twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இளம்சிறார் குற்றவாளிகளுக்காக ‘திமிரு புடிச்சவ’னாக மாறிய விஜய் ஆண்டனி- திமிரு புடிச்சவன் விமர்சனம்

    இளம்சிறார்களை குற்றவாளிகளாக மாற்றும் சமூக பிரச்சினையைப் பற்றி பேசுகிறது திமிரு புடிச்சவன் திரைப்படம்.

    |

    Recommended Video

    திமிரு புடிச்சவன் படம் எப்படி இருக்கு?- வீடியோ

    Rating:
    2.0/5
    Star Cast: விஜய் ஆண்டனி, நிவேதா பெத்துராஜ், லட்சுமி இராமகிருஷ்ணன், டேனியல் பாலாஜி, சாய் தீனா
    Director: கணேஷா

    சென்னை: இளம்சிறார்களை குற்றவாளியாக்கும் வில்லனை துவம்சம் செய்யும் போலீஸ் நாயகனே திமிரு புடிச்சவன்.

    சாதாரண போலீஸ் கான்ஸ்டபிளான முருகவேல் (விஜய் ஆண்டனி) தனது தம்பியை பெரிய போலீஸ் அதிகாரியாக்க வேண்டுமென நினைக்கிறார். ஆனால் இதை விரும்பாத தம்பி, ஊரைவிட்டே ஓடிப் போகிறார். ஆண்டுகள் உருண்டோட எஸ்.ஐ.யாக புரொமோஷன் ஆகி சென்னைக்கு மாற்றலாகிறார். ஓடிப்போன தனது தம்பியை கொலைக்குற்றவாளியாக பார்க்க நேர்கிறது. இதையடுத்து, திமிரு புடிச்சவனாக களமிறங்கும் முருகவேல், இளம் சிறார்களை குற்றவாளியாக்கும் வில்லனை துவம்சம் செய்வதே படம்.

    Thimiru pudichavan movie review

    எல்லா நடிகர்களுக்குமே போலீஸ் அதிகாரி பாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை நிச்சயம் இருக்கும். அந்த ஆசையில் விஜய் ஆண்டனி தேர்ந்தெடுத்த இந்த கதை அவரை அடுத்தக்கட்டத்துக்கு அழைத்து செல்லுமா என்பது கேள்விக்குறி தான்.

    ஆக்ஷன் காட்சிகளில் போலீஸ் கெத்து காட்டியிருக்கும் விஜய் ஆண்டனி, எமோஷன் காட்சிகளில் நெகிழ வைக்கிறார். ஆனால் வித்தியாசமாக முயற்சி செய்வதாக நினைத்து பல காட்சிகளில் தேவையில்லாத விஷப்பரீட்சைகளை செய்திருக்கிறார். இது அவரது ரசிகர்களை நிச்சயம் திருப்திப்படுத்தாது.

    Thimiru pudichavan movie review

    போலீஸ் எஸ்.ஐ.யாக கெத்து காட்டுகிறார் நிவேதா பெத்துராஜ். ஒரு சில இடங்களில் கவர்கிறார். பல இடங்களில் கடுப்பேற்றுகிறார். இந்துஜாவுக்கு இந்த படத்தில் வித்தியாசமான கதாபாத்திரம். நிறைவாக செய்திருக்கிறார்.

    வில்லனுக்கு கொடுக்கப்பட்ட பில்டப்புகளை எல்லாம் தவிடி பொடியாக்கிவிடுறார் மீசை பத்மாவாக நடித்திருக்கும் ஒட்டு மீசை' சாய் தீனா. வெறும் வாய்சவடால் மட்டுமே வில்லன் கதாபாத்திரத்திற்கு. வில்லன் டம்மியாகிவிடுவதால், படமும் டம்மியாகிவிடுகிறது.

    காமெடி என்ற பெயரில் சாமிநாதன் செய்யும் அட்ராசிட்டிகளை சகித்துக்கொள்ள முடியவில்லை. விஜய் ஆண்டனியின் இசையில் திருமிருக்கே பிடிச்சவன் பாடல் மட்டும் ஓ.கே. இம்முறை பின்னணி இசையிலும் கோட்டைவிட்டிருக்கிறார் விஜய் ஆண்டனி. எடிட்டர் வேலையும் அவரே செய்திருப்பது வேண்டாத வேலையாகவே தோன்றுகிறது.

    படத்தின் கதைக்கரு மட்டும் நன்றாக இருந்தால் போதும் என நினைத்துவிட்டார் இயக்குனர் கணேசா. எந்த மெனக்கெடலும் இல்லாமல் திரைக்கதையை ஏனோதானோவென செய்திருக்கிறார். 80களில் வெளிவந்த தமிழ் சினிமாக்களில் இடம்பெற்ற நிறைய காட்சிகளை இந்த படத்தில் பார்க்க முடிகிறது.

    வில்லனை என்கவுன்டர் செய்ய வருகிறார் விஜய் ஆண்டனி. அப்போது கூலாக சாப்பிட்டு கொண்டிருக்கும் தீனா, "எனக்காக ஒரு கோழி செத்திருக்கு. அத சாப்பிட்டுட்டு நான் சாகுறேன்", என வசனம் பேசுகிறார். இதை கேட்டு, வில்லன் சாப்பிட்டு முடிக்கும் வரை காவல் காக்கிறார் விஜய் ஆண்டனி. முடியலப்பா சாமி.

    Thimiru pudichavan movie review

    படம் முழுக்கவே இதுமாதிரி நிறைய சொதப்பல்கள். ரிச்சர்ட் எம்.நாதனின் ஒளிப்பதிவும், சக்தி சரவணனின் சண்டைப் பயிற்சியும் தான் ஆறுதல் மொமன்ட்ஸ்.

    கமர்சியல் மசாலா நெடியை குறைத்து, திரைக்கதையில் இன்னும் நிறைய கவனம் செலுத்தி இருந்தால் இந்த திமிரு புடிச்சவனை பார்வையாளர்களுக்கும் பிடிச்சிருக்கும்.

    English summary
    The tamil movie Thimiru pudichavan starring Vijay Antony, Nivetha Pethuraj in the lead roles is a full packed commercial entertainer.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X