»   »  திருமா பட பாடல் கேசட்: ராமதாஸ் வெளியிட்டார் திரைப்படங்கள் மூலம் நல்ல செய்தியை மக்களிடையே பரப்ப திரையுலகினர் முன்வர வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் நடித்துள்ள அன்புத்தோழி படத்தின் பாடல் கேசட் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கேசட்டை வெளியிட்ட ராமதாஸ் பேசுகையில், என்னைப் பற்றியும், திருமாவளவன் பற்றியும் திரையுலகில் ஒரு கருத்து நிலவுகிறது. அது தவறு. நாங்கள் திரைப்படங்களுக்கோ அல்லது திரைத்துறைக்கோ எதிரிகள் அல்ல. தமிழில் பெயர் வையுங்கள் என்று மட்டுமே கோருகிறோம். சேரனிடம் ஆட்டோகிராப் என்று பெயர் வைக்காமல் தமிழில் வைத்திருந்தால் படம் ஓடியிருக்குமா என்று கேட்டேன். ஓடியிருக்கும் என்றார். பிறகு ஏன் தமிழில் வைக்கவில்லை என்று கேட்டேன். அதற்கு அவர், இனிமேல் தமிழிலேயே வைப்பேன் என்றார். தமிழிலேயே பெயர் வைக்க மாட்டேன் என்று அவர் அடம் பிடிக்கவில்லை, பிடிவாதம் பிடிக்கவில்லை. இப்போது நிறையப் பேர் தமிழிலேயே படங்களுக்குப் பெயர் வைக்கிறார்கள். அவர்களை நான் பாராட்டுகிறேன். சினிமா படங்கள் தமிழ்ப் பெயரில் வர வேண்டும், பண்பாட்டை வளர்க்கும் விதமாக இருக்க வேண்டும் என்றுதான் பாடுபடுகிறோம். இதைக் கொச்சைப்படுத்த வேண்டாம். இவருக்கு கதை தயார், அவருக்கு கதை தயார் என்கிறார்கள். மக்களுக்கான கதை எங்கே? பண்பாட்டை சீரழிக்கக் கூடாது, வன்முறை ஆபாசம் கூடாது என்கிறோம். இவை இல்லாத தவமாய் தவமிருந்து போன்ற நல்ல படங்களும் வரத்தான் செய்கின்றன. பாடல்கள் படங்களில் மட்டுமா வருகிறது. திருமண நிகழ்ச்சிகள், பொது நிகழ்ச்சிகள், வீட்டு நிகழ்ச்சிகளிலும் பாடல்கள் ஒளிபரப்பாகின்றன, ஒலிபரப்பாகின்றன. எனவே மோசமான கருத்துக்களை பிரதிபலிக்கும் பாடல்களால் சமூகத்திற்கு எவ்வளவு பாதிப்பு ஏற்படும் என்பதை திரையுலகினர் யோசிக்க வேண்டும். புதுமுகங்களை வைத்து குறைந்த செலவில் படங்கள் தயாரிக்கும் இயக்குனர்கள் ஏராளமான பேர் உள்ளனர். அவர்களை திரையுலகம் ஆதரிக்க வண்டும், நாங்கள் ஆதரிக்கக் காத்திருக்கிறோம். அவர்களை திரையுலகம் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். திரைப்படங்கள் மூலம் ஆபாசத்தைப் பரப்பாதீர்கள், நல்ல செய்திகளை கொண்டு செல்லுங்கள் என்றார் ராமதாஸ். திருமாவளவன் பேசுகையில், நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிடவே நான் திரைப் படங்களில் நடிக்கிறேன் என்று கூறுகிறார்கள். அப்படி ஒரு எண்ணமே எனக்கு இல்லை. நான் நடிக்க வேண்டும் என்று இந்தப் படத்தின் தயாரிப்பாளர்கள் கேட்டபோது, என்ன கிண்டல் செய்கிறீர்களா என்று கேட்டேன். ஆனால் தமிழை வைத்து என்னை வளைத்து விட்டார்கள். ஈழப் போராட்டம் குறித்த படம் என்பதால், எனக்குள் இருக்கிற தமிழ் தேசிய உணர்வை அங்கீகரிக்கிறார்கள் என்பதால் ஒப்புக் கொண்டேன். தொடர்ந்து நடிக்கும் எண்ணம் இல்லை. இருப்பினும், தமிழ் தேசிய இயக்கத்தை பரப்புகிற படமாக இருந்தால் வாய்ப்பை நழுவ விட மாட்டேன் என்றார் திருமா. நிகழ்ச்சியில், முன்னாள் மத்திய அமைச்சர் திருநாவுக்கரசர், கலைப்புலி தாணு, கேயார், சீமான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

