Mission Impossible 8 Review: மிஷன் இம்பாசிபிள் 8 விமர்சனம்.. ஏஐ பூதத்தை ஜாடிக்குள் அடைத்தாரா டாம் க்ரூஸ்?

Rating:
4.0/5
Star Cast: டாம் க்ரூஸ், ஹெய்லி அட்வெல்
Director: கிறிஸ்டோபர் மெக்குவாரி

லாஸ் ஏஞ்சல்ஸ்: 1996ம் ஆண்டு மே 22ம் தேதி மிஷன் இம்பாசிபிள் படத்தின் முதல் பாகம் வெளியானது. அதன் இறுதி பாகம் என சொல்லப்படும் 8வது பாகமான மிஷன் இம்பாசிபிள் தி ஃபைனல் ரெக்கனிங் (Mission Impossible: The Final Reckoning) மே 17, 2025ம் ஆண்டு உலகம் முழுவதும் வெளியாகி டாம் க்ரூஸ் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

62 வயதிலும் தனது ரசிகர்களுக்காக எந்தவொரு டூப்பும் பயன்படுத்தாமல் டாம் க்ரூஸ் இந்த படத்தில் செய்திருக்கும் 2 பிரம்மாண்ட ஆக்‌ஷன் சீக்வென்ஸ் போதும் கொடுத்த காசுக்கு படம் வொர்த் என சொல்லிவிட்டு வரலாம்.

Tom Cruise s Mission  Impossible - The Final Reckoning Review in Tamil

வழக்கமாக ஜேம்ஸ் பாண்ட் மற்றும் மிஷன் இம்பாசிபிள் போன்ற எந்தவொரு ஏஜென்ட் படமாக இருந்தாலும் ஒரு சைக்கோ எதிரி உலகை அழிக்க நினைக்க அதனை ஹீரோ எப்படி முறியடிக்கிறான் என்பது தான் கதையாக இருக்கும். மிஷன் இம்பாசிபிள் டெத் ரெக்கனிங் படம் கடந்த 2023ம் ஆண்டு வெளியான போது அந்த படத்தில் முதல் முறையாக 'தி என்ட்டிட்டி' எனப்படும் ஏஐ தொழில்நுட்பத்தை வில்லனாக காட்டியிருந்தார் டாம் க்ரூஸ். அதை வீழ்த்தினாரா? அல்லது உலகத்துக்காக டாம் க்ரூஸ் செய்த தியாகங்கள் என்ன? படம் பார்க்க வொர்த்தா? என்ன பிரச்னை இருக்கு? என்பது குறித்து விரிவாக பார்க்கலாம் வாங்க..

மிஷன் இம்பாசிபிள் ஃபைனல் ரெக்கனிங் கதை: மிஷன் இம்பாசிபிள் டெத் ரெக்கனிங் படத்தின் தொடர்ச்சி தான் இந்த படம். கடந்த பாகத்தை இயக்கிய கிறிஸ்டோபர் மெக்குவாரி இயக்கத்தில் டாம் க்ரூஸ், ஹெய்லி அட்வெல், எசாய் மொரேல்ஸ் மற்றும் சைமன் பெக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கடந்த பாகத்திலேயே ஏஐ எப்படி உலகை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சி செய்கிறது. அதை முறியடிக்க முடியாமல் படத்தின் நாயகனான ஈத்தன் ஹண்ட் தடுமாறுவதை பார்த்திருந்தோம். இந்த படத்தில் தனது மிஷனை வெற்றிகரமாக முடிக்கவும் அழித்தாலும் உலகை அழித்துவிடும் அளவுக்கு பூதாகரமான பிரச்னையாக மாறி நிற்கும் ஏஐ வில்லனை டாம் க்ரூஸ் கட்டுப்படுத்தினாரா? இல்லையா? என்பது தான் இந்த கதை.

