twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வலிமை விமர்சனம்: வேலையில்லா இளைஞர்கள் எப்படி அடிமையாகின்றனர்.. அஜித் எப்படி மீட்கிறார் என்பதே வலிமை!

    |

    Rating:
    3.5/5

    நடிகர்கள்: அஜித்குமார், கார்த்திகேயா, ஹூமா குரேஷி

    தயாரிப்பு: போனி கபூர்,

    இசை: யுவன் சங்கர் ராஜா, ஜிப்ரான்

    இயக்கம்: எச். வினோத்

    சென்னை: வலிமை படம் திட்டமிட்டபடி இந்த முறை எந்தவொரு தடையுமின்றி உலகம் முழுவதும் 4000 திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

    Recommended Video

    Valimai FDFS Review | Ajith | Huma Qureshi | H Vinod | Yessa Bussa | Filmibeat Tamil

    டீசர் மற்றும் டிரைலர் காட்சிகளே வலிமை படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்த நிலையில், நடிகர் அஜித்தின் பர்ஃபார்மன்ஸ் திரையில் ஒவ்வொரு காட்சிகளிலும் ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.

    அஜித் அடிக்கடி பேசும் பஞ்ச் அட்வைஸ்கள் எல்லாம் பலருக்கும் திரையரங்கில் கேட்காமலே போகும் அளவுக்கு ரசிகர்களின் ஆரவாரம் நிறைந்து இருந்தது.

    Valimai Review: அஜித் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்புகளை பூர்த்தி செய்ததா வலிமை? First Half விமர்சனம்!Valimai Review: அஜித் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்புகளை பூர்த்தி செய்ததா வலிமை? First Half விமர்சனம்!

    அஜித் ரசிகர்களுக்கு விருந்து

    அஜித் ரசிகர்களுக்கு விருந்து

    வலிமை திரைப்படம் நிச்சயம் அஜித் ரசிகர்களுக்கு செம ட்ரீட்டாகவே அமைந்திருக்கிறது. பைக் ஸ்டன்ட் காட்சிகள், வில்லன் கார்த்திகேயாவை முதல் பாதியில் கைது செய்து வைப்பது. அவரை விடுவிக்க அவரது பைக் ரேஸர் டீம் வருவது, அவர்களுக்கும் அஜித்துக்கும் இடையே நடக்கும் சண்டை என ஆக்‌ஷன் காட்சிகளில் மிரட்டி உள்ளார் நடிகர் அஜித். படப்பிடிப்பின் போது விபத்து ஏற்பட்ட அந்த காட்சிகள் எல்லாம் ரசிகர்களை கண்கலங்க வைத்து விட்டது.

    அம்மா பாசம்

    அம்மா பாசம்

    அம்மா பாசத்துல அஜித் எல்லாரையும் ஓவர் டேக் செய்து விடுகிறார். வில்லன் கேங்கில் இணைந்து கொண்டு அஜித்தின் தலையிலேயே தாக்கி விட்டு தப்பிச் செல்லும் தம்பியை நினைத்து சாப்பிடாமல், "குட்டி வரணும்"னு அடம் பிடிக்கும் அம்மாவை சமாதானப்படுத்த அஜித் எடுக்கும் முயற்சிகள் எல்லாம் நெஞ்சை பிழிகின்றன.

    வேலையில்லா திண்டாட்டம்

    வேலையில்லா திண்டாட்டம்

    வேலையில்லாமல் அவதிப்படும் இளைஞர்களை ஒரு ஆப் மூலம் ஒன்றினைத்து அவர்களை சாத்தானின் அடிமைகளாக மாற்றி தனக்கு வேண்டிய தேவைகளையும் கடத்தல் தொழிலையும் செய்து வருகிறார் வில்லன் கார்த்திகேயா. அவரை காட்டும் போதெல்லாம் ரசிகர்களுக்கு ஒரு வித பயமே உண்டாகும் அளவுக்கு அவரது ஸ்க்ரீன் பிரசன்ஸ் இருக்கிறது.

    தம்பியை காப்பாற்ற

    தம்பியை காப்பாற்ற

    அந்த கேங்கில் வேலையில்லாமல் ஊதாரியாக சுற்றித் திரியும் அஜித் குமாரின் தம்பியும் மாட்டிக் கொள்கிறார். அஜித் தலையிலேயே அவர் கட்டையால் அடித்து விட்டு வில்லன் கார்த்திகேயாவை தப்பிக்க வைக்கும் காட்சிகள் எல்லாம் பல படங்களில் பார்த்தை போலவே இருந்தாலும், அம்மாவுக்காக தம்பியையும் தம்பியை போல அடிமையாக சிக்கி சீரழிந்து கிடக்கும் பல தம்பிகளையும் காப்பாற்றி திருத்தும் அண்ணனாக அஜித் குமார் கிளைமேக்ஸில் நெஞ்சை நிமிர்த்துகிறார்.

    அம்மா, அப்பா முக்கியம்

    அம்மா, அப்பா முக்கியம்

    இளைஞர்கள் டார்க் வெப் போன்ற மாய உலகில் சிக்கி சின்னாபின்னமாகி வரும் சூழலில் அம்மா அப்பா பாசம் எவ்வளவு முக்கியம் என்பதை வலிமை திரைப்படத்தின் மூலம் இயக்குநர் எச் வினோத் எடுத்து உரைத்திருக்கிறார். ஆனால், இரண்டாம் பாதியில் கொஞ்சம் லெந்த்தை குறைத்திருந்தால் இன்னமும் படம் அட்டகாசமாக இருந்திருக்கும் என்கிற கருத்து படம் பார்க்கும் அனைவருக்கும் தோன்றுகிறது.

    தாராளமாக பார்க்கலாம்

    தாராளமாக பார்க்கலாம்

    அஜித் குமாரின் வலிமை திரைப்படம் பிளஸ் மற்றும் மைனஸ் காட்சிகள் நிறைந்தே காணப்படுகின்றன. ஆனாலும், வலிமை திரைப்படம் நிச்சயம் மிகப்பெரிய தியேட்டர் எக்ஸ்பீரியன்ஸை ரசிகர்களுக்கு கொடுக்க தவறவில்லை. அக்‌ஷன் மற்றும் ஸ்டன்ட் காட்சிகளுக்காகவே படத்தை தாராளமாக பார்க்கலாம். புதிய திரைக்கதையை எதிர்பார்த்து வருபவர்களுக்கு இந்த படம் ஏமாற்றம் தான்.

    English summary
    Ajith Kumar done a cop named Arjun in Valimai movie. His action block and Mother sentiment and brother rescue with a beautiful message is the theme of the movie.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X