வலிமை விமர்சனம்: அஜித் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்புகளை பூர்த்தி செய்ததா வலிமை? First Half விமர்சனம்!
நடிகர்கள்: அஜித்குமார், கார்த்திகேயா, ஹூமா குரேஷி
தயாரிப்பு: போனி கபூர்,
இசை: யுவன் சங்கர் ராஜா, ஜிப்ரான்
இயக்கம்: எச். வினோத்
சென்னை: சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் எச். வினோத் நேர்கொண்ட பார்வை படத்தைத் தொடர்ந்து மீண்டும் அஜித் குமாரை இயக்கியுள்ள படம் தான் வலிமை.
Recommended Video
நடிகர் அஜித் குமார் சிறந்த பைக் ரேஸர் என்பது அனைத்து ரசிகர்களுக்கும் தெரிந்த விஷயம் தான். மங்காத்தா, ஆரம்பம், விவேகம் என ஏகப்பட்ட படங்களில் அவரது ரசிகர்களுக்காக தனி பைக் ஸ்டன்ட் காட்சி உருவாக்கப்பட்டு இருக்கும்.
ஆனால், வலிமை படம் முழுக்க முழுக்கவே அஜித் ரசிகர்களை மனதில் வைத்தே பைக் ரேஸிங் பிளஸ் கிரைம் கலந்த படமாக கொடுத்துள்ளார் எச். வினோத்.
வலிமை திருவிழா
இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படம் இந்தி படமான பிங்க் படத்தின் ரீமேக். அந்த படத்தில் அஜித்தை தாண்டி பல விஷயங்கள் உள்ளதால், ரசிகர்கள் அதில் பெரிதாக கனெக்ட் ஆகவில்லை. ஆனால், வலிமை திரைப்படம் முழுக்க முழுக்க அஜித்திஸத்தை மட்டுமே டார்கெட்டாக வைத்து எடுக்கப்பட்டிருப்பதால், தியேட்டர்களில் இன்று வலிமை திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.
போதைப் பொருள் கடத்தல்
போதைப் பொருள் கடத்தல் ஏகப்பட்ட படங்களில் பார்த்த அதே விஷயம் தான் இந்த வலிமை படத்திலும் ஆரம்பமாகிறது. ஆனால், வித்தியாசமாக அதில் ஈடுபடுபவர்கள் பைக் ரேஸர்கள். வெறும் செயின் ஸ்னாட்சிங் செய்யும் பைக் திருடர்கள் எப்படி போதைப் பொருள் கடத்தலில் எப்படி ஈடுபடுகின்றனர். கொலம்பியாவில் ஓப்பனாகும் முதல் காட்சியில் அங்கிருந்து போதைப் பொருள் பாண்டிச்சேரிக்கு ஷிஃப்ட் ஆகி எப்படி பல இடங்களுக்கு கைமாறுகிறது என்பது தான். இதை கண்டுபிடிக்க ஸ்பெஷல் போலீஸ் அதிகாரியை சென்னை காவல்துறை நாடுகிறது.
அஜித் இன்ட்ரோ
மதுரையில் பொறுப்பான காவல் துறை அதிகாரி அர்ஜுனாக இருந்து வரும் அஜித் குமார் இந்த கேஸை டீல் செய்ய சென்னைக்கு வருகிறார். நடிகர் அஜித்குமாரின் ஓப்பனிங் சீன் மழையில் செம மாஸாக அமைக்கப்பட்டு இருக்கிறது. தீனா ரெயின் ஃபைட்டுக்கு பிறகு இந்த மழை சண்டைக்காட்சி தான் மாஸ் என தியேட்டரிலேயே ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர்.
வேற மாறி ஆட்டம்
அஜித்தின் ஓப்பனிங் பாடலான நாங்க வேறமாறி பாடலில் அஜித் ஆடுவதையே பார்க்க முடியவில்லை. அந்த அளவுக்கு அஜித் ரசிகர்கள் தியேட்டர் ஸ்க்ரீனுக்கு அருகே சென்று இவர்கள் வேறமாறி குத்தாட்டத்தை போட்டனர். வழக்கம் போல தனக்கு வரும் ஸ்டெப்புகளை போட்டு அஜித் அந்த பாட்டில் நடனமாடி உள்ளார்.
படிக்காதவன் டு F9
வலிமை படத்தில் அஜித்துக்கு அம்மாவாக சுமித்ரா நடித்துள்ளார். அஜித்துக்கு ஒரு அண்ணன் (அச்சுத குமார்) ஊதாரி தம்பி (ராஜ் அய்யப்பா), ஒரு தங்கை அந்த குடும்பத்திலேயே பொறுப்பான ஒரே ஆள் அஜித் மட்டும் தான். ரஜினிகாந்தின் படிக்காதவன் படத்தில் எப்படி தம்பி தவறான வழியில் சென்று மாட்டிக் கொள்கிறாரோ அதே போல வலிமை படத்திலும் அஜித் குமாரின் அந்த ஊதாரி தம்பி வில்லன் கார்த்திகேயா டீமில் இணைந்து விடுகிறார். கடந்த ஆண்டு வெளியான Fast and Furious 9வது பாகத்திலும் தம்பி ஜான் சினா வில்லன் கேங்கில் சேர்ந்து கொண்டு ஹீரோ வின் டீசலுக்கு வினையாக மாறுவார் அதே போன்ற ஒரு கதை தான் வலிமை திரைக்கதையும்.
காதல் காட்சிகள் இல்லை
பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி இந்த படத்தில் டெக்னாலஜி தெரிந்த போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். அடையாளம் சொன்னால் அப்படியே வரைந்து கொடுத்துவிடும் திறமையானவர். அவரும் அஜித்தும் இணைந்து கொண்டு ஏகப்பட்ட கம்ப்யூட்டர்களை வைத்துக் கொண்டு திருடன் கேங்கை எப்படி பிடிக்கின்றனர் என்கிற காட்சிகள் சற்றே சலிப்பை தட்டுகின்றன.
கார்த்திகேயா
டோலிவுட்டின் இளம் ஹீரோ கார்த்திகேயா இந்த படத்தில் சாத்தான் ஸ்லேவ் கேங்கின் தலைவராக படு மிரட்டலாக நடித்துள்ளார். அவருடைய உடல்வாகே மிரட்டுகிறது. மேலும், அவரும் அவரது டீமும் செய்யும் பைக் சாகசங்கள் படத்திற்கு மிகப்பெரிய பிளஸ் ஆக அமைந்துள்ளது.
வொர்த்தே ப்ரீ இன்டர்வெல் தான்
இடைவேளைக்கு முன்பாக ஆரம்பிக்கும் அந்த பைக் சேஸிங் காட்சி தான் வலிமை படத்தை அப்படியே தூக்கி நிறுத்துகிறது. என்னடா கோலிவுட் படத்தில் இப்படியொரு ஹாலிவுட் லெவல் ஸ்டன்ட் காட்சிகளை வச்சிருக்கீங்க என ரசிகர்கள் வாயை பிளக்கும் அளவுக்கு உள்ளது. ஆனால், ஏகப்பட்ட புரமோக்களிலும் அந்த காட்சியை அதிகளவில் காட்டியிருக்க தேவையில்லை என்றும் தோன்றுகிறது.
விரைவில் இரண்டாம் பாதி
வலிமை படத்தின் இரண்டாம் பாதி இன்னும் சிறிது நேரத்தில் நிறைவடைந்து விடும். இரண்டாம் பாதி எப்படி இருந்தது என்றும் தனது அம்மாவின் பாசத்திற்காக தம்பியை வில்லன் கூட்டத்திலிருந்து விடுவித்தாரா அர்ஜுன் என்பதை பார்த்து விட்டு முழு விமர்சனத்தையும் போட்டு விடுகிறோம். வலிமை அஜித் ரசிகர்களுக்கான செம ட்ரீட்!


Click it and Unblock the Notifications