Tom Cruise s Mission  Impossible - The Final Reckoning Review in Tamil

படம் எப்படி இருக்கு?: தனது டீமுடன் என்டிட்டியை அழிக்க முடிவு செய்யும் டாம் க்ரூஸுக்கு தன்னை அழித்தால் உலகம் என்ன ஆகும் என்பதை அந்த என்டிட்ட்டியே ஒரு மெஷின் மூலமாக கண்களுக்குள் எதிர்காலத்தை காட்டுகிறது. மேலும், ஈத்தன் ஹண்ட் ரகசியங்களையும் அது தெரிந்துக் கொள்கிறது. உலகத்தின் பாதுகாப்பான ஒரு சர்வர் ரூமில் தான் ஒளிந்துக் கொண்டு உலக நாடுகளின் டெஃபன்ஸ் சிஸ்டத்தை கட்டுக்குள் கொண்டு வந்து நியூக்லியர் ஏவுகணை தாக்குதலை நடத்தி பேரழிவை உண்டாக்கும் முயற்சியில் ஈத்தன் ஹண்ட்டையே பகடை காயாக மாற்றி விடுகிறது.

கடந்த பாகத்தில் வில்லனாக இருந்து ஈத்தன் ஹண்ட்டின் காதலியை கொன்ற கேப்ரியல் இன்னொரு பக்கம் அந்த என்டிட்டியை கட்டுப்படுத்த போராடுகிறான். இன்னொரு பக்கம் அமெரிக்காவின் கறுப்பு பெண் ஜனாதிபதி ஈத்தனை சரண்டராக சொல்கிறார். தனது ஆருயிர் நண்பன் லூத்தரையும் கேப்ரியல் கொன்றுவிட்டு அவனிடம் இருந்து ஒரு பொருளை எடுத்துக் கொண்டு எஸ்கேப் ஆகிறார். ஏஐ அரக்கன் ஒவ்வொரு நியூக்லியர் சக்தி மிகுந்த நாடுகளை கன்ட்ரோலில் எடுத்து வர பதில் தாக்குதல் நடத்தினால் தான் அமெரிக்காவை காப்பாற்ற முடியும் என்கிற நிலை உருவாகிறது. ஈத்தன் ஜனாதிபதியிடம் 3 நாட்கள் அவகாசம் கேட்க, ஜனாதிபதி அதற்கு உத்தரவு கொடுத்தாரா? ஏஐ பூதத்தை ஈத்தன் கட்டுப்படுத்தினாரா? இத்துடன் இந்த மிஷன் இம்பாசிபிள் மொத்தமாக முடிகிறதா? என பல கேள்விகளுக்கு பதிலாக இந்த படம் உருவாகி இருக்கிறது.

Tom Cruise s Mission  Impossible - The Final Reckoning Review in Tamil

ரெண்டு பெரிய சம்பவம் இருக்கு: படத்தின் மையக் கதையை நோக்கித்தான் ஆரம்பத்தில் இருந்தே ஒவ்வொரு காட்சிகளும் நகர்கின்றன. மிஷன் இம்பாசிபிள் முதல் பாகம் வெளியான நாள், ஏஐ அரக்கன் முளைக்க காரணமும் உலக நாடுகள் அனைத்தும் 3ம் போர் நடத்தவும் ஈத்தன் ஆரம்பத்தில் செய்த ஒரு தவறு தான் என கத்தி அவர் பக்கமே திரும்புவதும் அதை தானே சரி செய்ய வேண்டும் என்பதற்காக மூழ்கிய ரஷ்ய நீர்மூழ்கிக் கப்பலுக்குள் சென்று அந்த சோர்ஸ் கோடை எடுத்து வர டாம் க்ரூஸ் தனியாளாக கடலுக்கடியில் போராடும் காட்சிகள் எல்லாம் ரசிகர்களை சீட்டின் நுனிக்கே கொண்டு வந்து விடுகிறது.

