Tiger 3 Review: “தெறிக்கும் ஆக்ஷன்... சல்மான் கானின் தீபாவளி பட்டாசு..” டைகர் 3 டிவிட்டர் விமர்சனம்
சென்னை: பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் நடித்துள்ள டைகர் 3 திரைப்படம், இன்று வெளியானது.
தீபாவளி ஸ்பெஷலாக ரிலீஸாகியுள்ள டைகர் 3 படத்தை யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரித்துள்ளது.
300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரம்மாண்டமான ஸ்பை த்ரில்லர் படமாக உருவாகியுள்ளது டைகர் 3.
இந்நிலையில், இந்தப் படம் குறித்து நெட்டிசன்களின் டிவிட்டர் விமர்சனத்தைப் பார்க்கலாம்.

டைகர் 3 டிவிட்டர் விமர்சனம்
பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் நடித்துள்ள டைகர் 3, தீபாவளி ஸ்பெஷலாக இன்று வெளியாகியுள்ளது. மனீஷ் ஷர்மா இயக்கியுள்ள இந்தப் படம் ஸ்பை த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. சல்மான் கானுடன் கத்ரினா கைஃப், இம்ரான் ஹாஷ்மி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஷாருக்கான், ஹிருத்திக் ரோஷன் இருவரும் கேமியோ ரோலில் நடித்துள்ளனர்.
இந்நிலையில், சல்மான் கானின் டைகர் 3, பக்கா ஆக்ஷன் என்டர்டெய்னிங் மூவி என நெட்டிசன் ஒருவர் கூறியுள்ளார். முதல் பாதி சுமாராக இருந்தாலும், இரண்டாம் பாதி சூப்பர் எனத் தெரிவித்துள்ளார். ஷாருக்கானின் கேமியோ என்ட்ரி, சல்மான் கானும் அவரும் இணைந்து நடித்துள்ள ஆக்ஷன் போர்ஷன் தரமாக உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார். தீபாவளி பண்டிகைக்கு ஏற்ற கமர்சியல் படமான டைகர் 3, பாக்ஸ் ஆபிஸில் பல கோடிகளில் கலெக்ஷன் செய்யும் எனவும் அவர் கூறியுள்ளார்.
சல்மான் கானை காப்பாற்றும் ஏஜென்ட் பதான் கேரக்டரில் ஷாருக்கான் நடித்துள்ளதாகவும், அவர் அறிமுகமாகும் சீன் செம்ம சூப்பர் என்றும் இன்னொரு நெட்டிசன் குறிப்பிட்டுள்ளார்.
டைகர் 3 தரமான தீபாவளி தமாக்கா எனவும் ரசிகர்கள் விமர்சனம் செய்துள்ளனர். ஏஜென்ட் டைகராக சல்மான் கான் ஆக்ஷன் காட்சிகளில் மாஸ் காட்டுவதாகவும், கத்ரினா கைஃப் ஜோயா என்ற் கேரக்டரிலும், இம்ரான் ஹாஷ்மி வில்லனாகவும் மிரட்டியுள்ளனர். அதேபோல், மேக்கிங், பிஜிஎம் என டைகர் 3 செம்ம விஷுவல் ட்ரீட்டாக அமைந்துள்ளது. ஹிருத்திக் ரோஷனின் கேரக்டரும் அட்டாகாசம் என நெட்டிசன் விமர்சனம் செய்துள்ளார்.
இன்னொரு நெட்டிசன், டைகர் 3 படத்துக்கு 4.5 ரேட்டிங் கொடுத்துள்ளார். மேலும் டைகர் 3 பக்கா ஆக்ஷன், எமோஷன், சர்ப்ரைஸ் நிறைந்த கதை எனவும் பாராட்டியுள்ளார்.
டைகர் 3 திரையிடப்படும் தியேட்டர்கள் விளையாட்டு மைதானம் போல இருப்பதாக நெட்டிசன் ஒருவர் தெரிவித்துள்ளார். சல்மான் கான், கத்ரினா கைஃப் நடனமாடும் பாடலில் ரசிகர்கள் அனைவரும் செல்போன் டார்ச் எரியவிட்டு வைப் கொடுத்துள்ளனர். இன்னும் சிலர் சல்மானின் டான்ஸை வீடியோ எடுத்து வைரலாக்கி வருகின்றனர்.
இன்னொரு ரசிகர் டைகர் 3 படத்தை தொடர்ந்து இரண்டாவது முறையாக பார்க்கவுள்ளதாகக் கூறியுள்ளார். ஷாருக்கானின் பதான் கேமியோ ரோல் என்ட்ரியாகும் காட்சியை பார்ப்பதற்காகவே மீண்டும் செல்வதாக கூறியுள்ளார்.

அதேநேரம் இந்தியை தவிர மற்ற மொழி ரசிகர்களிடம் டைகர் 3 படத்துக்கு எதிர்பார்த்தளவில் வரவேற்பு கிடைக்கவில்லை. இதனால் டைகர் 3 படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் பெரியளவில் இருக்குமா என்பது சந்தேகமே.


Click it and Unblock the Notifications











