Undercover Chief Minister Review: விஜய் கதையா?.. ஜெயலலிதா கதையா?.. அண்டர்கவர் சீஃப் மினிஸ்டர் விமர்சனம்!
சென்னை: ரீல்ஸ் பார்க்கும் இளைஞர்களை கவர பல நிறுவனங்கள் தற்போது Vertical மினி சீரிஸ்களை உருவாக்கத் தொடங்கியுள்ளன. ஜியோ ஹாட்ஸ்டாரில் Tadka (தாளித்தல்) என்கிற அர்த்தத்துடன் உருவாகியுள்ள ஜியோ ஹாட்ஸ்டார் மொபைல் ஆப்புக்குள்ளேயே இருக்கும் மினி சீரிஸ் ஃபிளாட்பார்மில் ஏகப்பட்ட ஷார்ட் சீரிஸ்கள் வெளியாகி ஜென் ஸி கிட்ஸ்களை கவர்ந்து வருகிறது.
தியேட்டருக்குச் சென்று பெரிய திரையில் படம் பார்த்த பலர், வீட்டிலேயும் ஹோம் தியேட்டர், 52 இன்ச் ஸ்மார்ட் டிவி என வைத்து ஹாலில் சோபாவில் அமர்ந்து குடும்பத்துடன் படம் பார்க்கும் காலம் எல்லாம் மலையேறி போய்விட்டது என்று தான் சொல்ல வேண்டும்.

பிறந்து 1 வயது ஆன குழந்தைகளே போன் இருந்தால் தான் சாப்பிடுவேன் என்றும் அவர்களே ஸ்வைப் பண்ணி ரீல்ஸ் பார்க்கும் நிலைக்கு நாமே அவர்களை தள்ளிவிட்டோம் என்று தான் சொல்ல வேண்டும். அதை எதிர்த்து விக்னேஷ் சிவன் எடுத்த எல்ஐகே படத்தையும் போனை தூக்கிப் போடாமல் அதே பாணியில் ஸ்வைப் செய்துவிட்டனர். சரி அதெல்லாம் இருக்கட்டும். ஏதோ அண்டர்கவர் சீஃப் மினிஸ்டர் விமர்சனம் சொல்றேன்னு சொன்னியேப்பா? அது எங்கே? என கேட்பது நன்றாகவே புரிகிறது. இதோ அந்த கதைக்கு வருவோம்.
அண்டர்கவர் சீஃப் மினிஸ்டர் கதை: சம்யுக்தா எழுதி உருவாக்க, அக்பர் பாட்ஷா இயக்கத்தில் ஜியோ ஹாட்ஸ்டாரின் தட்காவில் இடம்பெற்றுள்ள அவார்ட் வின்னிங் ஷார்ட் சீரிஸ் தான் இந்த அண்டர்கவர் சீஃப் மினிஸ்டர். கார் விபத்தில் முதலமைச்சர் ராஜன் சிக்கி மருத்துவமனை ஐசியூவில் சிக்க, அவரை பார்க்க அவரது மகன் வெற்றி வரும் போது, கட்சியில் இருக்கும் அடுத்த பெரிய தலையான ஹரி தான் முதலமைச்சராக வேண்டும் என்பதற்காக கோடீஸ்வரன் என்பவரை வெளிநாட்டில் படித்துக் கொண்டிருக்கும் முதலமைச்சரின் மகன் வெற்றி என அறிமுகப்படுத்த உண்மையான வெற்றிக்கு ஷாக் ஆகிறது.
அப்பாவை சுற்றி என்ன அரசியல் நடக்கிறது என்பதை ஒரு பணியாள் போல கூடவே இருந்து கவனித்துக் கொண்டு சதித் திட்டங்களை முறியடித்தாரா? இல்லையா? இந்த அண்டர்கவர் சிஎம் என்பது தான் இந்த படத்தின் கதை.
பார்க்கலாமா? வேண்டாமா?: மினி சீரிஸ் பார்க்க முயற்சி செய்தால் கண்டிப்பாக இந்த அண்டர்கவர் சீஃப் மினிஸ்டர் மினி சீரிஸை தாராளமாக பார்க்கலாம். ஒவ்வொரு எபிசோடும் 1 நிமிடங்கள் முதல் 2 நிமிடங்களுக்குள் முடிகின்றன. மொத்தம் 33 எபிசோடுகள் தான் உள்ளன. ஐசியூவில் முதலமைச்சரை வைத்துக் கொண்டு நடைபெறும் அரசியல் விளையாட்டை எந்தளவுக்கு பட்ஜெட் குறைவாக மொபைல் ஃபார்மேட்டில் விறு விறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் கொடுக்க முடியும் என்பதை சம்யுக்தாவும் அக்பர் பாட்ஷாவும் இணைந்து சாதித்து காட்டியுள்ளனர்.
இன்னமும் திரைப்படங்களை போன்று யதார்த்தமான விஷயங்கள் இந்த வெர்ட்டிக்கல் சினிமாவில் வர வேண்டும் என்றால் அதற்கு அதிக பொருட்செலவு ஆகத்தான் செய்யும். மால், மருத்துவமனை காட்டும் இடங்களில் ஏஐ பயன்படுத்தப்பட்ட விதம் சிறப்பு. தேவையற்ற ரீல்ஸ் பார்க்கும் நேரத்தில் இப்படியொரு மினி சீரிஸை பார்த்தால் நீங்களும் கன்டென்ட் க்ரியேட்டர்களாக வாய்ப்புகள் உருவாகும்.
கதையாக பார்த்தால் அன்பே வா காலத்தில் இருந்தே எம்ஜிஆர் தனது அடையாளத்தை மறைத்து விட்டு எப்படி இருப்பாரோ, உழைப்பாளி படத்தில் ரஜினிகாந்த் என்ன செய்வாரோ அதே ஆள்மாறாட்டக் கதை தான். ஆனால், ஸ்க்ரீன்பிளே மற்றும் எடுத்துக் கொண்ட களம் காரணமாக தாராளமாக இந்த ஷார்ட் சீரிஸை பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications