twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நவரசாவின் இரண்டாம் உணர்வு.. விஜய் சேதுபதியின் 'எதிரி" எப்படி? டிவிட்டர் விமர்சனம்!

    |

    சென்னை: நவரசாவில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள எதிரி படம் குறித்த விமர்சனங்களை நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

    மணிரத்னம் ஜெயேந்திர பஞ்சாபகேசன் தயாரிப்பில் நெட்டிபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள படம் நவரசா. ஆந்தாலஜி படமான 'நவரசா' ஒன்பது குறும்படங்களை உள்ளடக்கியது.

    ஒவ்வொரு படமும் கோபம், கருணை, தைரியம், வெறுப்பு, பயம், சிரிப்பு, காதல், அமைதி, வியப்பு ஆகிய ஒன்பது உணர்வுளை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.

    கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் பாபி சிம்ஹா மிரட்டும் நவரசா பற்றி கார்த்திக் சுப்புராஜ் கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் பாபி சிம்ஹா மிரட்டும் நவரசா பற்றி கார்த்திக் சுப்புராஜ்

    விஜய் சேதுபதி நடிப்பில் எதிரி

    விஜய் சேதுபதி நடிப்பில் எதிரி

    இதில் நவரசங்களில் இரண்டாம் உணர்வான கருணையை அடிப்படையாக கொண்டு இயக்குனர் பிஜாய் நம்பியார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் எதிரி. இந்தப் படத்தில் விஜய்சேதுபதி, பிரகாஷ் ராஜ், ரேவதி, அசோக்செல்வன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

    பிரகாஷ் ராஜை கொல்லும் விஜய் சேதுபதி

    பிரகாஷ் ராஜை கொல்லும் விஜய் சேதுபதி

    கணவன் மனைவியான பிரகாஷ் ராஜும் ரேவதியும் பேசாமல் உள்ளனர். அப்போது பிரகாஷ் ராஜ் வீட்டிற்கு வரும் விஜய் சேதுபதி வீட்டிலேயே வைத்து பிரகாஷ் ராஜை கொலை செய்கிறார். இதனால் அதிர்ச்சி அடையும் ரேவதி தனது கணவரை கொன்ற விஜய் சேதுபதியை மன்னிக்கிறாரா இல்லையா என்பதுதான் படம்.

    எதிரி படம் கலவையான விமர்சனங்கள்

    எதிரி படம் கலவையான விமர்சனங்கள்

    இந்நிலையில் இப்படம் குறித்த நெட்டிசன்கள் தங்களின் விமர்சனங்களை டிவிட்டரில் ஷேர் செய்து வருகின்றனர். அந்த வகையில் எதிரி படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. சிலர் படம் அருமை என்றும் சிலர் இன்னும் கொஞ்சம் அழுத்தமாய் சொல்லியிருக்கலாம் என்றும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

    ஆரம்பம் முதல் இறுதி வரை

    ஆரம்பம் முதல் இறுதி வரை

    நவரசாவில் எதிரி படத்தை பார்த்த இந்த நெட்டிசன், ஆரம்பம் முதல் இறுதி வரை இந்த படத்தில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. பிஜாய் நம்பியார் அதை சொல்லியிருக்கும் விதம் எனக்கு பிடித்துள்ளது. விஜய் சேதுபதிக்கும் பிரகாஷ் ராஜுக்கும் இடையிலான உரையாடல் என்னை ஸ்ட்ராங்காக வேட்டையாடி விட்டது. எடிட்டிங்குக்கும் ஷாட்ஸ்களும் அருமை.. டெய்லர் மேட் பர்ஃபாமன்ஸ் என பதிவிட்டுள்ளார்.

    விஜய் சேதுபதியின் ரசிகராக ஏமாற்றம்

    விஜய் சேதுபதியின் ரசிகராக ஏமாற்றம்

    எதிரி குறும்படத்தை பார்த்த இந்த ரசிகர், எதிரி வேலைக்கு ஆகவில்லை. விஜய் சேதுபதியின் ரசிகராக அவரது பர்ஃபாமன்ஸில் ஏமாற்றம்.. அவரது முகத்தில் குற்ற உணர்ச்சியே இல்லை.. அவரது ரோலில் வேறு யாராவது நடித்திருந்தால் ஏதாவது தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கலாம்.. ஆனால் இந்த கதை ரொம்பவே பழசு.. புதிதாக ஒன்றும் இல்லை.. போரிங் என பதிவிட்டுள்ளார்.

