Tourist Family Review: டூரிஸ்ட் ஃபேமிலி விமர்சனம்.. மனிதம் என்றைக்குமே ’மரித்து போகாது’!

Rating:
3.5/5
Star Cast: சசிகுமார், சிம்ரன்
Director: அபிஷன் ஜீவிந்த்

சென்னை: சசிகுமார், சிம்ரன், யோகி பாபு, ரமேஷ் திலக், இளங்கோ குமரவேல், மிதுன் ஜெய் சங்கர், கமலேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கியுள்ளார். முதல் படத்தை முடித்துவிட்டு அதன் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி மேடையிலேயே அழகாக தனது காதலை புரபோஸ் செய்து பலரது மனங்களை கவர்ந்த அபிஷன் ஜீவிந்த் தனது படத்தின் மூலமாகவும் ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்கள் மனங்களையும் கவர்வார் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை.

இலங்கைத் தமிழர்களை வைத்து படங்கள் எடுத்தாலே சோக கீதம் பாடுவது போலத்தான் படங்களை எடுக்க முடியும் என்கிற தொனியில் இருந்து மாறுபட்டு மனிதத்தை மகிழ்ச்சியைத் தூவியும் சொல்ல முடியும் என்கிற கோணத்தில் இளம் இயக்குநர் அருமையாக கையாண்டுள்ளார்.

Tourist Family Review in Tamil

பத்திரிகை காட்சி முடிந்த நிலையில், படத்தை பலரும் பாராட்டினர். பிரபலங்களுக்கான சிறப்புக் காட்சி மற்றும் தியேட்டர் ஓனர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு படத்தைப் போட்டுக் காட்ட அவர்களும் கடைசி வரை சிரித்தும் எமோஷனலாகியும் படத்தைக் கொண்டாடியுள்ளனர். ஃபீல் குட் மூவியாக உருவாகியுள்ள டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் நிறைகளையும் குறைகளையும் இங்கே முழு விமர்சனத்தில் பார்க்கலாம் வாங்க..

டூரிஸ்ட் ஃபேமிலி கதை: பொருளாதார நெருக்கடியில் இருக்கும் இலங்கையில் மிகவும் வறுமையில் வாடி வரும் சசிகுமாரின் குடும்பம் ராமேஸ்வரம் வழியாக திருட்டுத்தனமாக தப்பித்து தமிழ்நாட்டுக்கு வந்துவிடுகின்றனர். ஆரம்பத்திலேயே அவர்கள் போலீஸ் ஒருவரிடம் மாட்டிக் கொள்கின்றனர். ஆனால், அந்த குடும்பத்தின் இயல்பை பார்த்த அந்த காவல் அதிகாரி அவர்களை தப்பித்துப் போக விடுகிறார். அங்கிருந்து சென்னைக்கு வந்து ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி சகஜமான வாழ்க்கையை வாழலாம் என நினைத்தவர்களுக்கு ஒரு குண்டு வெடிப்பு சம்பவம் விசாரணை வளையத்திற்குள் அவர்களை கொண்டு வர அதற்கும் அவர்களுக்கும் சம்மந்தம் இருக்கா? இல்லையா? அதிலிருந்து அவர்கள் தப்பித்தார்களா? இல்லையா? என்பது தான் இந்த படத்தின் கதையாக உள்ளது.

படம் எப்படி இருக்கு?: அயோத்தி படத்துக்குப் பிறகு மீண்டும் மனிதத் தன்மையை நிலைநாட்டும் ஒரு கதையை சசிகுமார் தேர்வு செய்து நடித்த இடத்திலேயே பாராட்டுக்களை பெறுகிறார். வில்லியாகவும் சிறு சிறு கேமியோ ரோலிலும் நடித்து வரும் நடிகை சிம்ரனுக்கு இந்த படம் சிறப்பான தரமான சம்பவம் என்றே சொல்லலாம். சசிகுமார், சிம்ரனை தாண்டி அவர்களின் மகன்களாக நடித்திருக்கும் மிதுன் ஜெய் சங்கர் மற்றும் கமலேஷ் என இருவரது நடிப்பும் வேறலெவல். அதிலும், ஜோசப் குருவிலா என சொல்லி அதகளப்படுத்தும் சிறுவன் கமலேஷின் நடிப்பு தான் ஒட்டுமொத்த திரையரங்கையும் அடிக்கடி சிரிப்பலையில் ஆழ்த்துகிறது. படத்தை கடைசி வரை போரடிக்காமல் என்டர்டெயின் பண்ணிக் கொண்டே செல்கிறது.

Tourist Family Review in Tamil

பிளஸ்: மனிதம் என்றைக்கும் 'மரித்து போகாது' என்பதை அழகாக ஆணித்தரமாக இயக்குநர் தனது ஷார்ப்பான வசனங்களாலும் திறமையான திரைக்கதையாலும் கையாண்டு எடுத்துள்ள விதம் தான் படத்திற்கு பெரிய பிளஸ். இயக்குநரை தொடர்ந்து படத்தின் இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இன்னொரு ஹீரோவாகவே தனது முதல் பாடலில் இருந்தே கதையையும் கதையின் தன்மையையும் ரசிகர்களுக்குள் அழகாக கடத்தி விடுகிறார். பாடல்கள், பின்னணி இசை என அனைத்திலும் பக்காவாக ஸ்கோர் செய்துள்ளார். ரமேஷ் திலக்கின் நடிப்பும் அப்ளாஸ் அள்ளுகிறது. அரவிந்த் விஸ்வநாதனின் அழகான ஒளிப்பதிவு மற்றும் பரத் விக்ரமின் எடிட்டிங்கும் கூடுதல் பலம்.

மைனஸ்: சசிகுமார் கதாபாத்திரம் மட்டும் சற்றே யதார்த்தத்தை மிஞ்சி ஓவர் ரைட் பண்ண கதாபாத்திரமாக இயக்குநர் உருவாக்கியிருப்பது லைட்டா மைனஸ் ஆக பார்க்கப்படுகிறது. இலங்கைத் தமிழர் பிரச்சனையை சீரியஸாக சொல்லப் போகும் படம் போல டிரைலரை காட்டி விட்டு படம் முழுவதும் ஃபன்னாக கொண்டு போன நிலையில், சில இடங்களில் சில ரசிகர்கள் ஏமாற்றம் அடையாளம். ஆனால், மொத்தத்தில் இந்த டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் குடும்பத்துடன் கொண்டாட வேண்டிய ஃபீல் குட் படம் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X