The Kerala Story Review: தி கேரளா ஸ்டோரி.. உண்மையை சொல்கிறதா? பிரிவினையை உண்டாக்குகிறதா?
சென்னை: இயக்குநர் சுதிப்தோ சென் இயக்கத்தில் அதா சர்மா, சித்தி இத்னானி உள்ளிட்ட பலர் நடிப்பில் இன்று கடும் எதிர்ப்புகளுக்கு இடையே வெளியாகி உள்ளது தி கேரளா ஸ்டோரி திரைப்படம்.
கேரளாவில் 32,000க்கும் அதிகமான இளம் பெண்களை இஸ்லாம் மதத்துக்கு மாற்றி அவர்களை தீவிரவாதிகளாகவும் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியும் துன்புறுத்துவதாக இந்த படத்தில் கூறப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கேரளா மற்றும் தமிழ்நாட்டில் இந்த படத்திற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பினாலும், தடை விதிக்கப்படவில்லை. குறைவான தியேட்டர்களிலேயே வெளியாகி உள்ள இந்த படத்தை பார்த்த நெட்டிசன்கள் அளித்துள்ள விமர்சனத்தை இங்கே காணலாம்!

தி கேரளா ஸ்டோரி வெளியானது: அல்லா தான் உலகத்திலேயே உயர்ந்த கடவுள், ஹிஜாப் அணிந்து கொண்டால் பலாத்காரம் செய்ய மாட்டார்கள் என கல்லூரி ஹாஸ்டலில் இந்து மாணவிகளையும் கிறிஸ்துவ மாணவிகளையும் இஸ்லாமிய மாணவி ஒருவர் மனதை மாற்றி மதம் மாற்றி இஸ்லாமிய இளைஞர்களை காதலிக்க வைத்து அவர்களை திருமணம் செய்துக் கொண்டு சிரியாவுக்கு அழைத்துச் சென்று ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளாகவும் செக்ஸ் வொர்க்கர்களாகவும் மாற்றுகின்றனர் என்கிற கதையை தி கேரளா ஸ்டோரி படமாக இயக்குநர் சுதிப்தோ சென் உருவாக்கி உள்ளார்.
கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் மே 5ம் தேதி நாடு முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. சசிகுமாரின் அயோத்தி போன்ற படஙக்ள் மத நல்லிணக்கத்தை உருவாக்கி பாராட்டுக்களை அள்ளிய நிலையில், தி கேரளா ஸ்டோரி படம் பிரிவினைவாதத்தை உருவாக்கும் நோக்கிலேயே உருவாக்கப்பட்டுள்ளதாக இஸ்லாமியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
அதா சர்மா அசத்தல்: தி கேரளா ஸ்டோரி திரைப்படம் சிறப்பாக உள்ளது. ஷாலினியாகவும் மதம் மாறிய பின்னர் பாத்திமாகவும் நடிகை அதா சர்மா தனது சிறப்பான நடிப்பால் அசத்தி உள்ளார். இந்த படத்துக்கு 3 ரேட்டிங் என இந்த நெட்டிசன் தனது விமர்சனத்தை முன் வைத்துள்ளார்.

ரொம்ப கொடுமையா இருக்கு: இந்தியா மட்டுமின்றி உலகமே கேரளாவில் நடக்கும் இந்த பயங்கரவாதம் பற்றி அறிந்து கொள்ள வேண்டும். மத மாற்றம் செய்து பெண்களை காதல் என்கிற பெயரில் மோசம் செய்வது நடந்துக் கொண்டு தான் இருக்கிறது. இந்த படம் என்னை ரொம்பவே பாதித்துள்ளது. கேரள பெண்களுக்கு இப்படியெல்லாம் கொடுமை நடக்கிறதா? ரொம்பவே ஷாக்காக உள்ளது என கேரளா ஸ்டோரி படத்தை இந்த பாலிவுட் ரசிகரும் பாரட்டி உள்ளார்.

பிரிவினை வாதத்தை திணிக்கும் படம்: தி கேரளா ஸ்டோரி படத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிரான கருத்துக்களை திணிப்பதும் இந்தியாவில் இஸ்லாமியர்கள் நிம்மதியாக வாழக் கூடாது என்பதை வலியுறுத்தும் விதமாகவே இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. பணத்துக்காக இந்த ஜோக்கர் நடிகை என்ன வேணா செய்வார் என நடிகை அதா சர்மாவையும் தி கேரளா ஸ்டோரியையும் இந்த நெட்டிசன் கழுவி ஊற்றி உள்ளார்.

வெறுப்பை மட்டுமே திணிக்கிறது: "நம்ம எந்த மதமா வேணா இருக்கலாம் எந்த மதத்துல இருக்க தப்பையும் அந்த மதபோதகர்கள் செய்யும் தவற கூட படத்துல சொல்லலாம் அனால் உண்மை கதை என்று சொல்லி உண்மைக்கு புறம்பான படமாக இருக்கும் #TheKeralaStory படம் ஒரு மதத்தின் மீது வெறுப்பை மட்டுமே திணிக்கிறது" இந்த படம் என இந்த ரசிகர் கடுமையாக விமர்சித்துள்ளார்.



Click it and Unblock the Notifications











