twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    The Warrior Twitter Review: கத்துக்கிட்ட மொத்த வித்தை இல்லை.. ஏற்கனவே காட்டிய வித்தைகள் தான்!

    |

    சென்னை: இயக்குநர் லிங்குசாமி அஞ்சான், சண்டைக்கோழி 2 படங்களுக்கு பிறகு அடுத்த படத்தை 4 ஆண்டுகளுக்கு கொடுத்துள்ள நிலையில், மிகப்பெரிய கம்பேக் கொடுக்கப் போகிறார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

    Recommended Video

    பொறுக்கி போலீஸ் மாதிரி இது டாக்டர் போலீஸ் | Warrior Tamil Movie Public Opinion *Review

    தமிழ், தெலுங்கு திரைப்படமாக டோலிவுட் நடிகர் ராம் பொத்தினேனி நடிப்பில் தி வாரியர் படத்தை இயக்கியுள்ள லிங்குசாமி, தான் கத்துக்கிட்ட மொத்த வித்தையும் இறக்குவார் என எதிர்பார்த்தால், தனது படங்களில் இருந்தே கதைகளை சுட்டு இப்படியொரு படத்தை எடுத்து வைத்திருக்கிறார் என ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

    அடிதுள்..ரிலீசுக்கு முன்பே 3 சர்வேதச விருதுகளை அள்ளிய பார்த்திபனின் இரவின் நிழல் அடிதுள்..ரிலீசுக்கு முன்பே 3 சர்வேதச விருதுகளை அள்ளிய பார்த்திபனின் இரவின் நிழல்

    ராம் பொத்தினேனி, கிர்த்தி ஷெட்டி மற்றும் நதியா நடிப்பில் இன்று வெளியாகி உள்ள தி வாரியர் படம் பற்றி ரசிகர்கள் ட்விட்டரில் வெளியிட்டுள்ள கருத்துக்களை இங்கே காண்போம்..

    டாக்டர் போலீஸ்

    டாக்டர் போலீஸ்

    இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில் ராம் பொத்தினேனி, கிர்த்தி ஷெட்டி, ஆதி நடிப்பில் வெளியாகி உள்ள தி வாரியர் படத்தில் அப்பாவி டாக்டராக வரும் ராம் பொத்தினேனி வில்லன் ஆதியிடம் அடி வாங்கிவிட்டு ஊரை விட்டு துரத்தியடிக்கப்பட அதன் பின்னர் போலீஸ் ஆக மாறி அந்த ஊருக்கு வந்து ஆதியின் கொட்டத்தை அடக்குவது தான் கதை. ஹீரோவாகவே டாக்டராகவும் போலீசாகவும் நடித்து இருப்பது வித்தியாசமாக இருக்கிறது என இந்த ரசிகர் பாராட்டி உள்ளார்.

    அஞ்சான் 2

    அஞ்சான் 2

    கொஞ்சம் கூட லாஜிக் இல்லாமல், தமிழ்ப் படமா? தெலுங்கு படமா? என்கிற கிளாரிட்டிக் கூட இல்லாமல் உருவாக்கப்பட்டுள்ள வாரியர் படத்தை பேசாம அஞ்சான் 2ன்னு பெயர் வச்சிருக்கலாம் என தமிழ் ரசிகர்கள் பயங்கரமாக ஓட்டி வருகின்றனர். வேட்டை படத்தின் கதை, ரன் படத்தின் காட்சிகள் என அரைத்த மாவையே மீண்டும் லிங்குசாமி அரைத்துள்ளார் என ட்ரோல்கள் பறக்கின்றன.

    பிஜிஎம் சரியில்லை

    பிஜிஎம் சரியில்லை

    புஷ்பா படத்துக்கு அப்படியொரு இசையமைத்த தேவிஸ்ரீ பிரசாத்தா இப்படியொரு மொக்கை பிஜிஎம் போட்டு ஒட்டுமொத்த படத்தையும் சொதப்பி வச்சிருக்காரே என தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்கள் தங்களது வருத்தங்களை தெரிவித்து வருகின்றனர்.

    ரொம்ப சுமார்

    ரொம்ப சுமார்

    தி வாரியர் படத்தின் முதல் பாதி டீசன்ட்டாகத்தான் சென்றது. ஆனால், இரண்டாம் பாதி ரொம்பவே ஆவரேஜ். அதே பழைய போலீஸ், ரவுடி கதையை எத்தனை முறை தான் பார்ப்பது ராம் பொத்தினேனி, கிர்த்தி ஷெட்டியின் நடிப்புக்காக ஒரு வாட்டி தியேட்டரில் பார்க்கலாம். படம் ரொம்பவே சுமார் தான் என இந்த நெட்டிசன் விமர்சித்துள்ளார்.

    வசூல் அடிவாங்கும்

    வசூல் அடிவாங்கும்

    ஏற்கனவே அருண் விஜய்யின் யானை திரைப்படம் அதிக தியேட்டரில் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், இந்த வாரம் 5 புதிய படங்கள் வெளியாகி இருக்கின்றன. இரவின் நிழல் மற்றும் தி வாரியர் படங்கள் தலா 200 தியேட்டர்களிலும், கார்கி, மை டியர் பூதம் தலா 150 திரையரங்குகளிலும் பகத் ஃபாசிலின் டிரான்ஸ் தமிழ் டப்பிங் நிலை மறந்தவன் 100 திரையரங்குகளிலும் வெளியாகி உள்ளன. இதன் காரணமாக அனைத்து படங்களின் வசூலும் அடிவாங்கும் சூழலும் நிலவி வருகிறது.

    English summary
    The Warrior Twitter Review : Ram Pothineni fans getting very disappointed by the Bgm and average screenplay
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X