திருமா பட பாடல் கேசட்: ராமதாஸ் வெளியிட்டார் திரைப்படங்கள் மூலம் நல்ல செய்தியை மக்களிடையே பரப்ப திரையுலகினர் முன்வர வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் நடித்துள்ள அன்புத்தோழி படத்தின் பாடல் கேசட் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கேசட்டை வெளியிட்ட ராமதாஸ் பேசுகையில், என்னைப் பற்றியும், திருமாவளவன் பற்றியும் திரையுலகில் ஒரு கருத்து நிலவுகிறது. அது தவறு. நாங்கள் திரைப்படங்களுக்கோ அல்லது திரைத்துறைக்கோ எதிரிகள் அல்ல. தமிழில் பெயர் வையுங்கள் என்று மட்டுமே கோருகிறோம். சேரனிடம் ஆட்டோகிராப் என்று பெயர் வைக்காமல் தமிழில் வைத்திருந்தால் படம் ஓடியிருக்குமா என்று கேட்டேன். ஓடியிருக்கும் என்றார். பிறகு ஏன் தமிழில் வைக்கவில்லை என்று கேட்டேன். அதற்கு அவர், இனிமேல் தமிழிலேயே வைப்பேன் என்றார். தமிழிலேயே பெயர் வைக்க மாட்டேன் என்று அவர் அடம் பிடிக்கவில்லை, பிடிவாதம் பிடிக்கவில்லை. இப்போது நிறையப் பேர் தமிழிலேயே படங்களுக்குப் பெயர் வைக்கிறார்கள். அவர்களை நான் பாராட்டுகிறேன். சினிமா படங்கள் தமிழ்ப் பெயரில் வர வேண்டும், பண்பாட்டை வளர்க்கும் விதமாக இருக்க வேண்டும் என்றுதான் பாடுபடுகிறோம். இதைக் கொச்சைப்படுத்த வேண்டாம். இவருக்கு கதை தயார், அவருக்கு கதை தயார் என்கிறார்கள். மக்களுக்கான கதை எங்கே? பண்பாட்டை சீரழிக்கக் கூடாது, வன்முறை ஆபாசம் கூடாது என்கிறோம். இவை இல்லாத தவமாய் தவமிருந்து போன்ற நல்ல படங்களும் வரத்தான் செய்கின்றன. பாடல்கள் படங்களில் மட்டுமா வருகிறது. திருமண நிகழ்ச்சிகள், பொது நிகழ்ச்சிகள், வீட்டு நிகழ்ச்சிகளிலும் பாடல்கள் ஒளிபரப்பாகின்றன, ஒலிபரப்பாகின்றன. எனவே மோசமான கருத்துக்களை பிரதிபலிக்கும் பாடல்களால் சமூகத்திற்கு எவ்வளவு பாதிப்பு ஏற்படும் என்பதை திரையுலகினர் யோசிக்க வேண்டும். புதுமுகங்களை வைத்து குறைந்த செலவில் படங்கள் தயாரிக்கும் இயக்குனர்கள் ஏராளமான பேர் உள்ளனர். அவர்களை திரையுலகம் ஆதரிக்க வண்டும், நாங்கள் ஆதரிக்கக் காத்திருக்கிறோம். அவர்களை திரையுலகம் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். திரைப்படங்கள் மூலம் ஆபாசத்தைப் பரப்பாதீர்கள், நல்ல செய்திகளை கொண்டு செல்லுங்கள் என்றார் ராமதாஸ். திருமாவளவன் பேசுகையில், நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிடவே நான் திரைப் படங்களில் நடிக்கிறேன் என்று கூறுகிறார்கள். அப்படி ஒரு எண்ணமே எனக்கு இல்லை. நான் நடிக்க வேண்டும் என்று இந்தப் படத்தின் தயாரிப்பாளர்கள் கேட்டபோது, என்ன கிண்டல் செய்கிறீர்களா என்று கேட்டேன். ஆனால் தமிழை வைத்து என்னை வளைத்து விட்டார்கள். ஈழப் போராட்டம் குறித்த படம் என்பதால், எனக்குள் இருக்கிற தமிழ் தேசிய உணர்வை அங்கீகரிக்கிறார்கள் என்பதால் ஒப்புக் கொண்டேன். தொடர்ந்து நடிக்கும் எண்ணம் இல்லை. இருப்பினும், தமிழ் தேசிய இயக்கத்தை பரப்புகிற படமாக இருந்தால் வாய்ப்பை நழுவ விட மாட்டேன் என்றார் திருமா. நிகழ்ச்சியில், முன்னாள் மத்திய அமைச்சர் திருநாவுக்கரசர், கலைப்புலி தாணு, கேயார், சீமான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Posted By:
Subscribe to Oneindia Tamil

