For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  இன்ஃபினிட்டி ஸ்டோன்ஸ் எல்லாம் பேப்பர் வெயிட்டா? அவெஞ்சர்ஸ் கதைகளை தூக்கி சாப்பிடும் லோகி!

  |

  சென்னை: தானோஸ் கையில் கிடைத்த அந்த இன்ஃபினிட்டி ஸ்டோன்களை வைத்து ஒரே சொடுக்கில் பாதி உலகத்தை அழித்து விட, டைம் டிராவல் செய்து அவெஞ்சர்ஸ்கள் உலகத்தை காக்கும் எண்ட் கேம் படத்திற்காக சுமார் 18 ஆண்டுகள் பல மார்வெல் படங்கள் உருவாகின.

  ஆனால், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகி உள்ள லோகி வெப்சீரிஸில், அந்த இன்ஃபினிட்டி ஸ்டோன்களை எல்லாம் பேப்பர் வெயிட்களாக பயன்படுத்துகிறேன் என அதிகாரி ஒருவர் லோகியிடம் சொல்வதை பார்த்தால் அனைத்து மார்வெல் ரசிகர்களுக்கும் ஹார்ட் அட்டாக்கே வந்திருக்கும்.

   ரோல்ஸ் ராய்ஸ் விவகாரம்.. அபராதம் விதிக்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்தார் நடிகர் விஜய்! ரோல்ஸ் ராய்ஸ் விவகாரம்.. அபராதம் விதிக்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்தார் நடிகர் விஜய்!

  ஒவ்வொரு புதன்கிழமையும் புதிய எபிசோடுகள் வெளியாகி வருகின்றன. தமிழில் இதுவரை 3 எபிசோடுகள் வெளியாகி உள்ளன. அவெஞ்சர்ஸ் கதைகளை தூக்கி சாப்பிடும் லோகி எப்படி இருக்கு என்பது குறித்து இங்கே அலசுவோம்.

  யார் இந்த லோகி

  யார் இந்த லோகி

  மார்வெல் தயாரிப்பில் வெளியான தோர் படங்களில் தோரின் அண்ணனாக தோருக்கு வில்லனாக, குறும்புக்கார கடவுளாக வரும் கதாபாத்திரம் தான் இந்த லோகி. அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் முடிந்த பின்னரும் அவெஞ்சர்ஸ் கதாபாத்திரங்களுக்கு தனி கதைகளை உருவாக்கி ரசிகர்களை ஆச்சர்யப்படுத்த வாண்டா விஷன், ஃபால்கான் அண்ட் தி வின்டர் சோல்ஜர், பிளாக் விடோ மற்றும் லோகி என ஏகப்பட்ட கதைகள் வெளியாகி உள்ளன.

  நீங்க நல்லவரா கெட்டவரா

  நீங்க நல்லவரா கெட்டவரா

  லோகியின் கதாபாத்திரம் அவரை போலவே புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு நீங்க நல்லவரா இல்லை கெட்டவரா ரீதியிலான கதாபாத்திரம் தான். ஆஸ்கார்டு உலகத்தின் கடவுளான லோகி TVA எனும் காலத்தை பாதுகாக்கும் அமைப்பிடம் சிக்கிக் கொண்டு கொரோனா வேரியன்ட் போல தன்னை போல இருக்கும் ஒரு வேரியன்ட்டால் ஏற்பட்ட பாதிப்பை சரி செய்ய உதவுவதாக நடித்து ஏமாற்றி வரும் கதையாக இது வரை வெளியான லோகியின் 3 எபிசோடுகளும் அவரை வழக்கம் போல நெகட்டிவ் ஷேட்களுடனே காட்டி உள்ளன.

  கால பாதுகாவலர்கள்

  கால பாதுகாவலர்கள்

  தானோஸ் ஒரு சொடுக்கில் பாதி உலகத்தை அழித்த நிலையில், அந்த சம்பவத்தை நடக்க விடாமல் தடுக்க அவெஞ்சர்ஸ் டைம் டிராவல் பண்ணும் போது ஒரு இன்ஃபினிட்டி ஸ்டோனை திருடி அங்கிருந்து எஸ்கேப் ஆகும் லோகி கால பாதுகாவலர்கள் உருவாக்கிய அமைப்பான டிவிஏவிடம் சிக்கிக் கொள்கிறார்.

