twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    காளியின் அவதரிப்பு… சூழ்ச்சியில் சிக்கும் தேன்மொழி: பேட்டைக்காளி 4 எபிசோட்கள் விமர்சனம்

    |

    சென்னை: வெற்றிமாறன் தயாரித்துள்ள பேட்டைக்காளி வெப் சீரிஸ், ஆஹா ஓடிடியில் வெள்ளிக்கிழமைதோறும் ஒவ்வொரு எபிசோடாக வெளியாகிறது.

    பேட்டைக்காளி வெப் சீரிஸின் முதல் 3 எபிசோட்கள் கடந்த வாரங்களில் வெளியான நிலையில், தற்போது நான்காவது எபிசோட் வெளியாகியுள்ளது.

    ஜல்லிக்கட்டை பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த வெப் சீரிஸ்க்கு ஓடிடி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

    பகைக்கு பலியான பாண்டி… பண்ணையாரை பழிவாங்க காத்திருக்கும் முத்தையா: பேட்டைக்காளி விமர்சனம் பகைக்கு பலியான பாண்டி… பண்ணையாரை பழிவாங்க காத்திருக்கும் முத்தையா: பேட்டைக்காளி விமர்சனம்

    வெற்றிமாறனின் பேட்டைக்காளி

    வெற்றிமாறனின் பேட்டைக்காளி

    வெற்றிமாறனின் 'கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனி' தயாரித்துள்ள 'பேட்டைக்காளி' வெப் சீரிஸ்ஸை ராஜ்குமார் இயக்கியுள்ளார். இந்த வெப் சீரிஸ் ஜல்லிக்கட்டை பின்னனியாகக் கொண்டு உருவாகியுள்ளது. வெள்ளிக்கிழமை தோறும் ஒவ்வொரு எபிசோடாக வெளியாகும் இந்த வெப் சீரிஸ் ஓடிடி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதுவரை 3 எபிசோட்கள் வெளியான நிலையில், தற்போது நான்காவது எபிசோடும் ரிலீஸாகியுள்ளது. கலையரசன், வேல ராமமூர்த்தி, கிஷோர், ஷீலா உள்ளிட்ட பலர் பேட்டைக்காளி வெப் சீரிஸில் நடித்துள்ளனர்.

    முந்தைய எபிசோட்களின் கதை சுருக்கம்

    முந்தைய எபிசோட்களின் கதை சுருக்கம்

    சிவகங்கை அடுத்த தாமரைக்குளம் - முல்லையூர் கிராமங்களை பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த வெப் சீரிஸ், ஜல்லிக்கட்டுப் போட்டிக்குள் காணப்படும் ஆதிக்க அரசியலை பேசுகிறது. தாமரை குளத்தைச் சேர்ந்த பண்ணையார் செல்வசேகரனான வேல ராமமூர்த்திக்கு, ஜல்லிக்கட்டில் பிடிபடாத அவரது காளை தான் முதல் கெளரவம். ஆனால், அவரது மாட்டைபிடித்து பண்ணையாரை அவமானப்படுத்துகிறார் முல்லையூரைச் சேர்ந்த பாண்டியாக வரும் கலையரசன். அதோடு பிடிபட்ட காளையும் இறந்துவிட கலையரசனை கொலை செய்யவும் திட்டமிடுகிறார் பண்ணையார்.

    அதிகாரத்தை பிடித்த வீர சேகரன்

    அதிகாரத்தை பிடித்த வீர சேகரன்

    தனது மகன் வீர சேகரனை பாண்டிக்கு எதிராக தூண்டி விடுகிறார் பண்ணையார். இருவரும் கல்லூரியில் ஒன்றாக படித்த நண்பர்களாக இருந்தாலும் வீர சேகரின் ஜாதிய திமிர், பாண்டியை கொலை செய்ய வைக்கிறது. மருமகன் பாண்டியை பண்ணையார் தான் கொலை செய்திருக்க வேண்டும் என அவரை பழிவாங்க துடிக்கிறார் முத்தையாவாக வரும் கிஷோர். கிடை மாடு போட்டு பிழைப்பு நடத்தி வரும் முத்தையா பண்ணையார் வேல ராமமூர்த்தியை கொலை செய்ய முயற்சிக்கும் இடத்தில், டிரைவர் மாயாண்டி பலியாகிறார். அப்போது பண்ணையாரின் பார்வையும் பறிபோகிறது. இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட அவரது மகன் வீர சேகரன் பண்ணையாரின் அதிகாரத்தை கைப்பற்றுகிறார்.

