twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    Thirumanam review: ஆடம்பர திருமணங்களின் அவஸ்தைகளைச் சொல்லும் சேரனின் 'திருமணம்'! - விமர்சனம்

    ஆடம்பர திருமணங்கள் அவசியமானது தானா என்ற கேள்வியை முன் வைக்கிறது சேரனின் 'திருமணம்'.

    |

    Recommended Video

    Thirumanam Movie Public Review: சேரனின் 'திருமணம்' படம் விமர்சனம்- வீடியோ

    Rating:
    4.0/5
    Star Cast: சேரன், தம்பி ராமையா, பால சரவணன், ஜெயப்பிரகாஷ், எம் எஸ் பாஸ்கர்
    Director: சேரன்

    சென்னை: திருமண வைபவங்களை மிக ஆடம்பரமாக நடத்துவது அவசியமானது தானா என்ற கேள்வியை முன் வைக்கிறது சேரனின் 'திருமணம்' சில திருத்தங்களுடன் திரைப்படம்.

    பல்வேறு பிரச்சினைகளின் காரணமாக சில ஆண்டுகளாக திரைப்படங்களில் கவனம் செலுத்தாமல் இருந்த சேரன், பெரிய இடைவெளிக்கு பின் திருமணம் மூலம் மீண்டும் வந்திருக்கிறார். வெல்கம்பேக் இயக்குனர் சேரன்.

    Thirumanam movie review

    வருமான வரித்துறையில் இளநிலை அதியாரியாக வேலை பார்க்கும் சேரன், நேர்மைக்கு பெயர் போனவர். அவரது தங்கை காவ்யாவும், ஜமீன் பரம்பரையை சேர்ந்த சுகன்யாவின் தம்பி உமாபதியும் காதலிக்கிறார்கள். இருவரும் தங்கள் காதலை வீட்டில் சொல்ல, 'லவ் கம் அரேஞ்சுடு மேரேஜாக' அவர்களது திருமணம் முடிவாகிறது. ஜமீன் பரம்பரையை சேர்ந்த சுகன்யாவுக்கு, தனது தம்பி திருமணத்தை ஆடம்பரமாக நடத்த வேண்டும் என்பது ஆசை. ஆனால் பட்ஜெட் போட்டு வாழ்க்கை நடத்தும் சேரன், எதில் எல்லாம் மிச்சம் பிடிக்க முடியுமோ, அதில் எல்லாம் மிச்சம் பிடித்து திருமணத்தை நடத்த பார்க்கிறார்.

    Thirumanam movie review

    இதனால் இருவீட்டாருக்கும் இடையே பிரச்சினை வருகிறது. ஒருகட்டத்தில் பிரச்சினை அதிகமாகி திருமணமே தடைபடுகிறது. தடைப்பட்ட திருமணம் மீண்டும் எப்படி நடக்கிறது என்பது தான் மீதிப்படம்.

    தனது முந்தைய படங்கள் போலவே, திருமணத்தையும் குடும்பத்துடன் சென்று பார்க்கக்கூடிய படமாக எடுத்திருக்கிறார் சேரன். இன்றைய சூழலில் மிக அவசியமான கருத்தை, மிக தெளிவாக பதிவு செய்திருக்கிறார். அழைப்பிதழ் தொடங்கி மண்டபம், சாப்பாடு வரை எத்தனை ஆடம்பரமாக திருமணங்கள் நடக்கின்றன என்பதையும், அதனால் எந்த மாதிரியான பாதிப்புகள் எல்லாம் வருகிறது என்பதையும் மிக ஆழமாக சொல்லியிருக்கிறார் இயக்குனர்.

    Thirumanam movie review

    முதல் கோணல் முற்றும் கோணல் என்ற பழமொழிக்கு இணங்க, ஒரு திருமணத்தில் இதுபோன்ற ஆடம்பர செலவுகளால் ஏற்படும் மனக்கசப்பு, அந்த தம்பதியை விவாகரத்து வரை எப்படி கொண்டு செல்கிறது என்பதை தெளிவாக புரிய வைத்திருக்கிறார் சேரன். பட்ஜெட் போட்டு கணக்குப் பார்த்து வாழும் குடும்பத்துக்கும், தாம்தூம் என செலவு செய்து ஆடம்பரமாக வாழும் குடும்பத்துக்கும் உள்ள வேறுபாட்டை, சாதக, பாதகங்களை இப்படம் கண்முன் நிறுத்துகிறது.

    உமாபதியும், காவ்யாவும் தான் நாயகன், நாயகி என்றாலும், படத்தில் வரும் அனைத்து கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக ஓவர் ஆக்டிங் செய்யும் சேரன் கூட இதில் அடக்கி வாசித்திருக்கிறார். ஒரு அண்ணனாக, நேர்மையான அரசு அதிகாரியாக மிகையில்லா நடிப்பை வழங்கியிருக்கிறார்.

