For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  Thiruchitrambalam Review: ரசிகர்களை திருப்திப்படுத்தினாரா தனுஷ்.. திருச்சிற்றம்பலம் விமர்சனம் இதோ!

  |

  Rating:
  3.5/5

  நடிகர்கள்: தனுஷ், நித்யா மேனன், ராஷி கன்னா, பிரியா பவானி சங்கர், பாரதிராஜா, பிரகாஷ்ராஜ்

  இசை: அனிருத்

  இயக்கம்: மித்ரன் ஆர் ஜவகர்

  சென்னை: தெலுங்கு படங்களை ரீமேக் செய்து தமிழில் நல்ல ஃபீல் குட் மூவியை கொடுத்த இயக்குநர் மித்ரன் ஆர். ஜவகர் இந்த முறை ஏகப்பட்ட தமிழ் ஃபீல் குட் மூவிக்களையே மிக்ஸ் செய்து திருச்சிற்றம்பலம் படத்தைக் கொடுத்துள்ளார்.

  சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ், நித்யா மேனன், ராஷி கன்னா, பிரியா பவானி சங்கர், பாரதிராஜா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி உள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

  ஒன்றரை வருடம் கழித்து தியேட்டருக்கு வந்துள்ள தனுஷின் திருச்சிற்றம்பலம் ரசிகர்களை திருப்திப்படுத்தியதா? இல்லையா? என்பது குறித்து விரிவாக இங்கே பார்ப்போம்..

  Thiruchitrambalam Twitter Review: தனுஷின் திருச்சிற்றம்பலம் தாறுமாறா? தடுமாற்றமா? Thiruchitrambalam Twitter Review: தனுஷின் திருச்சிற்றம்பலம் தாறுமாறா? தடுமாற்றமா?

  என்ன கதை

  என்ன கதை

  சமீபத்தில் வெளியான கார்த்தியின் விருமன் படத்தைப் போல இந்த படத்திலும் திருச்சிற்றம்பலம் தனுஷ் மற்றும் அவரது அப்பா பிரகாஷ் ராஜ் பேசிக் கொள்ள மாட்டார்கள். அதற்கு காரணமும் அம்மாவின் இழப்பு தான். தாத்தா பாரதிராஜாவின் திருச்சிற்றம்பலம் பெயரையே பேரன் தனுஷுக்கு வைக்கின்றனர். தனுஷின் நண்பர்கள் பழம் பழம் என அவரை கிண்டல் செய்கின்றனர்.

  தோழியா என் காதலியா

  தோழியா என் காதலியா

  பள்ளி மற்றும் கல்லூரிகளில் நல்ல மதிப்பெண் எடுத்த தனுஷ் ஸ்விக்கி, ஜோமேட்டோ போல DOINK எனும் உணவு டெலிவரி பாயாக வேலை செய்வதை பார்த்து அவரது நண்பர்கள் கிண்டல் செய்ய அவர்களுடன் சண்டைப் போடும் காட்சியாக இருக்கட்டும், ராஷி கன்னாவை கரெக்ட் செய்ய கவிதை எழுதிக் கொண்டு நித்யா மேனனிடம் படிக்கும் காட்சியாகட்டும் தனுஷை விட அந்த இடங்களில் நித்யா மேனன் நடிப்பு பிரமாதம். சோபனா கதாபாத்திரத்தில் நடித்துள்ள நித்யா மேனன் காதலியாகிறாரா? இல்லையா? என்பது தான் திருச்சிற்றம்பலம் படத்தின் கதை.

  செம காமெடி

  செம காமெடி

  யாரடி நீ மோகினி படத்தை போல முதல் பாதி சிட்டி, இரண்டாம் பாதியில் கொஞ்சம் நேரம் கிராமத்துக்கு கதை பயணிக்கிறது. உத்தமப்புத்திரன் உள்ளிட்ட படங்களில் காமெடி மித்ரன் ஜவகருக்கு எந்தளவுக்கு கை கொடுத்ததோ அந்த அளவுக்கு இந்த படத்திலும் காமெடி கை கொடுத்திருக்கிறது. சோபனா மற்றும் திரு செய்யும் காமெடிகள் வயிறு குலுங்க சிரிக்க வைக்கின்றன. கவிதை காமெடியில் பாரதிராஜா கலக்கல்.

  சென்டிமெண்ட் செட் ஆகுது

  சென்டிமெண்ட் செட் ஆகுது

  இடைவேளைக்கு பிறகு அப்பா பிரகாஷ் ராஜ் அவனுக்கு என்னத்தான் வேணுமான்னு கேட்க, அம்மாவையும் தங்கச்சியும் திருப்பிக் கொடுன்னு பேசும் இடங்களாகட்டும், "ஊர் பூரா தேடாதே.. கூட இருகிறவள பாரு என்று" பாரதிராஜா நித்யா மேனனை பற்றி பேசும் இடமாகட்டும் சென்டிமென்ட் நல்லாவே செட் ஆகுது. தாத்தா நல்லா இருக்க, போலீஸ் அதிகாரியான அப்பாவுக்கு திடீரென ஸ்ட்ரோக் வருவது திணிக்கப்பட்டதை போல உள்ளது. நித்யா மேனனின் தம்பியாக நடித்துள்ள விஜே பப்புவின் சென்டிமென்ட் காட்சியும் ரசிகர்களை நெகிழச் செய்கிறது.

  பலம்

  பலம்

  நடிகர்கள் தேர்வு புதிய படத்தை பார்க்கும் உணர்வை கொடுக்கிறது. அனிருத்தின் இசை இளையாராஜா டச்சை அடிக்கடி ஞாபகப்படுத்தினாலும் மேகம் கருக்காதா பாடலில் லாலா லேண்டுக்கே கொண்டு சென்ற உணர்வு சிறப்பு. ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவு பளிச்சென இருக்கு. பிரியா பவானி சங்கரின் அந்த கேமியோ ரோல் சூப்பர். தனுஷ், நித்யா மேனன் கெமிஸ்ட்ரி திருச்சிற்றம்பலம் படத்திற்கு பெரிய பலம்.

  பலவீனம்

  பலவீனம்

  பிரசாந்த் ஷாலினி நடித்த பிரியாத வரம் வேண்டும், தனுஷ் நடிப்பில் வெளியான யாரடி நீ மோகினி, வேலையில்லா பட்டதாரி, கார்த்தியின் லேட்டஸ்ட் விருமன் என திருச்சிற்றம்பலம் படம் முழுவதும் புதுசா எதுவுமே இல்லாமல் அரைத்த மாவையே கொஞ்சம் காமெடி முந்திரி, திராட்சைகளை தூவி அரைத்திருப்பது தெளிவாக தெரிவது புதிய படத்தை பார்த்த ஃபீலை கொடுக்கவே இல்லை. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இந்த படத்தை பார்த்தால் சிரித்து மகிழலாம். திருச்சிற்றம்பலம் - பழைய கதை ஆனால் புதிய வடிவம்!

  English summary
  Thiruchitrambalam Review in Tamil (திருச்சிற்றம்பலம் விமர்சனம்): Dhanush and Nithya Menon chemistry worked out well in Thiruchitrambalam. Raashi Khannna, Prakash Raj are the pillars of the movie and Anirudh's music excellent.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X