சுஷாந்தின் கடைசிப்படம்.. தில் பெச்சாரா எப்படி இருக்கு? நெட்டிசன்ஸ் என்ன சொல்றாங்க.. டிவிட்டர் ரிவ்யூ
சென்னை: நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் கடைசி படம் நேற்று இரவு வெளியான நிலையில் நெட்டிசன்கள் படத்தை பாராட்டி தள்ளியிருக்கிறார்கள்.
Recommended Video
பிரபல பாலிவுட் நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த மாதம் 14ஆம் தேதி மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அவரது மரணம் தொடர்பாக ஒரு பக்கம் விசாரணை நடைபெற்று வரும் நிலையில் அவர் கடைசியாக நடித்த தில் பெச்சாரா படம் நேற்று டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் நேற்று இரவு 7.30 மணிக்கு வெளியானது.
முகேஷ் சப்ரா இயக்கம்
சுஷாந்த் சிங் ராஜ்புத்துக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் தில் பெச்சாரா படம் கட்டணம் வசூலிக்கப்படவில்லை. முகேஷ் சப்ரா இயக்கத்தில் சுஷாந்த் சிங் ராஜ்புத், சஞ்சனா சங்கி, சைஃப் அலி கான் உள்ளிட்டோர் நடித்த இந்த படத்திற்கு, ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
அட்டகாசமான நடிப்பு
ஏற்கனவே இந்த படத்தை காண வெறித்தன ஆர்வத்தில் இருந்தனர் ரசிகர்கள். இந்நிலையில் நேற்று படம் ரிலீஸ் ஆன உடனேயே ஆன்லைனில் படத்தை காண தொடங்கிவிட்டனர் ரசிகர்கள். படத்தில் ரஜினிகாந்த் ரசிகராக அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் சுஷாந்த் சிங் ராஜ்புத்.
நெஞ்சை பிழியும் வகையில்
படத்தை பார்த்துவிட்டு சமூக வலைதளங்களில் இரவு முதலே #SushantSinghRajput, #DilBechara உள்ளிட்ட ஹேஷ்டேக்குகளை ட்ரென்ட் செய்தனர். பல டிவிஸ்ட்டுகள், அதிரடி திருப்பங்கள் என கலகலப்பு, காதல், காமெடி, கண்ணீர் என அனைத்திற்கும் கேரண்டியாக நெஞ்சை பிழியும் வகையில் உள்ளது தில் பெச்சாரா திரைப்படம்.
எமோஷனல் ரைடு
படத்தை பார்த்த இந்த நெட்டிசன், தில் பெச்சாரா படத்தின் கடைசி 20 நிமிடம் எமோஷனல் ரைடு.. எப்போதும் நம் இதயத்தில் இருப்பார். ஆமாம் நான் மீண்டும் உடைந்து விட்டேன் என்று உருக்கமாக படம் குறித்து பதிவிட்டுள்ளார் இந்த நெட்டிசன்.
புன்னகை.. அப்பாவித்தனம்..
மற்றொரு ரசிகரான இவர், சுஷாந்த் சிங் ராஜ்புத்துக்கு தில் பெச்சாரா படம் சிறந்த அஞ்சலி. எஸ்.எஸ்.ஆர் ஒவ்வொரு ஃபிரேமிலும் தனது புன்னகை, அப்பாவித்தனம் மற்றும் நடிப்பு மூலம் வென்றுள்ளார். மனவ் முதல் மேனி வரை, காதல் இதயத்தைப் பார்த்ததில் நீங்கள் மகிழ்ச்சியடைகிறீர்கள் என்று நம்புகிறோம்.. பிரகாசமாக பிரகாசிக்கவும் என பதிவிட்டுள்ளார்.
அரிய திரைப்படம்
தில் பெச்சாரா திரைப்படம் எல்லா வகையிலும் வெற்றிபெற்ற ஒரு அரிய திரைப்படமாகும், அங்கு ஒவ்வொரு கதாபாத்திரம், காட்சி, உடை மற்றும் # சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் சிறப்பான நடிப்பு ஆகியவை இந்த படத்தை பார்க்கத்தக்கதாக ஆக்குகிறது என புகழ்ந்திருக்கிறார் இந்த நெட்டிசன்.
சிறந்தப்படம்..
தில் பெச்சாரா படத்தை பார்த்த இந்த ரசிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் கடைசிப்படம் தான் சிறந்த படம். தில் பெச்சாரா திரைப்படம் தான் சிறந்த படம் என்றும் நான் நினைக்கிறேன் என பதிவிட்டுள்ளார் இந்த ரசிகர்.
மிஸ் செய்வோம்
மற்றொரு நெட்டிசனான இவர், தில் பெச்சாரா படம் ரொம்பவே அழகான படம்.. 100 சதவீதம் எப்போதும் எங்கள் இதயங்களில் உங்களை மிஸ் செய்வோம் சுஷாந்த் சிங் ராஜ்புத் என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
அழுகையை நிறுத்த முடியவில்லை
படத்தை பார்த்த இவர், ஆரம்பம் முதலே அழுகையை நிறுத்த முடியவில்லை. அவருடைய சிரிப்பும் அப்பாவித்தனமும் லட்சக்கணக்கான இதயங்களை தொட்டு விட்டது. குட்பை சொல்லாதீர்கள்.. லவ் யூ எஸ்எஸ்ஆர் என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
எப்படி இருக்க முடியும்?
பல நெட்டிசன்கள் இப்படி படத்தை பார்த்த பிறகும் உங்களின் மரணத்திற்கு நீதி கேட்காமல் எப்படி இருக்க முடியும் என்றும் கேட்டுள்ளனர். படத்தில் சுஷாந்த் சிங்கிற்கு ஜோடியாக நடித்துள்ள சஞ்சனா சங்கியும் அறிமுக படம் என்று சொல்ல முடியாத அளவுக்கு அழகான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.


Click it and Unblock the Notifications











