திட்டம் போட்டு திருடுற கூட்டம் - காமெடி ஓகே... ரசிகர்கள் மனதை திருடுமா

Rating:
2.5/5

சென்னை:

நடிகர்கள் : பார்த்திபன், கயல் சந்திரன், சாட்னா டைட்டஸ்
இசை : அஷ்வத்
ஒளிப்பதிவு: மார்ட்டின் ஜோ
இயக்கம்: சுதர்

ஐந்து பேர் கொண்ட திருட்டு கும்பல் எப்படி ஒவ்வொரு திருட்டையும் திட்டம் தீட்டி கொள்ளையடிக்கிறது என்பதை மிகவும் நகைச்சுவையோடு மிக அழகாக திட்டம் போட்டு திருடுற கூட்டம் படத்தில் திரைக்கதையாக அமைத்திருக்கிறார் இயக்குனர். கொள்ளை கதை என்பதால் சீரியஸா போகும்னு பார்த்தா படம் பயங்கர கலகலப்பாக நகர்கிறது. காமெடி செய்ய ஒருவர் இருந்தாலே போதும். ஆனால் இப்படத்தில் கொள்ளை கும்பல் முழுக்கவே காமெடி கிங்ஸ் தான். கூட்டத்தின் தலைவனாக வரும் பார்த்திபனின் நடிப்பும் நக்கலும் காமெடியும் சொல்லவா வேண்டும். பார்த்திபன் இந்த படத்தில் வித்தியாசமான தோற்றத்தில் பின்னி எடுத்துவிட்டார் என்று தான் சொல்லணும்.

Thittam Poattu Thirudura Kootam Movie Review

கிரிக்கெட் உலக கோப்பையை திட்டம் போட்டு திருடுவதே இப்படத்தின் கிளைமாக்ஸ். மிகவும் விறுவிறுப்பாக கொண்டு செல்கிறார் இயக்குனர் சுதர். இந்த படத்தின் மூலம் வெள்ளித்திரையில் முதல் முயற்சி செய்திருக்கும் இன்றைய இயக்குனர், கலைஞர் தொலைக்காட்சியின் மூலம் நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் பங்கு பெற்று பல வித்தியாசமான குறும்படங்கள் எடுத்தவர். டு மூவி பஃப் நிறுவனம் சார்பில் ரகுநாதன் PS தயாரிப்பில் சுதர் இப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகியிருக்கிறார்.

திட்டம் போட்டு திருடுற கூட்டம் பல போராட்டங்களுக்கு பிறகு வெளியாகுமா இல்லையா என்ற சந்தேகத்துடனே இன்று ஒரு வழியாக வெளியாகிவிட்டது. கயல் திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமான சந்திரன் ஒரு நீண்ட இடைவெளிக்கு பிறகு கதாநாயகனாக நடித்திருக்கிறார்.

Thittam Poattu Thirudura Kootam Movie Review

கயல் சந்திரனுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார் பிச்சைக்காரன் படத்தின் மூலம் பிரபலமான சாட்னா டைட்டஸ். திருமணத்திற்கு பிறகு ரிலீஸ் ஆகும் படம் இவருக்கு. இந்த படத்தை திருமணத்திற்கு முன்பே ஷூட்டிங் முடித்து கொடுத்து விட்டார் சாட்னா. இனி நடிப்பு பக்கம் வர மாட்டேன் என்றும் சொல்லி இருக்கிறார்.

இந்த படத்தில் சாம்ஸ், ஆர் ஜெய், பிக் பாஸ் புகழ் டேனியல் போப் ஆகியோரும் நடித்துள்ளனர். அஷ்வத் இசையில் உருவாகி இருக்கும் பாடல்களுக்கு வரிகள் மூலம் உயிர் சேர்த்துள்ளனர் நிரஞ்சன் பாரதி, சுதர் மற்றும் முரளிதரன்.

Thittam Poattu Thirudura Kootam Movie Review

மார்ட்டின் ஜோ ஒளிப்பதிவில் காட்சிகள் கச்சிதம். கதையை மிகவும் சுவாராஸ்யமாகவும் நகைச்சுவையுடனும் நகர்த்துவதால் ரசிகர்களை மிகவும் கவந்துள்ளது. ஒன்று இரண்டு காட்சிகள் மட்டும் காமெடிக்கு என்று ஒதுக்காமல் ஒட்டுமொத்த படத்தையுமே காமெடியாக கொண்டு சென்றதற்கு இயக்குனருக்கு ஒரு பெரிய ஷொட்டு.

Thittam Poattu Thirudura Kootam Movie Review

ரசிகர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்யும் வகையில் முழு நீள நகைச்சுவை திரைப்படமாக படைத்திருக்கிறார்கள். இந்த திட்டம் போட்டு திருடுற கூட்டம், பல நாட்கள் காத்திருந்து திட்டம் தீட்டி ரீலீஸ் செய்துள்ளனர். நல்ல படங்களை மக்கள் எப்போதும் கை விடுவதில்லை.

திட்டம் போட்டு திருடுற கூட்டம் ரசிகர்களின் இதயத்தை திருடுமா என்று பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X