For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  Top Gun Review: ஃபைட்டர் ஜெட் விமானியாக டாம் க்ரூஸ் தனது மிஷன் இம்பாசிபிளை முடித்தாரா? இல்லையா?

  |

  Rating:
  4.0/5

  நடிகர்கள்: டாம் க்ரூஸ், மைல்ஸ் டெல்லர், ஜெனிஃபர் கோனலி

  இசை: லேடி காகா, ஹான்ஸ் ஸிம்மர்

  இயக்கம்: ஜோசப் கொசின்ஸ்கி

  ரேட்டிங்: 4/5

  லாஸ் ஏஞ்சல்ஸ்: இயக்குநர் டோனி ஸ்காட் இயக்கத்தில் டாம் க்ரூஸ் கடந்த 1986ம் ஆண்டு நடித்த டாப் கன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

  Top Gun Maverick Tamil Review | Yessa ? Bussa ? | Filmibeat Tamil

  அப்போதே ரியல் ஃபைட்டர் ஜெட்களை ஓட்டி சாகசம் செய்து நடித்த டாம் க்ரூஸ், 2022ல் மீண்டும் ஃபைட்டர் ஜெட் விமானியாக டாம் கன் மேவரிக் படத்தில் வானில் ஏகப்பட்ட மாயாஜாலங்களை நிகழ்த்தி உள்ளார்.

  அனிருத்திற்கு விரைவில் டும்டும்டும்...பொண்ணு அவர் இல்லையாம்...அப்போ யாரு? அனிருத்திற்கு விரைவில் டும்டும்டும்...பொண்ணு அவர் இல்லையாம்...அப்போ யாரு?

  செய்ய முடியாத சாகசங்களை நிகழ்த்திக் காட்டும் படங்களிலேயே நடிப்பது டாம் க்ரூஸுக்கு இன்னமும் போர் அடிக்கவில்லை போலத்தான் தெரிகிறது. டான் கன் திரைப்படம் டாம் க்ரூஸின் இன்னொரு மிஷன் இம்பாசிபிள் படமாகவே வரும் வெள்ளிக்கிழமை இந்தியாவில் வெளியாகிறது.

  கேன்ஸில் திரையிடல்

  கேன்ஸில் திரையிடல்

  மாதவனின் ராக்கெட்டரி, பார்த்திபனின் இரவின் நிழல் உள்ளிட்ட படங்களை போல டாம் க்ரூஸின் டாப் கன் மேவரிக் திரைப்படமும் கேன்ஸ் திரைப்பட விழாவில் சமீபத்தில் திரையிடப்பட்டு மிகப்பெரிய பாராட்டுக்களை பெற்றது. இந்தியாவில் படத்தை புரமோட் செய்யும் விதமாக சிறப்புக் காட்சி ஒன்று போடப்பட்டிருந்த நிலையில், டாப் கன் விமர்சனம் அதன் ரிலீசுக்கு முன்னதாக இதோ உங்களுக்காக..

  என்ன கதை

  என்ன கதை

  தன்னுடன் பணியாற்றிய நபர்கள் எல்லாம் பல பேட்ஜ்களை அணிந்து கொண்டு உயர் பதவியில் இருக்கும் போது, 30 ஆண்டுகளுக்கு பிறகும் இன்னமும் ஃபைட்டர் ஜெட் விமானியாகவே டாம் க்ரூஸ் எந்தவொரு புரமோஷனும் கிடைக்காமல் இருந்து வருகிறார். அதற்கு காரணம், அவரது அதிரடி தான். இந்நிலையில், சட்டவிரோதமாக ஒரு மலைக்கு நடுவே பயங்கர பாதுகாப்புகளுடன் இருக்கும் யுரேனியம் ஆயுத கிடங்கை அழிக்கும் டாஸ்க்கில் புதிய டீமுக்கு பயிற்சி கொடுத்துக் கொண்டு எப்படி அந்த செம டஃப் ஆன டாஸ்க்கை செய்து முடிக்க கிளம்பும் டாம் க்ரூஸ் அதனை செய்தாரா? இல்லையா? என்பது தான் கதை.

  எமோஷனல் அதிகம்

  எமோஷனல் அதிகம்

  உலக ரசிகர்களை கவர வேண்டும் என்றால் நிச்சயம் ஹாலிவுட் படமாக இருந்தாலும் எமோஷனல் காட்சிகள் சரியாக பொருந்த வேண்டும். இந்த படத்தில் உயிரிழந்த தன்னுடைய ஆருயிர் தோழனின் மகன் (மைல்ஸ் டெல்லர்) தனது டீமில் இருக்க, அவனை காப்பாற்றும் கடமையுடன் டாம் க்ரூஸ் ஒவ்வொரு காட்சிகளிலும் எமோஷனை எகிற வைத்துள்ளார். அதே சமயத்தில், டாம் க்ரூஸுக்கு எதிராகவே அவர் செயல்படுவதும் ரசிக்க வைக்கிறது.

