Thug Life Review: தக் லைஃப் விமர்சனம்.. கமல்ஹாசன், மணிரத்னம் கூட்டணி கைகொடுத்ததா? கடுப்பேற்றியதா?

Rating:
3.0/5
Star Cast: கமல்ஹாசன், சிம்பு, த்ரிஷா
Director: மணிரத்னம்

சென்னை: நாயகன் படத்திற்கு பிறகு கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் இத்தனை ஆண்டுகள் ஏன் சேரவில்லை என்றும் இப்போது ஏன் சேர்ந்தார்கள் என்பதும் இந்த படத்தை பார்த்த ரசிகர்களுக்கு கண்டிப்பாக புரிய வாய்ப்பே இல்லை. இந்தியன் 2 படத்தின் தோல்விக்குப் பிறகு கண்டிப்பாக கமல்ஹாசனுக்கு கம்பேக் படமாக அமையும் தக் லைஃப் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ரசிகர்களின் எதிர்பார்ப்பை படம் எந்தளவுக்கு பூர்த்தி செய்தது? என்கிற கேள்விக்கு பதிலை இந்த விமர்சனத்தில் பார்க்கலாம் வாங்க..

கமல்ஹாசன், மணிரத்னம், சிம்பு, ஏ.ஆர். ரஹ்மான் என தமிழ் சினிமாவின் பெரிய ஆளுமைகள் இணைந்து உருவாக்கியுள்ள படம் நிச்சயம் ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுக்கும் என்றே பலரும் எதிர்பார்த்து இந்த படத்துக்காக கமலுக்கு சப்போர்ட்டாக இருந்தனர்.

Thug Life Review in Tamil  Kamal Haasan and Maniratnam s gangster drama not worked well
Photo Credit:

ஆனால், இயக்குநர் மணிரத்னம் கமல்ஹாசனின் கதையை தனது ஸ்டைலில் மாற்றியமைத்ததாக புரமோஷன்களில் கூறப்பட்ட நிலையில், அதை கமல்ஹாசன் எப்படி அனுமதித்தார் என்றும் இந்த படத்தில் கமல்ஹாசனை தவிர மற்ற கதாபாத்திரங்கள் எதுவும் வலுவானதாக எழுதப்படவில்லையே ஏன்? என்கிற கேள்வி தான் எழுகிறது.

தக் லைஃப் கதை: ரங்கராய சக்திவேல் நாயக்கர் (கமல்ஹாசன்), அவருடைய அண்ணன் மாணிக்கம் (நாசர்) கேங்ஸ்டர்களாக உள்ள நிலையில், அவர்களை இன்னொரு கேங்ஸ்டர் போலீஸாரிடம் காட்டிக் கொடுக்கிறான். அங்கிருந்து தப்பிக்க முயற்சி செய்யும் போது நடைபெறும் துப்பாக்கிச் சூட்டில் பேப்பர் போட்டுக் கொண்டு இருக்கும் அமரின் (சிம்பு) தந்தை இறந்து விடுகிறார். அமரை கவசமாக வைத்து போலீஸாரிடம் இருந்து எஸ்கேப் ஆகிறார் சக்திவேல்.

மாணிக்கத்தின் மகளை கல்லூரியில் ஒருவன் கர்ப்பமாக்கிவிட்டு ஏமாற்றிவிட அந்த பெண் தற்கொலை செய்துக் கொள்கிறார். அதற்கு பழிவாங்க பெரிய இடத்துப் பையன் என தெரிந்தும் அவனை போட்டுத் தள்ளிவிட்டு சக்திவேல் ஜெயிலுக்குப் போகிறார். சக்திவேலுக்கு மனைவியாக ஜீவா கதாபாத்திரத்தில் அபிராமியும், சின்ன வீடாக இந்திராணி த்ரிஷாவையும் காட்டுகின்றனர்.

உன்னோட அப்பாவை கொன்றதே சக்திவேல் தான் என மாணிக்கம் அமரை ட்விஸ்ட் பண்ணி விட அதன் பின்னர் சக்திவேலை பிளான் செய்து இமய மலைக்குச் செல்லும் ட்ரிப்பில் சிம்பு சாகடிக்கிறார். ஆனால், அதிலிருந்து தப்பிக்கும் கமல்ஹாசன், அனைவரையும் எப்படி பழிவாங்குகிறார் என்பதும், அமரின் தங்கையை தேடிக் கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதும் தான் இந்த படத்தின் கதை.