    Thadam Review: ஒரு கொலை.. ஓர் உரு இரட்டையர்.. போலீஸ்.. ஆடுபுலி ஆட்டம் ஆடும் 'தடம்'! - விமர்சனம் Thadam Review: ஒரு கொலை.. ஓர் உரு இரட்டையர்.. போலீஸ்.. ஆடுபுலி ஆட்டம் ஆடும் 'தடம்'! - விமர்சனம்

    படத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரம் சுகன்யாவினுடையது தான். அதற்கு சிறிதும் குறை வைக்காமல் சிறப்பாக செய்திருக்கிறார். தம்பி மீது அதிக அக்கறை எடுத்துக்கொள்வது, சித்தப்பா எம்எஸ் பாஸ்கர் மீது பாசம் காட்டுவது, கஞ்சத்தனமான வேலைகளை செய்யும் சேரனை அவமானப்படுத்துவது என கிடைக்கும் கேப்பில் எல்லாம் கெட்டிமேளம் கொட்டி, அப்ளாஸ் அள்ளுகிறார்.

    Thirumanam movie review

    உமாபதிக்கும், காவ்யாவிற்கும் காதலிப்பதை தவிர வேறு வேலையில்லை. இருந்தாலும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள். காவ்யாவின் பரதநாட்டிய நடனம் மிகச் சிறப்பு.

    சேரனின் அம்மாவாக வரும் சீமா நாயர், தமிழ் சினிமாவுக்கு புதிய அம்மா கிடைத்துவிட்டார் என உற்சாகமாக விசிலடிக்க வைக்கிறார். தம்பி ராமையா, எம்எஸ் பாஸ்கர், மனோபாலா, ஜெயபிரகாஷ், பாலசரவணன், அனுபமா என படத்தில் நடித்துள்ள அனைவரும் தங்கள் கடமையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

    பொதுவாக சேரன் படத்தில் பாடல்கள் சூப்பர் ஹிட்டாகும். ஆனால் இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் சுமார் ரகம் என்பது தான் ஏமாற்றம். இன்னும் நிறைய மெனக்கெடனும் சித்தார் விபின். பின்னணி இசையில் நாதஸ்வரம், மிருதங்கள் போன்ற வாத்தியங்களை அதிகம் பயன்படுத்தி, பார்வையாளர்களை திருமண மூடிலேயே வைத்திருக்கிறார்கள் இசையமைப்பாளர்கள் சபேஷ் - முரளி.

    Thirumanam movie review

    சேரன் படங்களுக்கு என்ன தேவையோ அதை கொஞ்சமும் பிசகில்லாமல் படம்பிடித்து தந்திருக்கிறார் ஒளிப்பதிபாளர் ராஜேஷ் யாதவ். திருமண வைபவத்தின் போது ஏற்படும் குதூகலத்தை திரையில் காட்டுகிறார். பொண்ணுவேல் தாமோதரனின் படத்தொகுப்பில், படம் மிக மெதுவாக நகர்கிறது. சில காட்சிகளின் நீளத்தையும், தேவையில்லாத பாடல்களையும் கத்தரித்திருந்தால், திருமனம் இன்னும் கொஞ்சம் உற்சாகமாக, சுவாரஸ்யமாக இருந்திருக்கும்.

    படத்தின் கதையும், கருவும் இன்றைய காலகட்டத்துக்கு மிகவும் அவசியமானது தான். ஆனால் அதனை ஓவர்டோசாக திணித்திருப்பது சினிமாத்தனமாக இருக்கிறது. திருமணத்தின் போது சாப்பாட்டுக்கு எல்லாம் கஞ்சத்தனப்படுவது ரொம்ப ஓவர் சேரன் சார். தமிழ் காமெடி தொலைக்காட்சிகளில் சேரன் பட காமெடிகள் தவிர்க்க முடியாதவை. ஆனால் இந்த படத்தில் அது மிஸ்ஸிங்.

    <strong>90 ml Review: தான் கெட்ட குரங்கு வனத்தையே கெடுக்கும்... 90 எம் எல் பத்தி வேற என்ன சொல்ல?- விமர்சனம் </strong>90 ml Review: தான் கெட்ட குரங்கு வனத்தையே கெடுக்கும்... 90 எம் எல் பத்தி வேற என்ன சொல்ல?- விமர்சனம்

    எனினும் ஆடம்பர வாழ்க்கை வாழ நினைக்கும் இன்றைய தலைமுறை இளைஞர்களுக்கு, பணத்தின் அருமையை, சேமிப்பின் மகத்துவத்தை போதிக்கும் இந்த திருமணம், தரமான மொய் விருந்து.

    English summary
    Thirumanam is a Tamil family romantic drama film written and directed by Cheran in which he also stars in a pivotal role. The film stars Umapathy Ramaiah and Kavya Suresh in the lead roles while Cheran himself along with Thambi Ramaiah, M. S. Bhaskar, Sukanya and Manobala play supportive roles. The film is a complete family entertainer about a marriage.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X