Two Review: ஒரு ஆணையும் பெண்ணையும் நிர்வாணமாக்கி.. மாற்றான் சூர்யா போல தைத்து வைக்கும் சைக்கோ.. ஏன்?
நடிகர்கள்: பேப்லோ டெர்க்யூ, மரினா கேட்டல்
இயக்கம்: மார் டர்கரோனா
ஓடிடி: நெட்பிளிக்ஸ்
லாஸ் ஏஞ்சல்ஸ்: இதுவரை ஹாலிவுட் படங்களை மட்டுமே அதிகம் பார்த்து வந்த இந்திய ரசிகர்கள் ஓடிடியின் அதிரடி வருகையால் உலக படங்களை பார்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ஸ்பானிஷ் திரைப்படமான 'Dos' ஆங்கிலத்தில் Two என்கிற படமாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் காணக் கிடக்கிறது.
நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் அதிக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த Two படத்தின் விமர்சனத்தை விரிவாக இங்கே பார்ப்போம்..
Two கதை என்ன?
ஒரு அறைக்குள் யாரென்றே அடையாளம் தெரியாத ஒரு ஆணையும், ஒரு பெண்ணையும் ஒட்டுத் துணிக்கூட இல்லாமல் ஒன்றாக வயிற்றின் பகுதியில் தைத்து மாற்றான் படத்தில் வரும் சூர்யாவை போல கன்ஜாய்ன்ட் ட்வின்ஸாக மாற்றி சைக்கோ ஒருவன் நடத்தும் கொடூரமான செயலில் இருந்து அந்த இருவரும் தப்பித்தார்களா? இல்லையா? என்பது தான் ஸ்பானிஷ் திரைப்படமான Two படத்தின் கதை.
ஆணும் பெண்ணும் நிர்வாணமாக
ஒரு ஹோட்டல் அறைக்குள் அறிமுகம் இல்லாத இரண்டு ஸ்ட்ரேஞ்சர்கள் ஒருவர் மீது ஒருவர் ஒட்டுத் துணியில்லாமல் போதையில் படுத்துக் கிடக்க, காலை விடிந்ததும் அவர்கள் எழுந்து பார்க்கும் போது ஒரு ஆண் மீது பெண் நிர்வாணமாக படுத்துக் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைகின்றனர். யார் நீ? என இருவரும் மாற்றி மாற்றி கேட்க, எப்படி இங்கே வந்தோம், நமக்குள் என்ன நடந்தது என்கிற உரையாடலுக்கு முன் இருவரும் அந்த இடத்தை விட்டு எழுந்து ஓட முயற்சிக்கும் போது தான் இருவரும் ஒன்றாக ஒட்டியிருப்பதே அவர்களுக்குள் தெரிய வரும்.
மாற்றான் மாதிரி
கே.வி. ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்த மாற்றான் படத்தில் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள் என சூர்யா டபுள் ரோலில் நடித்து அசத்தி இருப்பார். அதே போல இந்த முன் பின் தெரியாத ஸ்ட்ரேஞ்சர்களை ஒன்றாக ஊசி நூல் வைத்து சைக்கோ ஒருவர் தைத்து விட்டு இவர்கள் செய்வதை வேடிக்கை பார்த்து ரசிக்கின்றான் என்பதை இருவரும் தாங்கள் ஒன்றாக தைக்கப்பட்டு இருப்பதை தெரிந்து கொண்டதும் தங்களுக்குள் பேசி புரிந்து கொள்கின்றனர்.
அவங்க ரெண்டு பேரும் யார்
அந்த அறையில் நிர்வாணக் கோலத்தில் அந்த பெண் உடன் தைக்கப்பட்டு இருக்கும் அந்த ஆண் தனது பெயரை டேவிட் என்கிறான். ஆரம்பத்தில் தன்னை பற்றிய உண்மையை மறைக்கும் அந்த டேவிட் பின்னர் தான் ஒரு ஆண் ஐட்டம் என்பதை அந்த பெண்ணிடம் வெளிப்படுத்துகிறான். அந்த பெண் தனது பெயரை சாரா என அறிமுகப்படுத்தும் போதே தன்னைப் பற்றிய உண்மையை மறைக்காமல் கூறுகிறாள். டேவிட்டாக நடிகர் பேப்லோ டெர்க்யூவும், சாராவாக மரினா கேட்டலும் தங்களது நடிப்புத் திறனால் ரசிகர்களை பதை பதைக்க வைத்து விடுகின்றனர்.
