twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    Movie Review : ஜோதிகாவின் 50வது படம் உடன்பிறப்பே ..எப்படி இருக்கு ?

    |

    Rating:
    3.0/5

    நடிகர்கள் :

    ஜோதிகா,
    சசிகுமார்,
    சமுத்திரக்கனி,
    சூரி,
    கலையரசன்

    இசை : D இமான்

    தயாரிப்பு : 2டி எண்டர்டெய்ன்மெண்ட்

    இயக்கம் : இரா.சரவணன்

    சென்னை: அண்ணண் தங்கை பாசத்தை மையப்படுத்தி சமூக அக்கறை மற்றும் நகைச்சுவை கலந்த குடும்ப பாங்கான படம் தான் உடன்பிறப்பே . வன்முறையை கையிலெடுக்கும் அண்ணண் ஒருபுறம், நியாயம் நேர்மை,சட்டம் என வாழும் கணவர் ஒருபுறம். இருவருக்கும் மத்தியில் தவிக்கும் ஒரு தங்கையின் பாச போராட்டமே "உடன்பிறப்பே".

    Recommended Video

    Udanpirappe Review by Poster Pakiri | Jyothika | Sasikumar | Samuthirakani | Filmibeat Tamil

    யாராக இருந்தாலும் அவர்கள் செய்யும் தவறுகளை அடிதடியுடன் தட்டிகேட்கும் வீரனாக வரும் சசிகுமாரின் அண்ணன் கதாபாத்திரம் கச்சிதமாக கிராமத்து கதைக்கு பொருந்தியுள்ளது. ஆனால் கொஞ்சம் பில்ட்அப் தான் அதிகம்.

    10 மில்லியன் வியூக்களை தாண்டிய உடன்பிறப்பே ட்ரெயிலர்... செம மாஸ்! 10 மில்லியன் வியூக்களை தாண்டிய உடன்பிறப்பே ட்ரெயிலர்... செம மாஸ்!

    சட்டத்தை மழுமையாக நம்பும் நீதி நேர்மை என்று பேசும் ஜோதிகாவின் கணவனாக வரும் சமுத்திரக்கனி வழக்கம் போல் தனது கதாபாத்திரத்தை நன்றாகவே உணர்ந்து நடித்துள்ளார். பெற்ற குழந்தையை இழந்த துக்கத்தில் சசிகுமாரை காரணம் காட்டி குடும்பத்தை விட்டுவிலகும் காட்சிகளில், சமுத்திரக்கனி அற்புதம்.

     தயங்கி ,தயங்கி வாழ்ந்த  மாதங்கி

    தயங்கி ,தயங்கி வாழ்ந்த மாதங்கி

    அண்ணனுக்கும், கணவனுக்கும் இடையே சிக்கி தவிக்கும் பெண்ணாக ஜோதிகா,மேக் அப், லொகேஷன் எல்லாம் நன்றாக இருக்க,முகபாவனைகள், அழுகை என்று சீரியல் போல் பல காட்சிகள் நகர்கிறது.
    தேவையான இடத்தில் ஜோதிகா வசனம் பேசியிருந்தால் இன்னும் கதை பலமாக இருந்து இருக்கும்.வசனம் பேசாமல் கண்களை மட்டும் விரித்து விரித்து எக்ஸ்பிரஷன் கொடுப்பது கொஞ்சம் கடுப்பாக தான் இருக்கிறது. தயங்கி ,தயங்கி பேசாமல் இருந்தே மாதங்கி எனும் காதாபாத்திரத்தில் ஜோதிகா அமைதி காக்கிறார் .

    அன்னே யாரன்னே

    அன்னே யாரன்னே

    சூரியின் காமெடி அங்காங்கே சிரிக்க வைக்கிறது.படம் தொடங்கியதிலிருந்து கடைசிவரைக்கும் கதையோடு சேர்ந்து நகைச்சுவையில் ஈடுபடுகிறார் . படத்தில் ஒரு இடத்தில மலர்ந்தே தீரும் என்று கூறுகிறார். அது எதை மனதில் வைத்து கூறுகிறார் என்று தெரியவில்லை.பாடல்களுக்கு இமான் இசை மனதிற்கு ஒட்டியது போல் பின்னணி இசை ஒட்டவில்லை.ஓவர் பில்ட் அப் கொடுக்கும் பின்னணி இசையை கொஞ்சம் தவிர்த்து இருக்கலாம். டைட்டில் பாடலாக வரும் அன்னே யாரன்னே பாடல், ஸ்ரேயா கோஷல் குரலில் அற்புதம்.ஆனால் அதே பாடலை லூப் போட்டு ஆங்காகே பல காட்சிகளுக்கு சொருகியது கொஞ்சம் நெருடல் .

     வெளிப்படுத்திய விதம்

    வெளிப்படுத்திய விதம்

    வில்லன் கதாபாத்திரத்தை இன்னும் கொஞ்சம் பட்டி டிங்கரிங் பார்த்து இருக்கலாம். நல்ல கதையில் தேவையில்லாத காட்சிகளை சேர்த்தது போல் அமைந்துவிட்டது வில்லன் கதாபாத்திரம். அதே சமயம் பாலா இயக்கத்தில் நாச்சியார் எனும் திரைப்படத்தில் ஜோதிகாவின் தைரியத்தை வெளிப்படுத்திய விதம் மனதுக்கு வந்து போகிறது. ஒரு டைப்பான காம கொடூரனாக- நிஜ வாழ்க்கையில் பொள்ளாச்சி சம்பவங்களை மேலோட்டமாக தொட்டு வில்லன் கதாபாத்திரத்தை டிசைன் செய்து உள்ளார் இயக்குனர் என்று சொல்ல தோன்றுகிறது .