Thug Life Review in Tamil  Kamal Haasan and Maniratnam s gangster drama not worked well
Photo Credit:

படம் எப்படி இருக்கு?: நடிப்பை பொறுத்தவரையில் கமல்ஹாசன் ரங்கராய சக்திவேல் நாயக்கராகவே மாறி தனது ஒட்டுமொத்த முகத்திலும் வித்தியாசமான முக பாவனைகளை காட்டி மிரட்டுகிறார். ஆரம்பத்தில் வரும் அந்த இளமைக்கால கமல் போர்ஷன் எல்லாம் பக்கா. சிம்புவின் அதிரடி என்ட்ரி தரமான சம்பவம். ஆனால், அதன் பின்னர், அவருக்கு பெரிதாக வேலை இல்லை. ஜோஜு ஜார்ஜ் பாவம் கமலுடன் ஒரு சண்டைக்காக மட்டும் பயன்படுத்தப்பட்டுள்ளார். நாசர், த்ரிஷா, அபிராமி என யாருக்குமே பெரிதாக ஸ்கோப் இல்லை. ஏ.ஆர். ரஹ்மான் போட்ட பாடல்கள் எல்லாம் வழக்கமான மணிரத்னம் படங்களில் வருவது போல கொஞ்ச நொடிகள் மட்டுமே வந்து காணாமல் போகிறது. ஜிங்குச்சா பாடல் மட்டுமே ஆட வைக்கிறது.

பாடகி தீ மற்றும் சின்மயி வெர்ஷன் என ரசிகர்கள் போட்டிப் போட்டு ரசித்த முத்த மழை பாடலை மொத்தமாக தூக்கிவிட்டனர். விண்வெளி நாயகா பாடல் கிளைமேக்ஸில் ரோலிங் டைட்டில் போடும் போது வருகிறது. அசோக் செல்வன் எல்லாம் படத்தில் என்ன பண்ணுகிறார் என்பதே வேடிக்கையாகத்தான் உள்ளது.

பிளஸ்: இரண்டாம் பாதியை ஒப்பிடும் போது, முதல் பாதி ஓகே ரகமாகவே உள்ளது. ரவி கே சந்திரனின் ஒளிப்பதிவு மற்றும் ராஜ்கமல் நிறுவனத்தின் பிரமாண்ட பொருட்செலவில் புரொடக்‌ஷன் வேல்யூ மிரட்டலாக உள்ளன. ஏ.ஆர். ரஹ்மானின் பாடல்கள் கைகொடுத்த அளவுக்கு பின்னணி இசை பெரிதாக கைகொடுக்கவில்லை என்பது வருத்தம் தான். கமல்ஹாசன் மொத்த படத்தையும் தனது தோளில் சுமந்துக் கொண்டு கடைசி வரை காப்பாற்ற போராடியுள்ளார். கமல்ஹாசன் இல்லாத இடங்களில் சிம்புவின் நடிப்பு படத்திற்கு பெரிய பலமாக உள்ளது. தக் லைஃப் படத்தை மேக்கிங்கிற்காக பார்க்கலாம். ஆக்‌ஷன் காட்சிகளில் எல்லாம் வேறலெவல் எஃபோர்ட்டை ஸ்டன்ட் மாஸ்டர்களான அன்பறிவ் போட்டுள்ளனர். கமல்ஹாசன் மற்றும் சிம்பு சண்டையிடும் அந்த கிளைமேக்ஸ் சண்டை அல்டிமேட்.

மைனஸ்: இயக்குநர் ஷங்கரை போலவே இயக்குநர் மணிரத்னமும் அவுட்டேட்டட் ஆகிவிட்டார் என்று தான் தோன்றுகிறது. இந்தியன் 2 படத்தைத் தொடர்ந்து இந்த படமும் கமல்ஹாசனுக்கு பிளாக்பஸ்டர் படமாக மாறாது என்றே தெரிகிறது. கடந்த சில மாதங்களாக கமல்ஹாசன் பண்ண புரமோஷன் எல்லாம் ஏன்? என்றும் நாயகன் படத்தையே மறக்கச் செய்துவிடும் 'தக் லைஃப்' என்று சொன்ன பில்டப் எல்லாம் படத்தை பார்க்கும் போது ரசிகர்களை நிச்சயம் கடுப்பாக்கிவிடும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X