பண்ணையார் ஸ்கெட்ச்சில் தப்பிய காளி.. பார்த்திபனின் சூழ்ச்சியில் சரண்: பேட்டைக்காளி விமர்சனம்

சென்னை: வெற்றிமாறன் தயாரித்துள்ள பேட்டைக்காளி வெப் சீரிஸ், ஆஹா ஓடிடியில் வெள்ளிக்கிழமைதோறும் ஒவ்வொரு எபிசோடாக வெளியாகிறது.

பேட்டைக்காளி வெப் சீரிஸின் 5 எபிசோட்கள் கடந்த வாரங்களில் வெளியான நிலையில், இந்த வாரம் 6வது எபிசோட் வெளியாகியுள்ளது.

ஜல்லிக்கட்டு பின்னணியில் உருவாகியுள்ள பேட்டைக்காளி வெப் சீரிஸ் இந்த வாரம் சுவாரஸ்யமாக இருந்ததா இல்லையா என்பதை இப்போது பார்க்கலாம்.

வெற்றிமாறனின் பேட்டைக்காளி

வெற்றிமாறனின் பேட்டைக்காளி

வெற்றிமாறன் தனது 'கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனி' சார்பில் தயாரித்துள்ள 'பேட்டைக்காளி' வெப் சீரிஸ்ஸை ராஜ்குமார் இயக்கியுள்ளார். ஜல்லிக்கட்டை பின்னனியாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த வெப் சீரிஸ், வெள்ளிக்கிழமை தோறும் ஒவ்வொரு எபிசோடாக ஆஹா ஓடிடியில் வெளியாகிறது. இதுவரை 5 எபிசோட்கள் வெளியான நிலையில், இந்த வாரம் ஆறாவது எபிசோட் ரிலீஸாகியுள்ளது. கலையரசன், வேல ராமமூர்த்தி, கிஷோர், ஷீலா ஆகியோர் பேட்டைக்காளி வெப் சீரிஸில் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளனர்.

முந்தைய எபிசோட்கள் கதை சுருக்கம்

முந்தைய எபிசோட்கள் கதை சுருக்கம்

தாமரைக்குளம் - முல்லையூர் கிராமங்களில் நடக்கும் ஜல்லிக்கட்டுப் போட்டியை பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ளது பேட்டைக்காளி வெப் சீரிஸ். தாமரை குளத்தைச் சேர்ந்த பண்ணையார் செல்வசேகரனான வேல ராமமூர்த்திக்கு அவரது காளை தான் கெளரவம். ஆனால், ஜல்லிக்கட்டில் பண்ணையாரின் மாட்டை பிடித்து அவரது கொட்டத்தை அடக்குகிறான் முல்லையூரைச் சேர்ந்த பாண்டியாக வரும் கலையரசன். அதோடு பிடிபட்ட காளையும் இறந்துவிட தனது மகனை தூண்டிவிட்டு கலையரசனை கொலை செய்கிறார் பண்ணையார்.

சூழ்ச்சிகளில் சிக்கிய பண்ணையார்

சூழ்ச்சிகளில் சிக்கிய பண்ணையார்

மருமகன் பாண்டியை பண்ணையார் தான் கொலை செய்திருக்க வேண்டும் என அவரை பழிவாங்க துடிக்கிறார் முத்தையாவாக வரும் கிஷோர். கிடை மாடு போட்டு பிழைப்பு நடத்தி வரும் முத்தையா பண்ணையார் வேல ராமமூர்த்தியை கொலை செய்ய முயற்சிக்கும் போது, அவரது டிரைவர் மாயாண்டி பலியாகிறார். அப்போது வேல ராமமூர்த்தி தனது பார்வையை பறிகொடுக்க. அவரது மகன் வீரசேகரன் பண்ணையாருக்கான மொத்த அதிகாரத்தையும் கைப்பற்றுகிறார். அதேபோல், மாயாண்டியை காதலித்து வந்த மீனாட்சியை வேல ராமமூர்த்தி கட்டாயத் திருமணம் செய்துவிட அங்கேயும் சில பழிவாங்கும் படலங்கள் அரங்கேறுகின்றன.

ஸ்கெட்ச்சில் இருந்து தப்பிய காளி

ஸ்கெட்ச்சில் இருந்து தப்பிய காளி

இதனிடையே, மாயாண்டியின் தங்கை தேன்மொழியான ஷீலா ராஜ்குமாருக்கு கிடைக்கும் காளி என்ற காளை, ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் வீரர்களை பந்தாடுகிறது. அதனால் அந்த காளையை சொந்தமாக்க பல லட்சங்களுக்கு பேரம் பேசிப் பார்க்கிறார் பண்ணையாரின் மகன் வீர சேகரன். ஆனால், அது நடக்காமல் போக அடுத்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் வாடிவாசலில் பன்றியை புதைத்து வைத்து காளியின் ஆக்ரோஷத்தை கட்டுப்படுத்த சூழ்ச்சி செய்கிறார். பேட்டைக்காளியோ இன்னும் ஆக்ரோஷமாக ஆடி வீரர்களை தூக்கிப்போட்டு தெறிக்கவிடுகிறது. அதேநேரம் தேன்மொழி மீதான காதலால் காளியை அடக்க குறுக்கு வழியில் திட்டமிடுகிறான் பார்த்திபன்.

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்

தேன்மொழியின் துப்பட்டாவை திருடி அதனை காட்டி வாடிவாசலில் இருக்கும் காளியை அடக்குகிறான் பார்த்திபன். இதை யாருமே எதிர்பார்க்காத நிலையில், தேன்மொழியின் அண்ணனான ஜெயவேலின் நண்பர்கள் பார்த்திபனை கத்தியால் குத்திவிடுகின்றனர். ஏற்கனவே தாமரைக்குளம், முல்லையூர் மக்களிடையே தீராத பகை இருக்க, இப்போது அது இன்னும் அதிகரிக்கிறது. பண்ணையாரின் மகன் செய்த சூழ்ச்சியில் சிக்காத காளை, பார்த்திபனிடம் வீழ்ந்தது கண்டிப்பாக வில்லங்கமாகும் என்பது தெரிகிறது.

பேட்டைக்காளி மைனஸ்

பேட்டைக்காளி மைனஸ்

பேட்டைக்காளி வெப் சீரிஸின் முதல் மூன்று எபிசோட்களின் திரைக்கதை மின்னல் வேகத்தில் நகர்ந்தன. ஆனால், 4வது எபிசோடில் இருந்து கதையின் போக்கில் காதலும் வந்துவிட்டதால், திரைக்கதை பல இடங்களில் தடுமாறுகிறது. முக்கியமாக 'மேற்குதொடர்ச்சி மலை' படம் மூலம் நடிகராக அறிமுகமான ஆண்டனியின் பார்த்திபன் கேரக்டர் கதைக்குள் ஒன்றவே இல்லை. அவர் நடிக்கும் பல காட்சிகள் செயற்கைத்தனமாக உள்ளன. ஜல்லிக்கட்டு போட்டிகளை சுற்றியே கதை நகர்ந்தாலும், அதற்கான நியாயத்தை செய்ய இயக்குநர் தவறிவிட்டார். அடுத்த எபிசோட் தான் இறுதியாக இருக்கும் அல்லது இருக்க வேண்டும் என்ற எண்ணம் பார்வையாளர்களுக்கு வந்துவிட்டது. சதுரங்க காய்களின் சரிவு என்ற அடுத்த 7வது எபிசோட் எப்படி இருக்கும் என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X