என் புருஷன் தான் இப்படி பண்ணியிருப்பான்
டேவிட் விபச்சாரத் தொழில் செய்பவன் என்பதை அறிந்ததும் தனது வயதான கணவர் மரியோ தான் தன் மீது சந்தேகப்பட்டு இப்படியொரு மோசமான காரியத்தை செய்திருப்பான் என சாரா சந்தேகப்படுகிறார். டேவிட்டும் சாரா சொல்வதை போன்ற ஒரு ஆள் தான் கடைசியில் பாரில் தன்னை சந்தித்துப் பேசியதாகவும் கூற, சாரா அதை கன்ஃபார்ம் செய்கிறார். இருவருக்கும் முதல் நாள் இரவு என்ன நடந்தது, எப்படி இந்த ஹோட்டல் ரூமுக்கு வந்தோம், இருவரையும் ஒன்றாக வைத்து தைக்கும் போது கூட சுயநினைவு வரவில்லையே என குழம்பித் தவிக்கின்றனர்.
முத்தம் கொடுத்தால் அணையும் லைட்
ஆடையே இல்லாமல் இருவரையும் ஒரு அறைக்குள் தைத்து வைத்து தனது சந்தேக புத்தியால் புருஷன் இப்படி பண்ணிட்டானா என நினைத்து டேவிட்டுக்கு சாரா முத்தம் கொடுத்து கணவரை வெறுப்பேற்ற நினைக்கிறாள். அப்போது உடனடியாக அந்த அறையின் லைட் தானாக ஆஃப் ஆகிறது. மறுபடியும் இதே போல லைட் ஆஃப் ஆகும் போது புருஷன் தான் காண்டு ஆகுறான் என நினைத்து அந்த நபருடன் உச்சத்துக்கே சென்று விடுகிறார் சாரா.
கிளைமேக்ஸ் ட்விஸ்ட்
ஆனால், எதிர்பார்த்தபடியே சாராவின் கணவர் இருவரையும் அப்படி தைத்து வைக்கவில்லை என்றும், அப்படி செய்தது யார்? எதற்காக இப்படியொரு பைத்தியக்காரத்தனத்தை செய்து வைத்திருக்கிறார். அதனால் அவருக்கு என்ன லாபம்? கடைசியில் கிளைமேக்ஸில் சாராவும் டேவிட்டும் அங்கே இருந்து உயிருடன் தப்பித்தனரா? இல்லையா? என்பதை செம ட்விஸ்ட் உடன் இயக்குநர் மார் டர்கரோனா இயக்கி உள்ளார்.
பிளஸ்
ஒரே அறைக்குள் நடந்தாலும், சீரியல் போல ஆகி விடாமல் ரொம்பவே சீரியஸாக கடைசி வரை பார்க்க வைத்து விடுகிறார் இயக்குநர் மார் டர்கரோனா. ஒளிப்பதிவு, பின்னணி இசை, நடிகர்களின் நடிப்பு என அனைத்துமே ஈர்க்கும் படியாகவே உள்ளது. ஆணும் பெண்ணும் நிர்வாணமாக படத்தில் நடித்திருப்பதே இருவருக்குள்ளும் என்ன ஆகுமோ? எப்படி இருவரும் நடக்கின்றனர், எப்படி ஒருவருக்கு ஒருவர் அந்த கோலத்தில் உதவி செய்கின்றனர் என காட்சி வழியே எரோட்டிக்காவையும் அள்ளித் தெளித்து 18 பிளஸ் ரசிகர்களை திருப்திப்படுத்தி உள்ளனர்.
மைனஸ்
படத்தின் கிளைமேக்ஸில் என்ன தான் ட்விஸ்ட் வைத்து உண்மையான சைக்கோ யார் என்பதை இயக்குநர் ரிவீல் செய்தாலும், வில்லன் யார் என்பது தெரிந்ததும் இந்த படத்தையா? இவ்ளோ நேரம் பார்த்தோம் என்கிற எண்ணமும் இன்னமும் கிளைமேக்ஸ் வித்தியாசமாக இருந்திருக்கலாம் என்கிற எதிர்பார்ப்பும் வருவது இந்த படத்தின் பெரிய மைனஸ் ஆக பார்க்கப்படுகிறது. மாற்றான் படத்தை போலவே இதிலும், ஆரம்பத்தில் ரொம்பவே நெருக்கமாக இருக்கும் இருவரும் சில இடங்களில் ஒன்றாக தைக்கப்பட்டதையே மறந்து தூரம் செல்லும் காட்சிகளும் ரசிகர்களை கொஞ்சம் அப்செட் செய்யும். நெட்பிளிக்ஸ் ஓடிடியை சமீபத்தில் சப்ஸ்கிரைப் செய்திருந்தால், Two என தேடினாலே இந்த படம் கிடைத்து விடும். பார்த்து விட்டு உங்க விமர்சனத்தையும் கமெண்ட்டில் பதிவிடுங்க!


Click it and Unblock the Notifications











