரை அந்த அதிகாரிகளிடம் அதா சர்மா சொல்ல, அப்படியொரு பெண்ணே கிடையாது. உனக்கான அடையாளங்கள் முழுமையாக அழிக்கப்பட்டு விட்டது என அந்த அதிகாரிகள் அந்த பெண்ணிடம் விசாரணையை ஆரம்பிக்க, ஷாலினி உன்னிகிருஷ்ணன் எப்படி பாத்திமாவாக மாறினார் என்கிற கதையையும் தனது இஸ்லாமிய தோழி தன்னையும் தனது இந்து மற்றும் கிறிஸ்துவ தோழிகளின் வாழ்க்கையை எப்படி சீரழித்தார் என சொல்வதே இந்த தி கேரளா ஸ்டோரி படத்தின் கதை.

The Kerala Story Movie Review in Tamil

படம் எப்படி இருக்கு? தேவதர்ஷினியின் மகளாக கேரளாவின் திருவனந்தபுரத்தில் வசிக்கும் பெண்ணாக பாலிவுட் நடிகை அதா சர்மா நடித்துள்ளார். நர்சிங் படிப்புக்காக காசர்கோடில் உள்ள ஒரு கல்லூரிக்கு செல்லும் அதா சர்மா அங்கேயே ஹாஸ்டலில் தங்கிப் படிக்கிறார்.

அதா சர்மாவின் அறையில் வெந்து தணிந்தது காடு படத்தின் ஹீரோயின் சித்தி இத்னானி கீதாஞ்சலி எனும் கதாபாத்திரத்திலும் யோகிதா பிஹானி நிம்மா மேத்யூஸ் எனும் கிறிஸ்துவராகவும் இந்த மூவரையும் மதமாற்றம் செய்ய அதே அறையில் இவர்களுடன் கல்லூரி தோழியாக ஆசிபா எனும் கதாபாத்திரத்தில் சோனியா பிலானியும் நடித்துள்ளார்.

கல்லூரியின் முதல் நாளில் நடக்கும் மீட்டிங்கிலேயே இவர்கள் மூவரையும் போட்டோ எடுத்து தீவிரவாதிகளாக மாற்றும் முயற்சிக்கான வேலைகள் ஆரம்பிக்கிறது என்பதை காட்டி விடுகின்றனர்.

தனது சொந்தக்காரர்களான இளைஞர்கள் இருவரை மருத்துவம் படித்து வருகின்றனர் என இந்த மூவருக்கும் அறிமுகப்படுத்தும் ஆசிபா அவர்களுடன் நட்பாக பழக வைத்து காதலிக்க வைக்கிறார்.

The Kerala Story Movie Review in Tamil

மேலும், ஒரு சம்பவத்தில் தோழி ஒருவருக்கு நடக்கும் பாலியல் தொல்லையை பக்காவாக திட்டமிட்டு பர்தா அணிந்தால் இந்த பிரச்சனையே வராது என கொஞ்சம் கொஞ்சமாக பிரைன் வாஷ் செய்யும் ஆசிபா இஸ்லாத்தை பற்றியும் அதன் பெருமைகளை பற்றியும் அந்த மூன்று தோழிகளுக்கும் எடுத்துச் சொல்ல சொல்ல அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக மனம் மாறுகின்றனர்.

காதல் மோகத்தால் ஷாலினி உன்னிகிருஷ்ணனாக இருந்த அதா சர்மா பர்தாவை அணிந்துக் கொண்டு பாத்திமாவாக மாறுகிறார். வீட்டை விட்டு வெளியேறுகிறார். காதலனுடன் சிரியாவுக்குச் செல்லும் அவர் அங்கே பல பெண்கள், குழந்தைகள் என பலரும் கடத்தி வரப்பட்டு தீவிரவாதிகளாக மாற்றப்படுவதையும், தப்பிக்க நினைப்பவர்கள் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்படுவதையும் பார்த்து ஷாக் ஆகிறார்.

எப்படியாவது இருந்து இந்த நரகத்தில் இருந்து வெளியேற வேண்டும் என தப்பிக்கும் முயற்சியில் ஈடுபடும் பாத்திமா ஐநாவின் சிறைக்கைதியாக அகப்படுகிறார்.

The Kerala Story Movie Review in Tamil

கடைசியில் அவரது அம்மா தேவதர்ஷினியிடம் போனில் பேசும் போது தான் அவர் ஷாலினி எங்கம்மா இருக்க என அழுது புலம்ப இவரது அடையாளம் தெரிகிறது. அதன் பின்னர் கடைசியாக இவரது கையில் இருக்கும் அந்த பர்தாவை ஒரு சிறுமி எடுத்து தீயிட்டுக் கொளுத்தும் காட்சிகளுடன் உண்மையாக இதே போல பாதிக்கப்பட்ட தாக கூறப்படும் கிதாஞ்சலி, நிம்மா மேத்யூஸ் போன்றவர்கள் தங்களுக்கு நடந்த கொடுமைகளை சொல்லிவிட்டு இனிமேல் கேரளாவில் இருந்து ஒரு பெண் கூட பாதிக்கக் கூடாது என படத்தை முடிக்கின்றனர்.

பிளஸ்: நடிகைகள் அதா சர்மா மற்றும் சித்தி இத்னானி இந்துவாகவும் அதன் பின்னர் முஸ்லீமாக மாறிய பின்னர் எப்படி மாறுகின்றனர் என்கிற டிரான்ஃபர்மேஷன் நடிப்பு படத்தின் பலமாக பார்க்கப்படுகிறது. தீவிரவாதிகள் பெண்களுக்கு கொடுக்கும் தொல்லைகளை வெட்ட வெளிச்சம் போட்டுக் காட்டியிருப்பது உள்ளிட்டவை பிளஸ்.

The Kerala Story Movie Review in Tamil

மைனஸ்: இந்தியாவில் இந்து, முஸ்லீம், கிறிஸ்துவர்கள் மற்றும் மேலும், பல மதங்களும் அந்த மதங்களை சேர்ந்த மனிதர்களும் ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர். அதிலும், கடவுளின் சொர்க்கம் என அழைக்கப்படும் கேரளாவில் இந்துக்களும் இஸ்லாமியர்களும் சகோதரர்களாக பழகி வருகின்றனர்.

இந்நிலையில், ஒரு முஸ்லீம் பெண்ணை பார்த்தாலும் இவர் நம்மை கன்வெர்ட் செய்து விடுவார். இவர் தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்தவராகத்தான் இருப்பார் என்கிற விஷ உணர்வை விதைக்கவே இப்படியொரு படத்தை இயக்குநர் சுதிப்தோ சென் இயக்கி உள்ளது காட்சிக்கு காட்சி வசனத்துக்கு வசனம் இடம்பெற்ற நிலையிலேயே படமாக இல்லாமல் இது ஒரு இஸ்லாம் மதத்துக்கு எதிரான பிரச்சாரமாக மாறி உள்ளது படத்தின் மிகப்பெரிய மைனஸ் ஆக மாறி உள்ளது.

அதிலும் படத்தின் அந்த கடைசி ஷாட்டில் அந்த ஆசிபா மீண்டும் அதே ஹாஸ்டலில் புதிதாக வரும் மாணவிகளுடன் பேசும் காட்சி அபத்தத்திலும் அபத்தமாக தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X