Vaa Vaathiyaar Public Review: எம்ஜிஆரை திரும்ப பார்த்த ஃபீலா இருக்கு.. வா வாத்தியார் பப்ளிக் விமர்சனம்!
சென்னை: ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பில் இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள 'வா வாத்தியார்' திரைப்படம் இன்று வெளியான நிலையில், அந்த படத்தை பார்த்துவிட்டு பொதுமக்கள், ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் தங்களின் விமர்சனங்களை சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர்.
இந்த பொங்கலுக்கு கார்த்தியின் படம் வருமா என்பது நேற்று இரவு வரை சந்தேகமாகவே இருந்த நிலையில் அனைத்து பிரச்னைகளையும் சரிசெய்து வா வாத்தியார் படம் வெளியாகி இருக்கிறது.

இந்நிலையில், அந்த படத்தை பார்த்த ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் தியேட்டர் வாசலில் இருந்து கொடுத்துள்ள பப்ளிக் விமர்சனம் குறித்து இங்கே பார்க்கலாம் வாங்க..
எம்ஜிஆரை மீண்டும் பார்த்த ஃபீல்: கார்த்தி போலீஸ் ராமுவாகாவும் எம்ஜிஆராகவும் வா வாத்தியார் படத்தில் நடித்து தூள் கிளப்பியுள்ளார். தியேட்டரில் மறுபடியும் எம்ஜிஆரை பார்க்க ரசிகர்கள் இந்த பொங்கலுக்கு கூடுவார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பார்க்கக் கூடிய படத்தையே கார்த்தி கொடுத்துள்ளார். மோசமான காட்சிகள் எல்லாம் படத்தில் கிடையாது. எம்ஜிஆராக அவர் நடித்திருப்பது அவ்வளவு அழகாக உள்ளது. எப்படி இப்படியொரு நடிப்பை கார்த்தி வெளிப்படுத்தினார் என்பது படத்தை பார்க்கும் அனைவரையுமே ஆச்சர்யப்படுத்தும் என தீவிர எம்ஜிஆர் ரசிகர் ஒருவர் படத்தை பார்த்துவிட்டு பப்ளிக் விமர்சனம் கொடுத்துள்ளார்.
சுமாராத்தான் இருக்கு: படத்தின் முதல் பாதி எல்லாம் சுத்தமாக வொர்க்கவுட் ஆகவில்லை. சுமாராத்தான் இருக்கு. கார்த்தி மட்டும் ரொம்ப க்யூட்டாக அழகாக இருக்கிறார். அவரை வேண்டுமானால் பார்க்கலாம். மத்தபடி எனக்கு இந்த படம் பெருசா ஒர்க்கவுட் ஆகவில்லை என இளம் ரசிகை ஒருவர் வா வாத்தியார் படத்துக்கு கலவையான விமர்சனத்தை கொடுத்துள்ளார்.
வா வாத்தியார் பொங்கல்: இந்த பொங்கல் கண்டிப்பாக கார்த்தியின் வா வாத்தியார் பொங்கல் தான். போன வருஷம் மத கஜ ராஜா ஹிட் அடித்தது போல இந்த வருஷம் வா வாத்தியார் சர்ப்ரைஸ் ஹிட் அடிக்கும். எம்ஜிஆர் இன்னும் சாகவில்லை. மீண்டும் எழுந்து வர வேண்டும் என்கிற கான்செப்ட்டை வைத்து நலன் குமாரசாமி பக்காவாக காமெடி கலந்து படத்தைக் கொடுத்துள்ளார். ஏகப்பட்ட அரசியல் வசனங்களும் படத்தில் உள்ளதாக இன்னொரு ரசிகர் படத்தை பாராட்டியுள்ளார்.
கலவையான விமர்சனங்கள்: கார்த்தியின் வா வாத்தியார் படத்துக்கு பிளாக்பஸ்டர் விமர்சனங்கள் வரவில்லை என்றாலும், படத்தை தியேட்டரில் தாராளமாக பார்க்கலாம் என்கின்றனர். பாடல்கள் தான் படத்திற்கு வேகத்தடையாக உள்ளதாகவும் பின்னணி இசையில் சந்தோஷ் நாராயணன் பக்கா மாஸ் காட்டியுள்ளார் என்று பல ரசிகர்கள் பப்ளிக் விமர்சனம் கொடுத்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











