The Rajasaab X Review: பிரபாஸ் படம் தாறுமாறா? ஓவர் தலைவலியா?.. தி ராஜாசாப் ட்விட்டர் விமர்சனம் இதோ!

சென்னை: இயக்குநர் மாருதி படம் நல்லா இல்லை என்றால் என் வீட்டுக்கு வந்து கேளுங்க என அட்ரஸ் எல்லாம் கொடுத்த நிலையில், பிரபாஸ் ரசிகர்கள் பெருந்திரளாக அவரது வீட்டை முற்றுகையிட்டு அவரை கண்டபடி வாழ்த்த காத்திருப்பதாக சோஷியல் மீடியாவில் ஒரே வஞ்சப்புகழஞ்சலியாக பதிவிட்டு வருகின்றனர்.

தி ராஜாசாப் படத்தின் டீசர் மற்றும் டிரைலர் வரும் போதே என்னடா பிரபாஸின் பொட்டென்ஷியலை இந்த இயக்குநர் டோட்டல் டேமேஜ் செய்து விட்டாரே என்று தான் ரசிகர்கள் நினைத்தனர். ஆதி புருஷ் படத்தைத் தொடர்ந்து பிரபாஸுக்கு ரொம்பவே வொர்ஸ்ட்டான படமாக தி ராஜாசாப் படம் வந்திருப்பதாக ட்விட்டரில் பலரும் கடுமையாக தி ராஜாசாப் படத்தை விமர்சித்து வருகின்றனர்.

The Rajasaab X Review in Tamil  Director Maruthi wastes Prabhas Potential
Photo Credit:

அதே சமயம் பிரபாஸ் ரசிகர்கள் படம் திகிலாகவும் ஜாலியாகவும் இந்த பொங்கலுக்கு ஏற்ற ஃபேமிலி எண்டர்டெயினர் என குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி என்கிற ரேஞ்சுக்கு பாசிட்டிவ் விமர்சனங்களையும் கொடுத்து வருகின்றனர்.

பிரபாஸையே மொக்கை பண்ணிட்டாங்க: ஸ்பிரிட் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் பிரபாஸை எப்படி காட்ட வேண்டும் என்பதற்கு சந்தீப் ரெட்டி வங்கா கிளாஸ் எடுத்திருப்பார். சமீபத்தில் அவருடன் பிரபாஸ் நடத்திய பேட்டியிலும் தனக்கு ரொம்பவே பிடித்த லுக் அதுதான் என்றார். பிரபாஸுக்கு வயதான லுக் மேக்கப்பை செட் ஆகாமல் போட்டு குவாலிட்டி இல்லாத சிஜி காட்சிகளை வைத்து ரொம்பவே பிரபாஸையும் தி ராஜாசாப் படத்தையும் டல் ஆக்கி விட்டார்கள் என கிறிஸ்டோபர் கனகராஜ் படத்தை ஸ்கிப் பண்ணிடுங்க என்றே விமர்சித்துள்ளார்.

சூப்பரான இன்ட்ரோ: ரஜினிகாந்தின் சந்திரமுகி படம் போல பக்கா கமர்ஷியலான காமெடி ஹாரர் படத்தை தான் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்நிலையில், படத்தில் பிரபாஸின் அறிமுக காட்சி மற்றும் ஓபனிங் சாங் ரொம்பவே கலர்ஃபுல்லாகவும் ரசிகர்களுக்கு ட்ரீட்டாகவும் இருந்ததாக இந்த நெட்டிசன் பதிவிட்டுள்ளார்.

குருவியை விட மோசம்: குருவி படத்தில் விஜய் ஒரு அபார்ட்மெண்டில் இருந்து ரயிலை நோக்கி பறந்து வரும் காட்சி அதிகளவில் ட்ரோல் செய்யப்பட்ட நிலையில், அதற்கு இணையாக ஒரு மாடியில் இருந்து ஹியூமன் பிரமிட் செய்து பானை உடைக்கும் இடத்தில் புகுந்து பிரபாஸ் கொடுக்கும் இன்ட்ரோ காட்சி ரொம்பவே வொர்ஸ்ட் என நெட்டிசன்கள் அந்த வீடியோவையும் ஷேர் செய்து ட்ரோல் செய்து வருகின்றனர்.

கிளைமேக்ஸ் பீக்: தி ராஜாசாப் திரைப்படம் முதல் பாதி சுமாராக சென்றாலும், இரண்டாம் பாதியில் இருந்து படம் சூடுபிடித்து கிளைமேக்ஸ் எல்லாம் பக்கா பீக் என இந்த ரசிகர் படத்துக்கு பாசிட்டிவ் விமர்சனத்தை கொடுத்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X