அந்த ஆக்‌ஷன் சீக்வென்ஸ் முடிந்தவுடன் இரண்டாம் பாதியில் கிளைமேக்ஸ் காட்சியில் கேப்ரியலை சிறிய ரக விமானத்தில் தொங்கிக் கொண்டு துரத்தி தென்னாப்பிரிக்கா வானத்தில் டூப் போடாமல் பறக்கும் இரண்டு விமானங்களுக்கு இடையே டாம் க்ரூஸ் போடும் சண்டைக் காட்சிகள் எல்லாம் மரண மாஸ் சம்பவம். தனது ரசிகர்களுக்காக ஒரு நடிகன் இந்த அளவுக்கு ரிஸ்க் எடுத்து ஆக்‌ஷன் காட்சிகளை கொடுக்க முடியும் என்றால் அது உலகிலேயே டாம் க்ரூஸ் ஒருவரால் தான் முடியும் என்று கூறலாம். இந்த ரெண்டு சீன் பார்த்தாலே போதும் கொடுத்த காசுக்கு வொர்த் தான்.

பிளஸ்: வழக்கம் போல மிஷன் இம்பாசிபிள் எல்லா பாகங்களிலும் யார் பெரிய பிளஸ்ஸோ அதே டாம் க்ரூஸ் தான் இந்த முறையும் ஒட்டுமொத்த படத்தையும் தனது தோளில் சுமந்துக் கொண்டு நடித்துள்ளார். அவருக்கு அடுத்தபடியாக அவரது டீமுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் கறுப்பு நிறத்தவரை ஜனாதிபதியாக 2012 படத்தில் காட்டியிருப்பார்கள். அதே போல இந்த படத்தில் இதுவரை அமெரிக்காவை பெண் ஜனாதிபதிகளே ஆட்சி செய்யாத நிலையில், கறுப்பின பெண் ஜனாதிபதியாக காட்டிய விதமே சிறப்பு. செயற்கை நுண்ணறிவை முழுவதுமாக அழித்தாலும் பேராபத்து தான் என்கிற ஸ்க்ரின்பிளே வேறலெவல். ஃபிராசர் டக்கார்ட் கடலின் ஆழத்தில் நடக்கும் காட்சிகளையும் வானத்தில் இரு விமானங்கள் அந்தர் பல்டி அடிக்கும் காட்சியையும் படம்பிடித்த விதம் நம்மை ஸ்க்ரீனுக்குள்ளே கொண்டு செல்கிறது. எடிட்டிங், இசை என வழக்கம் போல அனைத்து இடங்களும் படத்துக்கு பெரிய பலம் தான்.

மைனஸ்: கடலில் இருந்து ஷூட்டை எல்லாம் கிழித்துப் போட்டுவிட்டு டாம் க்ரூஸ் வெறும் உடம்போடு வந்து தப்பிக்கும் காட்சிகளை இன்னமும் டீப்பாக காட்டியிருக்கலாம். எப்படியும் ஈத்தன் ஹண்ட் தப்பித்து விடுவார் என்று ரசிகர்களுக்கே தெரியும் நிலையில், அதற்கான முன் பில்டப்புகள் அதிகமாக வைக்கப்பட்ட நிலையில், அந்த காட்சியை சர்வ சாதாரணமாக ஹேண்டில் செய்த விதம் ரசிகர்களை அதிருப்தியில் ஆழ்த்தலாம். டெத் ரெக்கனிங் படத்தில் ஆரம்பத்தில் இருந்தே இருந்த சுவாரஸ்யம் இந்த பாகத்தில் ஆரம்பத்தில் இருந்து இல்லாமல் போன ஃபீலிங் மற்றும் கிளைமேக்ஸ் காட்சிகள் இப்படித்தான் இருக்க வேண்டும் என ஈத்தன் போடும் பிளான்கள் அப்படியே நடப்பது எல்லாம் படத்தை பலவீனப்படுத்துகிறது. கதை மற்றும் திரைக்கதையில் குறைகள் இருந்தாலும், டாம் க்ரூஸின் அபாரமான நடிப்பு நிச்சயம் இந்த படத்தை பாக்ஸ் ஆபீஸ் வெற்றிப் படமாக மாற்றும். அந்த கடைசி சீனை மிஸ் பண்ணாம பார்த்துடுங்க!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X