திரைப்படங்கள் மூலம் நல்ல செய்தியை மக்களிடையே பரப்ப திரையுலகினர் முன்வர வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் நடித்துள்ள அன்புத்தோழி படத்தின் பாடல் கேசட் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கேசட்டை வெளியிட்ட ராமதாஸ் பேசுகையில்,

என்னைப் பற்றியும், திருமாவளவன் பற்றியும் திரையுலகில் ஒரு கருத்து நிலவுகிறது. அது தவறு. நாங்கள் திரைப்படங்களுக்கோ அல்லது திரைத்துறைக்கோ எதிரிகள் அல்ல. தமிழில் பெயர் வையுங்கள் என்று மட்டுமே கோருகிறோம்.

சேரனிடம் ஆட்டோகிராப் என்று பெயர் வைக்காமல் தமிழில் வைத்திருந்தால் படம் ஓடியிருக்குமா என்று கேட்டேன். ஓடியிருக்கும் என்றார். பிறகு ஏன் தமிழில் வைக்கவில்லை என்று கேட்டேன். அதற்கு அவர், இனிமேல் தமிழிலேயே வைப்பேன் என்றார்.

தமிழிலேயே பெயர் வைக்க மாட்டேன் என்று அவர் அடம் பிடிக்கவில்லை, பிடிவாதம் பிடிக்கவில்லை.

இப்போது நிறையப் பேர் தமிழிலேயே படங்களுக்குப் பெயர் வைக்கிறார்கள். அவர்களை நான் பாராட்டுகிறேன். சினிமா படங்கள் தமிழ்ப் பெயரில் வர வேண்டும், பண்பாட்டை வளர்க்கும் விதமாக இருக்க வேண்டும் என்றுதான் பாடுபடுகிறோம். இதைக் கொச்சைப்படுத்த வேண்டாம்.

இவருக்கு கதை தயார், அவருக்கு கதை தயார் என்கிறார்கள். மக்களுக்கான கதை எங்கே? பண்பாட்டை சீரழிக்கக் கூடாது, வன்முறை ஆபாசம் கூடாது என்கிறோம். இவை இல்லாத தவமாய் தவமிருந்து போன்ற நல்ல படங்களும் வரத்தான் செய்கின்றன.

பாடல்கள் படங்களில் மட்டுமா வருகிறது. திருமண நிகழ்ச்சிகள், பொது நிகழ்ச்சிகள், வீட்டு நிகழ்ச்சிகளிலும் பாடல்கள் ஒளிபரப்பாகின்றன, ஒலிபரப்பாகின்றன. எனவே மோசமான கருத்துக்களை பிரதிபலிக்கும் பாடல்களால் சமூகத்திற்கு எவ்வளவு பாதிப்பு ஏற்படும் என்பதை திரையுலகினர் யோசிக்க வேண்டும்.

புதுமுகங்களை வைத்து குறைந்த செலவில் படங்கள் தயாரிக்கும் இயக்குனர்கள் ஏராளமான பேர் உள்ளனர். அவர்களை திரையுலகம் ஆதரிக்க வண்டும், நாங்கள் ஆதரிக்கக் காத்திருக்கிறோம். அவர்களை திரையுலகம் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

திரைப்படங்கள் மூலம் ஆபாசத்தைப் பரப்பாதீர்கள், நல்ல செய்திகளை கொண்டு செல்லுங்கள் என்றார் ராமதாஸ்.

திருமாவளவன் பேசுகையில், நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிடவே நான் திரைப் படங்களில் நடிக்கிறேன் என்று கூறுகிறார்கள். அப்படி ஒரு எண்ணமே எனக்கு இல்லை. நான் நடிக்க வேண்டும் என்று இந்தப் படத்தின் தயாரிப்பாளர்கள் கேட்டபோது, என்ன கிண்டல் செய்கிறீர்களா என்று கேட்டேன்.

ஆனால் தமிழை வைத்து என்னை வளைத்து விட்டார்கள். ஈழப் போராட்டம் குறித்த படம் என்பதால், எனக்குள் இருக்கிற தமிழ் தேசிய உணர்வை அங்கீகரிக்கிறார்கள் என்பதால் ஒப்புக் கொண்டேன். தொடர்ந்து நடிக்கும் எண்ணம் இல்லை.

இருப்பினும், தமிழ் தேசிய இயக்கத்தை பரப்புகிற படமாக இருந்தால் வாய்ப்பை நழுவ விட மாட்டேன் என்றார் திருமா.

நிகழ்ச்சியில், முன்னாள் மத்திய அமைச்சர் திருநாவுக்கரசர், கலைப்புலி தாணு, கேயார், சீமான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil