Vaa Vaathiyaar X Review: யோவ் நலன் என்னய்யா பண்ணி வச்சிருக்க?.. வா வாத்தியார் ட்விட்டர் விமர்சனம்!

சென்னை: நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி, க்ரித்தி ஷெட்டி, ராஜ்கிரண், சத்யராஜ், ஆனந்த்ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள வா வாத்தியார் படம் பல தடைகளை தாண்டி பொங்கலை முன்னிட்டு போகி பண்டிகை தினமான இன்று திரையரங்குகளில் வெளியானது.

கடந்த ஆண்டு தீபாவளிக்கு படம் வரும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன் பின்னர், டிசம்பர் 5 ரிலீஸ் என்றும் கடைசியாக டிசம்பர் 12ம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்ட திரைப்படம் தொடர்ந்து தள்ளிப்போன நிலையில், சர்ப்ரைஸாக பொங்கலுக்கு வெளியாகி இருக்கிறது.

Vaa Vaathiyaar X Review in Tamil  Karthi movie getting positive reviews
Photo Credit:

எம்ஜிஆர் ரசிகராக கார்த்தி நடித்துள்ள "வா வாத்தியார்" படம் வெளியான நிலையில், படத்தை பார்த்த ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள ட்விட்டர் விமர்சனத்தை இங்கே பார்க்கலாம் வாங்க..

வாத்தியார் வந்துட்டாரு: ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பில் நலன் குமாரசாமி இயக்கிய வா வாத்தியார் படம் தொடர்ந்து ரிலீஸ் ஆகாமல் தள்ளிப் போய்க்கொண்டே இருந்த நிலையில், பொங்கலுக்கு ஒரு வழியாக கார்த்தியின் வா வாத்தியார் படம் வெளியாகி விட்டது. ஞானவேல் ராஜா நீதிமன்றத்தில் ஃபைனான்ஸியர் போட்ட வழக்கை சமாளித்து வா வாத்தியார் படத்தை ரிலீஸ் செய்துள்ளார்.

யோவ் நலன் என்னய்யா பண்ணி வச்சிருக்க: வா வாத்தியார் படம் வெளியான நிலையில் அந்த படத்தை இடைவேளை வரை பார்த்து முடித்த விமர்சகர் பிரசாந்த் ரங்கசாமி தனது எக்ஸ் பக்கத்தில், "யோவ் நலன்? என்னய்யா பண்ணி வச்சிருக்கீங்க.. அப்சல்யூட் கூஸ்பம்ப்ஸ், இன்டெர்வெல் செம ட்விஸ்ட். ஆனால், நான் இதை ரிவீல் பண்ண விரும்பவில்லை. பொங்கலின் டார்க்கஸ்ட் குதிரை இதுதான் என படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனத்தை கொடுத்துள்ளார்.

கார்த்திக் சுப்புராஜ் விமர்சனம்: ஓஜி நலன் குமாரசாமி மறுபடியும் பேக் ஆகிட்டாரு, இந்த தரமான காமெடி படத்தை இந்த பொங்கலுக்கு தியேட்டரில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க என கார்த்திக் சுப்புராஜ் விமர்சித்துள்ளார். கார்த்திக் சுப்புராஜ் மற்றும் நலன் குமாராசாமி உள்ளிட்ட இயக்குநர்கள் நாளைய இயக்குநர் நிகழ்ச்சியில் இருந்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நித்திலன் சாமிநாதன், அஸ்வத் மாரிமுத்து என பல இயக்குநர்கள் வெற்றி இயக்குநர்களாக வலம் வருகின்றனர்.

பாசிட்டிவ் விமர்சனங்கள்: கார்த்தியின் வா வாத்தியார் திரைப்படம் ஃபேண்டஸி கலந்த காமெடி படமாக உருவாகியுள்ள நிலையில், நலன் குமாரசாமி ஹைப்பை க்ரியேட் பண்ணாமல் தியேட்டரில் பெரிய சம்பவத்தை செய்து விட்டார் என்கின்றனர். 2ம் பாதியும் நிறைவடைந்தால் தான் முழு விமர்சனமும் தெரிய வரும்.

விஜய் ரசிகர்கள் ஆதரவு: வா வாத்தியார் திரைப்படம் ரொம்பவே நல்லா இருக்கு. ஒவ்வொரு சீனையும் ரசித்துப் பார்த்தேன், இந்த பொங்கலுக்கு கடைசி நேர சர்ப்ரைஸ் வின்னராக வா வாத்தியார் மாறும் என விஜய் ரசிகர்கள் பாசிட்டிவ் விமர்சனங்களை பரப்ப ஆரம்பித்துள்ளனர்.

கலக்கிட்ட கார்த்தி அண்ணா: படத்தின் முதல் பாதியை பார்த்துவிட்டு பாராட்டிய விமர்சகர் பிரசாந்த் ரங்கசாமி 2வது பாதியை பார்த்து முடித்து விட்டு கலக்கிட்ட கார்த்தி அண்ணா, மக்கள் கொண்டாட போறாங்க என பாசிட்டிவ் விமர்சனத்தை கொடுத்துள்ளார்.

பொங்கலோ பொங்கல்: அமெரிக்க விமர்சகரான கிறிஸ்டோபர் கனகராஜும் "பொங்கலோ பொங்கல்" என வா வாத்தியார் படத்துக்கு தம்ப்ஸ் அப் கொடுத்துள்ளார். குறைந்த பட்ஜெட்டில் கார்த்தியை வைத்து வித்தியாசமான ஃபேண்டஸி டார்க் காமெடி படத்தை நலன் குமாரசாமி கொடுத்துள்ளார் என ரசிகர்கள் கூறி வருகின்றனர். மேலும், படம் முதல் பாதி ஸ்லோவாக செல்கிறது என்றும் 2ம் பாதியில் தான் பிக்கப் ஆகிறது என்றும் பதிவிட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X