    மீனாட்சியின் சபதம்

    மீனாட்சியின் சபதம்

    சிறுவயது முதலே தன் வீட்டில் வளர்ந்த மீனாட்சியை பலவந்தமாக திருமணம் செய்கிறார் பண்ணையார். ஆனால், மீனாட்சியோ பண்ணையாரின் விசுவாசி மாயாண்டியை காதலித்ததுடன், அவரது குழந்தையையும் வயிற்றில் சுமக்கிறார். இது பண்ணையாருக்கு தெரிந்துவிட மீனாட்சியையும் அவரது வாரிசையும் அழிக்க துடியாய் துடிக்கிறார் பண்ணையார் வேல ராமமூர்த்தி. இன்னொரு பக்கம் ஜல்லிக்கட்டுக்கு காளை இல்லாமல் வீர சேகரன் தவித்துக் கொண்டிருக்க, கிஷோரும் அவரது ஊரைச் சேர்ந்தவர்களும் பண்ணையாரின் பெயரில் இறங்கும் மாடுகளை பிடித்தே ஆக வேண்டும் என வைராக்கியத்தில் பயிற்சி எடுத்து வருகின்றனர்.

    4வது சீசன் விமர்சனம்

    4வது சீசன் விமர்சனம்

    மூன்றாவது சீசன் முடிவடையும் போது கொலை செய்யப்பட்ட மாயாண்டியின் தங்கை தேன்மொழியான ஷீலா ராஜ்குமாரின் பாத்திரம் அறிமுகமானது. ஆற்றில் அடித்துவரப்படும் கன்றை எடுத்து வளர்க்கும் ஷீலா, அதை ஜல்லிக்கட்டுக்காக தயார் செய்கிறார். இறுதியாக அந்த காளையை ஜல்லிக்கட்டுப் போட்டியில் இறக்கி விட, அதனை பிடிக்க முடியாமல் வீரர்கள் தெறித்து ஓடுகின்றனர். தேன்மொழி வளர்க்கும் பேட்டைக்காளி காளையை சொந்தமாக்க பேரம் பேசுகிறார் வீர சேகரன். ஆனால், அவர்கள் முடியாது என மறுக்க, இப்போது காளையை அபகரிக்க சூழ்ச்சி செய்கிறார் வீர சேகரன். இதன் தொடர்ச்சி என்ன என்பதை அடுத்த வாரம் தான் பார்க்க முடியும்.

    வேகம் குறைந்தது

    வேகம் குறைந்தது

    பேட்டைக்காளி வெப் சீரிஸின் முதல் மூன்று எபிசோட்களின் திரைக்கதையும் மின்னல் வேகத்தில் நகர்ந்தன. ஆனால், 4வது எபிசோட் ரொம்பவே மந்தமாக நகர்கிறது. தேன்மொழிக்கும் பேட்டைக்காளிக்கும் இடையேயான உறவையே அதிகம் பார்க்க முடிகிறது. ஆனாலும், இறுதியில் இன்னொரு முக்கியமான கேரக்டரை அறிமுகம் செய்து ட்விஸ்ட் வைத்துள்ளது, அடுத்த எபிசோட் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்துள்ளது. அதேபோல், சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசையும் தொடர்ந்து ஒரேமாதிரியாக இருப்பது ரசிகர்களுக்கு கொஞ்சம் சலிப்பை ஏற்படுத்துகிறது.

    English summary
    The fourth episode of the Pettaikali web series was released yesterday on Aaha OTT. Kishore, Kalaiyarasan, Vela Ramamurthy, Sheela, and others starred Pettaikali web series Produced by Vetimaaran. Here's a review of the Pettaikali web series set in the backdrop of Jallikattu.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X