The Road Twitter Review: த்ரிஷா தப்பித்தாரா? தடுமாறினாரா?.. தி ரோடு ட்விட்டர் விமர்சனம் இதோ!
சென்னை: அருண் வசீகரன் இயக்கத்தில் த்ரிஷா நடித்துள்ள உமன் சென்ட்ரிக் திரைப்படமான தி ரோடு இன்று வெளியாகி உள்ளது. இந்த மாத இறுதியில் விஜய்யின் லியோவில் அசத்த காத்திருக்கும் த்ரிஷா அதற்கு முன்னதாகவே தன்னுடைய அதிரடி நடிப்பை வெளிப்படுத்தி உள்ள தி ரோடு திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
டான்ஸிங் ரோஸ் நடிகர் ஷபீர், புதிய ஆதிகுணசேகரன் ஆக களமிறங்கி உள்ள வேல ராமமூர்த்தி, மியா ஜார்ஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள தி ரோடு திரைப்படம் எப்படி இருக்கு என நெட்டிசன்கள் கொடுத்துள்ள விமர்சனத்தை இங்கே பார்க்கலாம் வாங்க..

டீசன்ட்டான படம்: த்ரிஷா நடித்த உமன் சென்ட்ரிக் படங்களிலேயே தி ரோடு திரைப்படம் டீசன்ட்டான படமாக உள்ளது. கடைசி 30 நிமிடங்கள் படம் வேறலெவல் நெஞ்சை பதற வைக்கிறது. ஷபீர் இந்த படத்தில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார் என சித்தார்த் ஸ்ரீனிவாஸ் விமர்சித்துள்ளார்.
தலைவி த்ரிஷா: உமன் சென்ட்ரிக் படங்களிலேயே பெஸ்ட் படம் என்றால் அது இதுதான். தலைவி த்ரிஷாவின் நடிப்பு தாறுமாறு என இந்த நெட்டிசன் தனது விமர்சனத்தை கொடுத்துள்ளார்.

வொர்த் வாட்ச்: த்ரிஷா நடித்துள்ள தி ரோடு திரைப்படம் வொர்த் வாட்ச் என்றும் இந்த படத்துக்கு 9/10 ரேட்டிங் கொடுக்கலாம் என இந்த ரசிகர் படத்தை பாராட்டியுள்ளார்.
செம ட்விஸ்ட்: செம த்ரில்லிங்கான ட்விஸ்ட் டர்னிங் கதையாக இந்த படத்தை இயக்குநர் அருண் வசீகரன் இயக்கி உள்ளார். த்ரிஷா, ஷபீர் உள்ளிட்ட பலரும் நடிப்பால் செம அட்டகாசமாக படம் இருக்கிறது என்றும் நம்ம த்ரிஷாவின் சம்பவம் வேறலெவல் என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

திரிஷா ரசிகர்கள் ஹேப்பி: சவுத் குயின் த்ரிஷா ரசிகர்களுக்கு தேங்ஸ் கார்டு போட்ட நிலையில், அதனை ஷேர் செய்து த்ரிஷாவின் நடிப்பு வேற லெவல் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அடுத்து லியோ படத்திலும் த்ரிஷா ரசிகர்களுக்கு செம ட்ரீட் காத்துக் கொண்டிருக்கிறது.




Click it and Unblock the Notifications











