twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    The Lion King Review: "ஹகூனாமட்டாரா".. சீறும் சிம்பா.. கலாய்க்கும் பும்பா.. தி லயன் கிங் விமர்சனம்!

    ஒரு சிங்கக்குட்டியின் வாழ்க்கை வழியே நம்மை ஒரு காட்டுக்கு டிரிப் கூட்டிச்செல்கிறது தி லயன் கிங்.

    |

    Rating:
    4.0/5

    சென்னை: சூழ்ச்சியால் வீழ்த்தப்படும் ஒரு சிங்கக் குட்டி, வளர்ந்து பெரியவனாகி சிம்மாசனம் ஏறும் கதையே தி லயன் கிங்.

    கார்ட்டூன் வெர்ஷனில் தி லயன் கிங் படம் பார்த்தவர்களுக்கு இந்த கதை ஒன்றும் புதிதல்ல. இன்னும் புரியும்படி சொல்வதென்றால், பாகுபலி கதையை லைட்டாக பட்டி, டிங்கரிங் பார்த்து காட்டுக்குள் ஓடவிட்டால், அதுவே தி லயன் கிங்கின் ஸ்டோரி.

    The Lion King review: Its Tamil version is more interesting than anyother

    உலகின் ஏதோ ஒரு பகுதியில் இருக்கும் ஒரு பெரிய காடு. அந்த காட்டின் அரசன் முஃபாசா (அப்பா சிங்கம்). சூரியனின் ஒளிபடும் இடம் அனைத்தும் முஃபாசாவின் ராஜ்யத்துக்கு உட்பட்டவை. அப்பாவின் பாசமிகு மகன் சிம்பா (குட்டிச்சிங்கம்). முஃபாசாவிற்கு பிறகு அந்தக் காட்டை ஆளப்போகும் இளவரசன். அத்தை மகள் நாலாவுடன் (பெண் சிங்கம்) ஊர் சுற்றி... ஸாரி காட்டைச் சுற்றி டூயட் பாடி திரிகிறான் சிம்பா.

    முஃபாசாவின் அரியணை மீது அதன் தம்பி ஸ்காருக்கு (சித்தப்பா சிங்கம்) பேராசை. உடல் வலிமையற்ற ஸ்கார் பெரிய தந்திரக்காரன். சூழ்ச்சி செய்து அரியணை ஏற திட்டமிட்டுக் கொண்டிருக்கிறான். ஒருநாள் ஸ்காரின் திட்டம் நிறைவேறுகிறது. கழுதைபுலிகளுடன் சேர்ந்து, சதி செய்து முஃபாசாவை கொலை செய்து, சிம்பாவை காட்டை விட்டே ஓடவிட்டு, ஆட்சியை கைப்பற்றுகிறான். அருமையான காடு, சுடுகாடாக மாறுகிறது.

    உயிர் பிழைக்க தப்பி ஓடும் சிம்பா, வேறு ஒரு காட்டுக்கு போகிறான். தான் ஒரு சிங்கம் என்பதையே மறந்து, பும்பா (காட்டுப்பன்றி) மற்றும் டிபுனுடன் (தேவாங்கு) சேர்ந்து வளர்கிறான். உருவத்தில் தனது தந்தை போலவே காட்சியளிக்கும் சிம்பா, ஸ்காரை வெற்றி பெற்று எப்படி ஆட்சி அமைக்கிறான் என்பதே சுவாரஸ்ய வசனங்களுடம் பயணிக்கும் மீதிக்கதை.

    வாவ்... இப்படி ஒரு உயிரோட்டமான படத்தை பார்த்து எத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டது. கார்ட்டூன் வெர்ஷனில் 3 பாகங்களாக வெளிவந்த தி லயன் கிங்கின், சிங்கிள் வெர்ஷன் இது. தொழில்நுட்பத்தில் ஹாலிவுட் எந்த அளவிற்கு வளர்ந்துள்ளது என்பதற்கு தி லயன் கிங் ஒரு மிகப்பெரிய சான்று. எது கிராபிக்ஸ், எது நிஜம் என பிரித்து பார்க்க முடியாது அளவுக்கு, அத்தனை உண்மையாக உள்ளன காட்சிகள்.