  பிரபஞ்சம் ரொம்ப பெருசு

  பிரபஞ்சம் ரொம்ப பெருசு

  உலகம், ஆஸ்கார்ட் என ஒவ்வொரு கிரகத்தையும் கட்டுப்படுத்தும் பிரபஞ்ச சக்தி கொண்ட 3 கால பாதுகாவலர்கள் பற்றியும், கடிகார அனிமேஷன் பொம்மை சொல்லும் கதையால் காலத்தை ஏமாற்றும் மனிதர்களை மீண்டும் சரியான காலத்திற்கு கொண்டு சேர்த்து நடக்க வேண்டியது சரியாக நடந்தே தீர வேண்டும் என்பதை கண்காணிக்கும் அமைப்பிடம் தான் தற்போது லோகி சிக்கி உள்ளார்.

  இன்னொரு லோகி

  இன்னொரு லோகி

  லோகி வெப்சீரிஸில் லோகியை ஹீரோவாக காட்ட இன்னொரு லோகி கதையை முதல் இரண்டு எபிசோடுகளில் சொல்கின்றனர். ஏற்கனவே டிவிஏ அமைப்பிடம் வந்த லோகி இவர்களை ஏமாற்றி விட்டு தப்பித்து விட்டார் என்றும், இன்னொரு டைம் லைன் லூப்பில் வரும் லோகியின் உதவியை நாடி வில்லன் லோகியை பிடிக்கப் போவதாக மொபியஸ் கதாபாத்திரம் குறும்புக்கார கடவுளான லோகியின் உதவியை நாடுகிறது. இதே போலத்தான் கதையும் சற்று தலை சுற்றும் விதமாகவே காலத்தை இஷ்டத்துக்கு கையாண்டு நம்மை கிறுகிறுக்க வைக்கிறது.

  பேராசை

  பேராசை

  கால பாதுகாவலர்களையே காலி செய்து விட்டு மொத்த பிரபஞ்சத்தையும் ஆட்சி செய்ய பேராசை கொள்ளும் லோகி தன்னைப் போலவே இருக்கும் இன்னொரு வேரியன்ட்டை பிடிக்க உதவுவதாக மொபியஸ் தலையில் மிளகாய் அரைத்து இரண்டாவது எபிசோடில் அந்த வேரியன்ட் லோகியுடன் எஸ்கேப் ஆகி செல்கிறது.

  அங்க தான் ட்விஸ்ட்

  அங்க தான் ட்விஸ்ட்

  லோகியை போல இன்னொரு லோகி இருப்பாரா? அல்லது லூசிபர் கடவுள் கதையை சொல்கின்றனரா என ஏகப்பட்ட ட்விஸ்ட்களை வைத்து விட்டு அந்த இன்னொரு லோகி வேரியன்ட்டை காட்டும் போது அங்க ஒரு ட்விஸ்ட் வைத்துள்ளனர். அது லோகியே அல்ல ஒரு பெண். அந்த கதாபாத்திரத்தின் பெயர் சில்வி என இன்னொரு கதையை ஆரம்பித்து ரசிகர்களை அடுத்த எபிசோடு எப்போது வரும் என ஆர்வத்தை தூண்டி வருகின்றனர்.

  பேரழிவில் ஒளிந்து கொள்பவன்

  பேரழிவில் ஒளிந்து கொள்பவன்

  பேரழிவு நடக்கும் போது அங்கே உள்ள மக்கள் அனைவரும் இறந்து விடுவார்கள் என்றும், அந்த இடத்தில் தான் லோகி ஒளிந்திருப்பான் என்றும் மொபியஸிடம் கதை சொல்லி லோகி வேரியன்ட்டை பிடிக்க உதவுவது போல நடித்து அந்த வேரியன்ட்டுடன் கைகோர்த்துக் கொள்ளும் லோகி, உலகத்தின் பெரிய பேரழிவில் சிக்கிக் கொள்ளும் விதமாக மூன்றாவது எபிசோடு முடிவடைந்திருக்கிறது.

  இப்படியே பண்ணுங்க

  இப்படியே பண்ணுங்க

  எல்லா பெரிய வெப்சீரிஸும் இதே போலவே வாரம் ஒரு எபிசோடை வெளியிட்டால் பார்க்க ஆர்வமாக இருக்கும். ஒரே மூச்சில் 8 மணி நேரம் 10 மணி நேரம் என பார்க்க முடியவில்லை. லோகியாக நடித்துள்ள டாம் ஹிடில்ஸ்டன், மொபியஸாக நடித்துள்ள ஓவன் வில்சன் மற்றும் சில்வியாக நடித்துள்ள சோபியா டி மார்டினா என பலரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர். ஆங்கிலத்தில் அனைத்து லோகி எபிசோடுகளும் வெளியிடப்பட்டுவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

  English summary
  Marvel cinematic universe next big release Loki webseries streaming in Disney Plus Hotstar. God of Mischief Loki character done by the same Tom Hiddleston. TVA concept and Time travel script engaging the audience very well.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X