லவ் டுடே ட்விட்டர் விமர்சனம்: என்னய்யா இப்படி Fun பண்ணி வச்சிருக்கீங்க… தெறிக்கவிடும் ரசிகர்கள்…
சென்னை: பிரதீப் ரங்கநாதன் இயக்கிய லவ் டுடே திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
கோமாளி படம் மூலம் கவனிக்க வைத்த பிரதீப் ரங்கநாதன், லவ் டுடே படத்தை இயக்கியுள்ளதோடு அவரே ஹீரோவாகவும் நடித்துள்ளார்.
பிரதீப் ரங்கநாதனுடன் இவானா, சத்யராஜ், ராதிகா சரத்குமார், யோகி பாபு உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.
ஹீரோவான இயக்குநர்
ஜெயம் ரவி நடித்த கோமாளி படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். முதல் படத்திலேயே கவனம் ஈர்த்த பிரதீப் ரங்கநாதன், அடுத்து லவ் டுடே என்ற படத்தை இயக்கியுள்ளார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ஹீரோயினாக இவானா நடிக்க, சத்யராஜ், ராதிகா, யோகி பாபு, சூப்பர் சிங்கர் பிரபலம் ஆஜித் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர். ஏற்கனவே இப்படத்தின் பாடல்கள், ட்ரெய்லர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. யுவன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
கதை இதுதான்
பிரதீப் - இவானா இருவரும் திருமணம் செய்ய முடிவெடுக்கின்றனர். அதனால், இவானாவின் அப்பா சத்யராஜிடம் சம்மதம் கேட்கும் போது, அவர் ஒரு டாஸ்க் கொடுக்கிரார். அதன்படி, இருவரும் அவர்களது செல்போனை ஒருநாள் ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்ள வேண்டும் என்கிறார். அதனால் ஏற்படும் பிரச்சினைகளால் இவர்கள் வாழ்வில் என்ன நடக்கிறது, இருவரும் சேர்ந்தார்களா இல்லையா என்பது தான் கதை. 2கே கிட்ஸ்களுக்காகவே ஸ்பெஷலாக தயாரிக்கப்பட்ட படமாக இது உருவாகியுள்ளது.
நெட்டிசன்கள் விமர்சனம்
U/A சான்றிதழுடன் வெளியான 'லவ் டுடே' படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதுகுறித்து டிவிட்டரில் ரசிகர்கள் பலரும் பாசிட்டிவான விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர். "காதல் பின்னனியில் உருவாகியுள்ள இந்தப் படம், இளைஞர்களுக்கான கொண்டாட்டம்" என ஒருவர் குறிப்பிட்டுள்ளார். அதேபோல், "படம் முழுக்க ஜாலியாக இருப்பதால், நல்ல எண்டர்டெயின்மெண்ட் நிச்சயம்" என பாசிட்டிவாக தெரிவித்துள்ளார். அதேபோல், "நீண்ட நாட்களுக்குப் பிறகு தரமான காமெடி படம் லவ் டுடே" என நெட்டிசன் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரதீப்க்கு வாழ்த்து
இன்னொரு நெட்டிசன், "பிரதீப் பெரிய நடிகன் தான் எனவும், படம் முழுக்க செம்ம ஜாலியாக இருப்பதாகவும்" ட்வீட் செய்துள்ளார். இன்னொரு ரசிகர் 5க்கு 4 மதிப்பெண்கள் கொடுத்து 'லவ் டுடே' படத்தின் கதை, திரைக்கதை, யுவனின் இசை எல்லாமும் சூப்பர் எனக் கூறியுள்ளார். மேலும், "ஒவ்வொரு காட்சியும் சூப்பராக இருக்கிறது" எனவும் நெட்டிசன் ஒருவர் பாராட்டியுள்ளார். அதேபோல், பிரதீப் ரங்கநாதன், இவானா, சத்யராஜ், ராதிகா சரத்குமார் ஆகியோரின் நடிப்பும், யுவனின் இசையும் சூப்பர் என பாராட்டியுள்ளார். ஒருசில இடங்களில் மட்டுமே படம் மெதுவாக நகர்கிறது, மற்றபடி 'லவ் டுடே' படத்துக்கு எல்லாமே சரியாக அமைந்துள்ளது எனவும் நெட்டிசன்கள் பாராட்டியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











