ரெட்ரோ ட்விட்டர் விமர்சனம்.. கம்பேக் கொடுத்தாரா சூர்யா?.. FDFS பார்த்தவங்க என்ன சொல்றாங்க
சென்னை: கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ரெட்ரோ திரைப்படம் உழைப்பாளர் தினத்தையொட்டி இன்று ரிலீஸ் ஆனது. இப்படத்தின் முதல் காட்சியை காண வந்த ரசிகர்கள் திருவிழாவை போல் பட்டாசு வெடித்து கொண்டாடி மகிழ்ந்தனர். ரெட்ரோ படத்தை பார்த்த ரசிகர்கள் சமூகவலைதளங்களில் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். இப்படம் எந்த அளவிற்கு அவர்களது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தது என்பதை இதில் காணலாம்.
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா பூஜா ஹெக்டே, ஜோஜூ ஜார்ஜ், ஜெயராம், நாசர், பிரகாஷ் ராஜ், கருணாகரன், சுவாசிகா என பலரும் நடித்திருக்கும் திரைப்படம் ரெட்ரோ. இப்படத்தில் இதுவரை வெளியான அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்படத்தின் ப்ரீ புக்கிங் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது. சூர்யாவின் ரெட்ரோ திரைப்படம் உலகளவில் இதுவரை ரூ.10 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் படத்தை பார்த்த ரசிகர்கள் பாசிட்டிவான கருத்தையே பதிவிட்டு வருகின்றனர்.

கனிமா பாடல்: ரெட்ரோ படம் தொடங்கிய 15 நிமிடங்களிலேயே கனிமா பாடல் ஆட்டம் போட வைப்பதாக ரசிகர் ஒருவர் தெரிவித்திருக்கிறார். கனிமா வைஃப் என்னை விட்டு போகவில்லை. பாட்டு முடிந்தும் ஆட தோன்றுகிறது என பதிவிட்டுள்ளார். வெளிநாட்டு ரசிகர்கள் பலரும் சுமாராக இருப்பதாகவே தெரிவித்துள்ளனர். இதில், ஒருவர் பழைய படத்தை பார்த்தமாதிரியே இருந்தது. படத்தில் புதிதாக ஏதும் இல்லை. என்னால் அமர்ந்து படம் பார்க்க முடியவில்லை என்றும் தெரிவித்திருக்கிறார். மேலும், ரெட்ரோ படத்தினை சிலர் திட்டமிட்டு புறக்கணித்து வருகிறார்கள். வேண்டும் என்றே தவறா விமர்சனங்களை அளிப்பதாகவும் சூர்யாவின் ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
#Retro my honest review
— . (@DineshhhX) May 1, 2025
+VE:
- Pooja's career best perfo .. she literally gave it all for this film 😭😭😭😭🔥
- 1st half screenplay, interval, mass scenes are 🥵🥵
- As always BGM 🥵👌🏻💯 different level
- Camera movements & visuals
Negative: Nothing #RetroReview pic.twitter.com/PNLFZBTbmU
பிளாக்பஸ்டரா?: சூர்யா செம மாஸ், ஒற்றை ஆளாக படத்தை தாங்கியுள்ளார். சூர்யாவின் கம்பேக் தியேட்டர் படம் இது தான். கார்த்திக் சுப்பராஜ் இயக்கம் மற்றும் திரைக்கதை வழக்கம் போல அமைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். அமெரிக்க ரசிகர் FDFS விமர்சனம். சூர்யாவிடமிருந்து இன்னொரு ஃபாள்ப். மரண மொக்கை மோசமான திரைக்கதை. கார்த்திக் சுப்புராஜ் திரைக்கதையை தாக்கத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும், அல்லது படத்தில் நகைச்சுவை தெளிக்கப்பட்டிருக்க வேண்டும். இரண்டும் கலந்ததால், படம் போராடுகிறது. எங்கே சீரியஸாக இருக்க வேண்டும், எங்கே காமெடி இருக்க வேண்டும்? என தெரியாமல் பார்ப்பவர்களுக்கு வேதனையை தருகிறது என தெரிவித்திருக்கிறார்.
பூஜா ஹெக்டேவுக்கு பாராட்டு: 90களில் வரும் நாயகியாக பூஜா ஹெக்டே அசத்தியிருப்பதாகவும், இசையமைப்பாளர் சந்தோஷ் நாரயணன் படத்திற்கு பெரிய பலமாக இருப்பதாகவும் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். சூர்யா கேங்ஸ்டராக மிரட்டியிருக்கிறார். ஜெயராம் நடிப்பு அற்புதம் என்றும் தெரிவித்துள்ளனர். மாஸ்டர் பீஸ் படம் என்றும் ரெட்ரோ பிளாக்பஸ்டர் ஹிட் அடிப்பது உறுதி என்கின்றனர். பூஜா ஹெக்டே கரியரிலேயே இதுதான் சிறந்த படம். முதல் பாதி விறுவிறுப்பாக இருக்கிறது. சந்தோஷ் நாராயணன் கலக்கிட்டாரு என தெரிவிக்கிறார்கள். முதல் பாதி தேவையே இல்லை. இரண்டாம் பாதி எடுக்கவே வேண்டாம். மொத்தத்தில் இந்த படமே எடுத்திருக்க வேண்டாம். இந்த படத்தில் ஒரு நல்ல விசயம் பூஜா ஹெக்டே மட்டுமே என ஒருவர் குறிப்பிட்டுள்ளார். படம் பார்தத ரசிகர்கள் பலரும் மனம் வருத்தத்தில் இருப்பதாகவும் தெரிகிறது. கங்குவாவை போன்று இப்படம் பிளாக்பஸ்டர் டிஸாஸ்டரை சந்திக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