    The Lion King review: Its Tamil version is more interesting than anyother

    ஆங்கிலப் பதிப்பைவிட தமிழ் பதிப்பு தான் மிக சுவாரஸ்யம். அதற்கு முக்கிய காரணம் நம் டப்பிங் கலைஞர்கள். ஹாலிவுட்காரர்கள் என்ன தான் தொழில்நுட்ப ரீதியாக வளர்ந்திருந்தாலும், எந்த நாட்டு படத்தையும் நம் மண்ணின் தன்மைக்கு ஏற்ப, சுவையாக மாற்றக்கூடிய வல்லவர்கள் நம் டப்பர்கள்.

    சாசு எனும் மரங்கொத்தி பறவைக்கு குரல் கொடுத்திருக்கும் மனோபாலா, சின்ன சின்ன டைமிங் டயலாக்குளால் மனதை கொத்துகிறார். காட்டுப்பன்றி பும்பாவுக்கு குரல் கொடுத்திருக்கும் ரோபோ சங்கரும், டிபூன் எனும் தேவாங்குக்கு குரல் கொடுத்திருக்கும் சிங்கம்புலியும் காட்டுக்குள் செய்யும் அட்ராசிட்டி, செம வெரைட்டி. அவங்க நடிச்ச படங்களில்கூட இந்த அளவுக்கு சுவாரஸ்யமா வசனம் பேசியிருப்பாங்களாங்குறது டவுட் தான்.

    "இந்த தண்ணியில்லா காட்டுக்கா இவ்வளவு பெரிய சண்டை", என டிபூன் கேட்கும் போது, நம்ம மைண்ட் வாய்சை கேட்ச் செய்த மாதிரி தியேட்டரில் அப்படி ஒரு சிரிப்பொலி. வில்லன் ஸ்காருக்கு அரவிந்த்சாமியின் குரல் அவ்வளவு கச்சிதம். கொஞ்சம் கூட பிசிர் இல்லாமல் செமையாக செட்டாகி இருக்கு. சிம்பாவுக்கு நம்ம சித்தார்த் குரல் அதேபோல தான். என்ன குட்டி சிம்பா குரல் கொஞ்சம் அதிகமாகவே டாமினேட் பண்ணிட்டதால, சித்தார்த் குரல் அவ்வளவா எடுபட. சில காட்சிகளில் பாய்ஸ் படத்துல ஜெனிலியாவிடம் சித்தார்த் பேசுவது போன்ற உணர்வே ஏற்படுகிறது.

    தமிழ் வெர்ஷனின் மிகப்பெரிய பலமே டப்பிங் தான். ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் தகுந்த மாதிரி, ஆட்களை பிடிச்சு போட்டிருப்பதற்கு மில்லியன் லைக்ஸ். சின்ன பசங்க மட்டுமில்லாம, பெரியவங்களும் சேர்ந்து என்ஜாய் பண்ணும் விதமாக தி லயன் கிங்கை மாத்தியிருக்காங்க.

    தமிழ் படங்களை போல அடிக்கடி பாடல்களும் ஒலிக்குது. ஆனால் அவையும் சுவாரஸ்ய சுகமே. "டேய் மறுபடியும் பாட்டு போடாதீங்க. எழுந்து போய்ட போராங்கன்னு", சிங்கம்புலி கவுண்டர் தரும் போது தியேட்டரே சிரிப்பலையில் மூழ்கிடுது.

    தமிழில் இப்படி ஒரு நேரடி படம் வருவதற்கு இன்னும் எத்தனை வருஷம் பிடிக்கும் என்பது தெரியவில்லை. பசுமை நிறைந்த காடு, தகிக்கும் பாலைவனம், பொட்டல்காடான மலைமுகடு, கூட்டம் கூட்டமாக திரியும் யானைகள், ஒட்டகச்சிவிங்கிகள், குரங்கு, மான், என ஒரு பெரிய டிரிப்புக்கே நம்மை அழைத்து சென்றிருக்கிறார்கள். தி லயன் கிங் நிச்சயமாக ஒரு அபூர்வமான அனுபவம். எவ்வளோ செலவு செய்து மொக்கப் படத்துக்கு எல்லாம் போறோம். இந்த படத்தை பார்க்கலைன்னா எப்படி?

    ஏ.. மிஸ் பண்ணிடாதீங்க... அப்புறம் பீல் பண்ணுவீங்க.

    பி.கு: தொழில்நுட்பக் கலைஞர்களைப் பத்தி இங்க அதிகம் பேச வேண்டிய தேவையில்லை. காரணம் வழக்கம் போல், ஹாலிவுட் தரத்தில் படத்தைத் தந்திருக்கிறார்கள்.

    English summary
    The tamil version of Disney's The Lion king has a lot of interesting features for kids and parents too.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X