  பிபியை எகிற வைக்கும் இன்ட்ரோ

  பிபியை எகிற வைக்கும் இன்ட்ரோ

  ஃபைட்டர் ஜெட் விமானங்களை போர் கப்பலில் இருந்து பறக்கவிடும் காட்சிகள் தான் அறிமுகக் காட்சிகளாக இடம்பெற்றுள்ளன. அதன் பிறகு தான் டாம் க்ரூஸ் ஒரு பைக்கை எடுத்து ஓட்டிக் கொண்டு தடை செய்யப்பட்ட பகுதிக்கு வரும் காட்சியில் அவரை காட்டுகின்றனர். உயிரை உறைய வைக்கும் சாகசமாக ஜெட் விமானத்தை பூமியின் மேற்பறப்புக்கு ஓட்டிச் செல்லும் மிகவும் ரிஸ்க்கான சோதனையை மேற்கொள்கிறார். 9, 10 என அந்த மீட்டரில் காட்ட காட்ட நமக்கே பிபி எகிறுகிறது. கடைசியில் இன்னமும் உச்சத்துக்கு செல்ல வேண்டும் என நினைக்கும் இடத்தில் அந்த விமானம் கட்டுப்பாட்டை இழந்து கிராஷ் ஆகிறது. அதிலிருந்து எஜக்ட் ஆகும் டாம் க்ரூஸ் சாதாரணமாக ஒரு ரெஸ்டரன்ட்டுக்கு வந்து தண்ணி குடிக்கும் ஆரம்ப காட்சிக்கு நிச்சயம் திரை தீப்பிடிக்கும் என்பது கன்ஃபார்ம்.

  மிஷன் இம்பாசிபிள்

  மிஷன் இம்பாசிபிள்

  டாம் க்ரூஸின் மிஷன் இம்பாசிபிள் அடுத்த பாகத்திற்கு ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கும் நிலையில், டாப் கன் படத்திலும் ஒரு பெரிய மிஷன் இம்பாசிபிள் கதையை வைத்து அசத்தி இருக்கிறார் இயக்குநர் ஜோசப் கொசின்ஸ்கி. ஃபைட்டர் ஜெட் விமானங்கள் வான் வழியாக தாக்குதல் நடத்த வந்தால், ரேடார் மூலமாக சிக்னல் கிடைத்தாலே எதிரிப் படையினர் அடுத்த நொடியே சுட்டு வீழ்த்திவிடுவார்கள். இந்நிலையில், மலைகளுக்கு நடுவே ரேடாரில் சிக்காத வண்ணம் ரொம்பவே லோவாக ஃபைட்டர் ஜெட் விமானத்தை இயக்கிக் கொண்டு தனது இளம் படையுடன் எப்படி அந்த ஆயுதக் கிடங்கை நெருங்குகிறார் என்றும் அப்படி இருந்தும் அங்கே இவரது விமானம் சுட்டு வீழ்த்தப்படும் நிலையில், என்ன ஆகிறது என்பதை காட்சிகளின் வழியே கடத்தி இருப்பது ரசிகர்களை சீட் எட்ஜுக்கே கொண்டு வந்து விடும்.

  பிளஸ்

  பிளஸ்

  வரும் ஜூலை 3ம் தேதி வந்தால் டாம் க்ரூஸுக்கு 60 வயதாகிறது. இந்த வயதிலும் செம ஃபிட்டாக 40 வயது விமானி ஓட்டி என்று சொன்னால் நம்பும்படியாக அவரது தோற்றம் இருப்பதே பெரிய பிளஸ். ரியல் ஸ்டன்ட் காட்சிகளுக்கு பெயர் போன டாம் க்ரூஸ் டாப் கன் படத்திலும் ஏகப்பட்ட ரியல் ஸ்டன்ட்டுகளை செய்துள்ளார். ஜோசப் கொசின்ஸ்கியின் இயக்கம், லேடி காகா மற்றும் ஹான்ஸ் ஸிம்மர் இணைந்து கொடுத்துள்ள இசை, கிளாடியோ மிராண்டாவின் ஒளிப்பதிவு என ஒவ்வொன்றுமே படத்திற்கு பிளஸ் தான்.

  மைனஸ் இருக்கா

  அட்டகாசமான ஆரம்பத்துடன் தொடங்கும் டாப் கன் மேவரிக் படம் ஒவ்வொரு நிமிடமும் ஏகப்பட்ட ட்விஸ்ட்களுடன், பரபரக்கும் காட்சிகளுடன் நிறைந்துள்ளது. கடைசி 20 நிமிட கிளைமேக்ஸ் காட்சிகளில் டாம் க்ரூஸ் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட பின்னர், எதிரிகளிடம் இருந்த ஒரு ஓட்டை விமானத்தை எடுத்துக் கொண்டு தனது நண்பனின் மகனையும் காப்பாற்றும் காட்சிகள் எல்லாம் வெறித்தனம். இதற்கு நடுவே டிரைனிங் கொடுக்கும் காட்சிகள் மற்றும் பழைய நினைவுகளை டாம் க்ரூஸ் நினைத்துப் பார்க்கும் சில காட்சிகள் மட்டுமே லேக் ஆக தெரியும். ஆனால், அதுவும் படத்திற்கு தேவையாக இருப்பதால், நிச்சயம் இந்த படத்தில் பெரியளவில் மைனஸ் எல்லாம் இல்லை என்று தான் சொல்லவேண்டும். தியேட்டரில் படம் வந்தால் தாராளமாக டாம் க்ரூஸ் ரசிகர்கள் படத்தை கொண்டாடி தீர்க்கலாம்.

  English summary
  Tom Cruise once again stuns the world audience with his high peak air show stunts in Top Gun Maverick Movie. This movie connects strongly in emotional too.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X