twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தூங்கா வனம்- விமர்சனம்

    By Shankar
    |

    Rating:
    3.0/5
    Star Cast: கமல் ஹாஸன், த்ரிஷா, பிரகாஷ் ராஜ்
    Director: ராஜேஷ் எம் செல்வா
    எஸ் ஷங்கர்

    நடிகர்கள்: கமல் ஹாஸன், த்ரிஷா, பிரகாஷ் ராஜ், கிஷோர், ஆஷா சரத்

    ஒளிப்பதிவு: சானு வர்கீஸ்

    இசை: ஜிப்ரான்

    தயாரிப்பு: ராஜ்கமல் இன்டர்நேஷனல்

    இயக்கம்: ராஜேஷ் எம் செல்வா

    ப்ரெஞ்ச் மொழிப் படமான ஸ்லீப்லெஸ் நைட் -ன் (Nuit Blanche) அப்பட்டமான தழுவல் தூங்கா வனம். அப்பட்டமான என்றால் எந்த அளவுக்கு தெரியுமா... சில காட்சிகளில் கேமரா கோணங்களைக் கூட மாற்றாத அளவுக்கு, என்பது ஒரிஜினல் பார்த்தவர்களுக்குப் புரியும்.

    ஆனாலும் ஓரளவு திருந்தச் செய்திருக்கிறார்கள். 'பிற நாட்டு கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்' என்ற வகை தழுவல் இது.

    Thoonga Vanam Review

    பணத்துக்காக எதையும் செய்யும் போதை மருந்து கடத்தல் தடுப்பு போலீஸ் அதிகாரி கமல் ஹாஸன். ஒருமுறை பெரிய போதை மருந்து பார்சல் இவரிடம் சிக்க, அதை அப்படியே அமுக்கிவிடுகிறார். இதை இன்னொரு போலீஸ் அதிகாரியான த்ரிஷா பார்த்துவிடுகிறார். 'பொருளுக்கு' சொந்தக்காரரான தாதா பிரகாஷ் ராஜ், கமலின் மகனை கடத்தி வைத்துக் கொண்டு டீல் பேச, மறைத்து வைத்த போதைப் பொருளை எடுக்க கமல் போகிறார். ஆனால் அங்கு பொருள் இல்லை.

    மிகுந்த நெருக்கடிக்குள்ளாகும் கமல், மகனை எப்படி மீட்கிறார்? போதைப் பொருளைக் கடத்தியவர் யார்? அதன் பின்னணி என்ன என்பதையெல்லாம் விறுவிறுப்பாகச் சொல்லியிருக்கிறார்கள்.

    எந்த ரீமேக் என்றாலும் அதில் கமல் தன் பாணியில் எதையாவது சேர்ப்பார், உன்னைப் போல் ஒருவன் மாதிரி. ஆனால் இதில் அப்படி எதையும் செய்யவில்லை.

    இயக்குநராக அறிமுகமாகியுள்ள ராஜேஷ் எம் செல்வாவும் கமலும், 'எதற்கு பெரிய ரிஸ்க்' என நினைத்து இந்தக் கதையைத் தேர்வு செய்து திரைக்கதை அமைத்திருக்கிறார்கள்.

    Thoonga Vanam Review

    ஆனால் பெரிய எதிர்ப்பார்ப்புடன் வரும் பார்வையாளர்களை இந்தப் படம் எந்த அளவு திருப்திப்படுத்தும் என்ற கேள்வி உள்ளது. காரணம் போதை மருந்து கடத்தல், போலீஸ் அதிகாரி டபுள் க்ராஸிங், மகனை பணயமாக வைப்பது என்பதெல்லாம் தமிழுக்கு புதிய களமல்லவே!

    நடிப்பைப் பொருத்தவரை வழக்கமான கமல் ஹாஸன். குறை சொல்ல ஒன்றுமில்லை. ஆக்ஷன் காட்சிகளில் வயதைத் தாண்டி உழைத்திருக்கிறார்.

    குறிப்பாக அந்த சமையலறை சண்டைக் காட்சியில் கமல் மற்றும் த்ரிஷா இருவருமே கலக்கியிருக்கிறார்கள். த்ரிஷாவுக்கு இது குறிப்பிடத்தக்க படம்.

    பிரமாதப்படுத்தியிருக்கிறார்கள் பிரகாஷ் ராஜ் மற்றும் கிஷோர்.

    Thoonga Vanam Review

    சாம்ஸும் கமலும் பேசிக்கொள்ளும் அந்தக் காட்சியில் ஏபிசி என்ற பாகுபாடு தாண்டி அரங்கம் அதிர்கிறது.

    படத்தின் முக்கிய பலம் ஜிப்ரானின் பின்னணி இசை மற்றும் சனு வர்கீஸின் நுட்பமான ஒளிப்பதிவு. ஒரே ஒரு பாடல்தான். அதையும் வித்தியாசமாகப் படமாக்கியுள்ளனர்.

    அட, அதுக்குள்ள முடிஞ்சிருச்சே எனும் அளவுக்கு படத்தின் நீளத்தைக் குறைத்திருப்பது நல்ல டெக்னிக். இல்லாவிட்டால் இந்தப் படம் பெரிய கொட்டாவியை வரவழைத்திருக்கும். அந்த வகையில் தப்பித்தது.

    English summary
    Kamal Haasan’s Thoongaa Vanam is a complete remake of French thriller Sleepless Night that impresses with a tight screenplay.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X