    எந்த ஃபீலும் வரல

    எந்த ஃபீலும் வரல

    எதிரி படத்தை பார்த்த இந்த ரசிகர், பா பாண்டி படத்திற்கு பிறகு மீண்டும் ரேவதியை பார்ப்பது மகிழ்ச்சி.. விஜய் சேதுபதி தனது சிறிய ரோலில் ஸ்கோர் செய்துள்ளார். ஆனால் கதையின் கருப்பொருளின் படி விரும்பவோ குற்ற உணர்வையோ அல்லது தூண்டுதலையோ கொடுக்கவில்லை.. பிஜாய் நம்பியாரின் ஸ்க்ரீன்பிளே மற்றும் இயக்கம் கைவிட்டுவிட்டது என பதிவிட்டுள்ளார்.

    சுவாரசியம் இல்லை மொக்க போட்டுட்டாங்க

    சுவாரசியம் இல்லை மொக்க போட்டுட்டாங்க

    நவரசாவின் எதிரி படத்தை பார்த்த இந்த ரசிகர், சுத்தமாக சுவாரசியமே இல்லை, க்ளைமேக்ஸில் இறைவி மாதிரி அவனும் பொறுத்துருக்கலாம் என்று ரேவதியை பேசவிட்டு மொக்கை போட்டு விட்டார்கள் என்று பதிவிட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

    இந்த எபிசோடை பாக்காமலே இருந்துருக்கலாம்'

    இந்த எபிசோடை பாக்காமலே இருந்துருக்கலாம்'

    எதிரி படத்தை பார்த்த இந்த நெட்டிசன், அரைமணி நேரமா நடந்த கதையை அப்படியே ஒவ்வொரு வரியாகச் சொல்லி 'இதெல்லாம் நடக்காம இருந்துருக்கலாம்' என வசனம் பேசுகிறார் ரேவதி. பார்வையாளர்களான நம் மைண்ட் வாய்ஸ் 'இந்த எபிசோடை நாங்க பாக்காமலே இருந்துருக்கலாம்' என்கிறது என பதிவிட்டுள்ளார்.

    வழக்கமான மணிரத்னம் பட ஸ்டைல்

    வழக்கமான மணிரத்னம் பட ஸ்டைல்

    எதிர் குறும்படத்தை பார்த்த இந்த நெட்டிசன், விஜய் சேதுபதி ஒரு கொலை செய்வாரு அது ஏன் பண்ணாருன்னு கதை நகரும்.. வழக்கமான மணிரத்னம் பட ஸ்டைல், ஆவரேஜ்.. என தனது விமர்சனத்தை பதிவிட்டுள்ளார்.

    நாட் பேட்.. நாட் குட்..

    நாட் பேட்.. நாட் குட்..

    படத்தை பார்த்த இந்த ரசிகர், எதிரி ஓகே.. நாட் பேட்.. நாட் குட்.. விஜய் சேதுபதி மற்றும் ரேவதி மேம்மின் ஆக்டிங் நைஸ்.. மத்தப்படி ரொம்ப ஸ்லோவா ஒன்றாத மாதிரி ஃபீல்.. ஒரு தடவை பார்க்கலாம் என பதிவிட்டுள்ளார்.

    அற்புதமான மற்றும் உணர்ச்சிபூர்வமான நடிப்பு

    அற்புதமான மற்றும் உணர்ச்சிபூர்வமான நடிப்பு

    நவரசாவின் எதிரி குறும்படத்தை பார்த்த இந்த ரசிகர்,
    இது இரண்டு பெரிய நட்சத்திரங்களான விஜய் சேதுபதி மற்றும் ரேவதிக்கு இடையேயான ஒரு அற்புதமான மற்றும் உணர்ச்சிபூர்வமான நடிப்பு என பதிவிட்டுள்ளார்.

    English summary
    Twitter review about Navarasa's Ethiri. Ethiri gets mixed review from netizens.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X