The Naked Director Review: ஆபாச பட உலகின் ஆரம்ப புள்ளியே இவர்தானாம்.. ஒவ்வொரு சீனும் விவகாரம் தான்!

Rating:
3.5/5

நடிகர்கள்: டகாயுகி யமடா, மிசாடோ மொரிடா

ஓடிடி: நெட்பிளிக்ஸ்

இயக்கம்: மஷாரு டகே

லாஸ் ஏஞ்சல்ஸ்: நெட்பிளிக்ஸ் நிறுவனம் தயாரிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியான தி நேக்கட் டைரக்டர் முதல் சீசன் உலகளவில் ஏகப்பட்ட ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

மாத இதழில் வெளியாகும் பெண்களின் ஆபாச போட்டோக்களை பார்த்து காமப்பசியை தீர்த்துக் கொண்ட ஜப்பானியர்களுக்கு 1980களில் முதன்முதலாக ஆபாச படங்கள் மூலம் பெரும் புரட்சியையே செய்தவர் இயக்குநர் டொரு முரானிஷி (Toru Muranishi) அவரது பயோபிக் படமாகவே இந்த வெப்சீரிஸை உருவாக்கி உள்ளனர்.

இயக்குநர் மஷாரு டகே தலைமையில் உருவாக்கப்பட்ட இந்த வெப்சீரிஸை எஜி உச்சிடா, ஹயாடோ கவாய் உள்ளிட்ட இயக்குநர்களும் இணைந்து இயக்கி உள்ளனர். 8 எபிசோடுகள் கொண்ட இந்த வெப்சீரிஸில் ஏகப்பட்ட நிர்வாணக் காட்சிகளும் உடலுறவு காட்சிகளும் கொட்டிக்கிடக்கின்றன.

 The Naked Director Season 1 Web Series Review in Tamil

தி நேக்கட் இயக்குநர் கதை: இப்படியெல்லாம் வெப்சீரிஸ் எடுக்க முடியுமா? என்கிற அளவுக்கு பிரம்மிப்பை கொடுத்த வெப்சீரிஸ் தான் நெட்பிளிக்ஸில் வெளியான தி நேக்கட் இயக்குநர் வெப்சீரிஸ். முதல் மற்றும் இரண்டு சீசன்களாக இந்த வெப்சீரிஸ் வெளியாகி உள்ள நிலையில், அதன் முதல் சீசன் விமர்சனத்தை இங்கே பார்க்கலாம்.

ஜப்பானில் சாதாரண சேல்ஸ் ரெப்பாக வேலை செய்து வந்த டொரு முரானிஷி எப்படி ஆபாச படங்களை இயக்கும் முடிவுக்கு வருகிறார் என்றும் மேலும், முதன்முறையாக இயக்குநர் ஒருவரே ஆபாச பட நடிகைகளுடன் முழு நிர்வாணமாக ஆடைகளை கழட்டிப் போட்டு ஹீரோவாகவே நடித்தார் என்கிற கதையை செம சுவாரஸ்யமாக ஏகப்பட்ட ஹைப் விஷயங்களையும் அந்த இயக்குநர் வாழ்வில் பட்ட கஷ்ட நஷ்டங்களையும் சிறை சென்ற அனுபவங்களையும் வைத்து 8 எபிசோடுகள் கொண்ட தரமான படைப்பாக கொடுத்து ரசிகர்களை பார்க்க வைத்துள்ளனர்.

 The Naked Director Season 1 Web Series Review in Tamil

எக்கச்சக்க பிட்டு: வெப்சீரிஸே எப்படி பிட்டு படம் உலகளவில் உருவானது என்றும் அதற்கு முன்னோடியாக ஜப்பான் நாட்டைச் சேர்ந்த இயக்குநர் இருந்தார் என்பது தான் என்பதால், இயக்குநர் ஆபாசக் காட்சிகளையும் நிர்வாணக் காட்சிகளையும் கொஞ்சம் கூட தயங்காமல் ஏகத்துக்கும் வைத்து இளம் ரசிகர்களை ஒட்டுமொத்தமாக கவர்ந்துள்ளார்.

அதிலும் ஹீரோவாக நடித்துள்ள டகாயுகி யமடா இந்த பூனையும் பால் குடிக்குமா என்கிற ரேஞ்சுக்கு முகத்தை வைத்துக் கொண்டு பண்றதெல்லாம் யமகாதக வேலையாக இருக்கும். ஆபாச படம் தானே எடுக்கிறான் அவனுக்கு என்ன மரியாதை என்று இல்லாமல், அந்த இயக்குநருக்கு கீழ் வேலை பார்க்கும் மற்றும் அவருக்கு உதவியாக ஃபைனான்ஸ் செய்யும் நண்பர்களாக நடித்துள்ளவர்களும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ஸ்கோர் செய்கின்றனர்.

 The Naked Director Season 1 Web Series Review in Tamil

பலாத்காரத்தை குறைக்கிறோம்னு புருடா: மேலும், இந்த மாதிரியான படங்களை இயக்குவதன் மூலம் ஆண்களின் காம வக்கிர புத்தியை பிட்டு படம் பார்த்தே தணித்துக் கொள்ளலாம் என்றும் இதனால் பலாத்காரம் எல்லாம் குறையும் என்கிற ரேஞ்சுக்கு என்னமோ படத்தை ஆஸ்கர் விருதுக்கு அனுப்பவதற்கு எடுத்தது போல செம பில்டப் உடன் எடுத்து மிரட்டி உள்ளனர்.

ஆனால், பக்கா வணிக நோக்கத்துக்காகத் தான் ஆபாச பட உலகம் பூம் ஆனது என்றும் ஆபாச படத்தை இயக்கிய குற்றத்திற்காக இயக்குநரை கைது செய்தது. பின்னர், ஜப்பானில் நடந்த ஆட்சி மாற்றத்திற்கு பிறகு ஆபாச படங்களுக்கு கிடைத்த அனுமதி என அரசியல் ரீதியான கருத்துக்களையும் இந்த முதல் சீசன் முன் வைத்துள்ளது.

 The Naked Director Season 1 Web Series Review in Tamil

பார்க்கலாமா? வேண்டாமா?: பயோபிக் படத்திலும் கில்மா காட்சி இருக்குதான்னு தேடிப் பார்க்கும் ரசிகர்கள் ஆபாச பட உலகத்தையே உருவாக்கிய ஒரு இயக்குநரின் பயோபிக் படம் என்றால் சும்மா விடுவார்களா என்ன? கதை, திரைக்கதை, மேக்கிங் மற்றும் ஆபாச படங்கள் எடுக்கும் போது எப்படியெல்லாம் சீட் ஷாட் வைத்து எடுக்கின்றனர் என்கிற ஏகப்பட்ட விஷயங்களை கொஞ்சமும் போர் அடிக்காமல், நேர்த்தியாக காட்டியிருக்கும் இந்த வெப்சீரிஸை வீக்கெண்டில் தனியாக இருக்கும் போது தாராளமாக பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X