    கிராமிய படங்களை

    கிராமிய படங்களை

    மொத்தத்தில் அண்ணண் தங்கை செண்டிமெண்ட் படம் என்றாலும், பார்ப்பவர்களை பாதிக்கும் காட்சிகள் ஏதும் இல்லை. அண்ணண் தங்கை பாசம் ஒரு பெரிய இம்பாக்ட் கொடுக்கவில்லை என்பது தான் கொஞ்சம் வேதனை .படத்தின் வேகத்தையும், தேவையான இடத்தில் ஜோதிகாவின் வசனத்தையும் அதிகரித்து இருந்தால் உடன்பிறப்பே திரைப்படம் இன்னும் நெஞ்சில் ஒட்டி இருக்கும். ஜோதிகாவின் 50வது படம் என்பதால், கண்டிப்பாக ஒரு தடவை உடன்பிறப்பே படத்தை பார்க்கலாம்.பல குடும்ப பெண்கள்,கிராமிய படங்களை விரும்பி பார்க்கும் ரசிகர்கள் இந்த படத்தை நிச்சயம் ரசிப்பார்கள் .

    பேசாமல்  பல காலம் வாழ்ந்து

    பேசாமல் பல காலம் வாழ்ந்து

    சசிகுமாருக்கு மனைவியாகவும் ஜோதிகாவுக்கு அண்ணியாகவும் வரும் சிஜாரோஸ் மிகவும் நேர்த்தியாக கொடுத்த வேலையை சிறப்பாக செய்து உள்ளார். குடுபங்களின் பிரிவு, பல வருட மௌன போராட்டம் என்பது நம் அன்றாட வாழ்க்கையில் சந்தித்து வரும் பிரச்சனை.இந்த படத்தின் மிக பெரிய ப்ளஸ் என்னவென்றால் உறவுகளுடனும் ,உடன்பிறப்புகளுடனும் பேசாமல் பல காலம் வாழ்ந்து - எதோ ஒரு காரணத்திற்காக மௌனம் காத்த பல பேருக்கு பல சம்பவங்கள் தங்கள் சொந்த வாழ்க்கையில் ஞாபகம் வரும் .அந்த வலி ஒரு வித தாக்கத்தை ஏற்படுத்தும்.

    தீபாவின் நடிப்பு அழுத்தம்

    தீபாவின் நடிப்பு அழுத்தம்

    உடன்பிறப்பே படத்தின் கதை பலமாக இருந்தாலும், அடுத்த அடுத்த காட்சி வேகமாக நகராமல், சுத்தி சுத்தி அங்கேயே நிற்பது பலவீனமாக அமைந்து விட்டது. எப்போதும் கண்களில் கண்ணீருடன் நிற்கும் ஜோதிகா சில இடங்களில் சலிப்பாக தெரிகிறார். சீரியல் பார்க்கும் உணர்வு தான் வருகிறது.சில காட்சிகளில் மட்டுமே வந்தாலும் தீபாவின் நடிப்பு, வசனம் அழுத்தம் கொடுக்கிறது. ஆடுகளம் நரேன் வழக்கமான அப்பாவாக இருந்தாலும் அழுது துடிக்கும் முக்கிய கதாபாத்திரம்.

     வைட் அங்கிள் ஷாட்ஸ்

    வைட் அங்கிள் ஷாட்ஸ்

    படத்தின் எடிட்டிங் ரூபன்,உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் புரிந்து லென்தீ ஷாட்ஸ் சிலவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார் .ஒளிப்பதிவு வேல்ராஜ். இவர் ஒளிப்பதிவு மட்டுமின்றி படத்தில் ஒரு முக்கியமான போலீஸ் கதாபாத்திரம் நடித்துள்ளார். இவருடைய ஒளிப்பதிவு மிகவும் எதார்த்தமாக அமைந்துள்ளது. வைட் அங்கிள் ஷாட்ஸ் மூலம் கிராமத்தை காட்டிய விதத்தில் வெரைட்டி செய்து உள்ளார் .

    பண்டிகை காலத்திற்கு

    பண்டிகை காலத்திற்கு

    சரியான நேரத்தில் அமேசான் பிரைம் மூலம் பண்டிகை காலத்தை பிளான் செய்து படத்தை வெளியிட்டுள்ளார் சூர்யா. 2டி என்டர்டெய்ன்மெண்ட் அமேசான் நிறுவனத்துடன் பல ஒப்பந்தங்கள் வைத்துள்ளது என்பது அனைவரும் அறிந்ததே .அந்த வகையில் இந்த பண்டிகை காலத்திற்கு குடும்பங்கள் பலர் பல நாடுகளிலிருந்து அமேசான் மூலம் உடன்பிறப்பே படத்தை கண்டு களிப்பார்கள் என்பதுதான் நிதர்சனமான உண்மை. ஜோதிகாவின் உடன்பிறப்பே பாச பிணைப்பே . செண்டிமெண்ட் காட்சிகள் எமோஷனல் மனிதர்கள் அனைத்தையும் பல்ஸ் பார்த்து படத்தை வெளியிட்டு உள்ளார்கள். இந்த படத்தை பார்த்து பல காலம் பேசாமல் இருந்த உறவுகள் அல்லது அண்ணன் தங்கைகள் மீண்டும் பேசி இணைந்தார்கள் என்று செய்தி வந்தால் படத்திற்கு வெற்றி தான்.

    English summary
    actress Jothika's 50th film "udanpirappe"' got released in amzon prime today. a women facing family problems between her own brother and husband is the basic knot of the script.Samuthrakani has done the husband role and Sasikumar has chosen to do the brother role. family emotions with lot of twist and turn is "udanpirappe"
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X