என்ன இப்படி ஆகிடுச்சே.. வலிமைக்கு குவியும் நெகட்டிவ் விமர்சனங்கள்.. எச் வினோத் கைவிட்டுவிட்டாரா?

சென்னை: அஜித் ரசிகர்களுக்கான படமாக மட்டுமே வலிமை திரைப்படத்தை இயக்குநர் எச் வினோத் எடுத்துள்ளார் என நெகட்டிவ் விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் குவிந்து வருகின்றன.

Recommended Video

Valimai FDFS Review | Ajith | Huma Qureshi | H Vinod | Yessa Bussa | Filmibeat Tamil

நடிகர் அஜித்தின் அட்டகாசமான நடிப்பு மற்றும் வில்லன் கார்த்திகேயாவின் ஆக்ரோஷமான நடிப்பு இரண்டுமே ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தை கொடுத்துள்ளது.

ஆனால், எச். வினோத் படங்களுக்கே உரித்தான புதிய திரைக்கதையாக இல்லாமல் வழக்கம் போல போதைப் பொருள், அம்மா, தம்பி சென்டிமென்ட் என கதை நகர்வதால் சற்றே ரெகுலர் ஆடியன்ஸ் கடுப்பாகி உள்ளனர் என நெட்டிசன்கள் பதிவிட்டுள்ள ட்விட்டர் விமர்சனத்தை இங்கே பார்ப்போம்.

தல தாறுமாறு

தல தாறுமாறு

தன்னை தல என அழைக்க வேண்டாம் என நடிகர் அஜித் குமார் கேட்டுக் கொண்டாலும், வலிமை படத்தை தியேட்டரில் பார்த்த அத்தனை ரசிகர்களும், அவரது பெயர் திரையில் வந்தவுடனே தல தாறுமாறு என கோஷம் போட்டு கத்தத் துவங்கி விட்டனர். நடிகர் அஜித் குமாரின் நடிப்பும் படம் முழுக்க அட்டகாசம் தான்.

இரண்டாம் பாதி விஜய் ரசிகர்களுக்கு

இரண்டாம் பாதி விஜய் ரசிகர்களுக்கு

நடிகர் அஜித் குமாரின் வலிமை திரைப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் குவிந்து வருகின்றன. எப்படி இருந்தாலும், வசூல் வேட்டை நடத்தும் என்பதில் எந்தவொரு மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால், வலிமை படத்தின் இரண்டாம் பாதி ரொம்ப லெந்தா இருக்கு என ரசிகர்கள் சீட்டில் நெளிவதை கண்கூடாக பார்க்க முடிகிறது. முதல் பாதி அஜித் ரசிகர்கள் கொண்டாட, இரண்டாம் பாதி விஜய் ரசிகர்கள் கலாய்க்க என நெட்டிசன்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

அமேசிங்

அமேசிங்

வலிமை படத்தில் எந்தவொரு காட்சியையும் ஸ்கிப் செய்ய முடியாத அளவுக்கு படம் என்கேஜாக உள்ளது. அமேசிங்கான படம் வலிமை. அஜித் குமாரின் பிரில்லியன்ட்டான நடிப்பு அட்டகாசமாக உள்ளது. ப்ரீ இன்டர்வெல் பைக் ஸ்டன்ட் காட்சிக்காகவே வலிமை படத்தை தாராளமாக தியேட்டரில் பார்க்கலாம் என இந்த ரசிகர் கருத்து தெரிவித்துள்ளார்.

சத்ய சோதனை

சத்ய சோதனை

வலிமை படத்தில் ஹாலிவுட் தரத்தில் உருவாக்கப்பட்ட அந்த இரண்டு பைக் ஸ்டன்ட் காட்சிகளை விட வேற ஒன்றும் பெரிதாக இல்லை. இரண்டாம் பாதி இழுத்த இழுவை எல்லாம் பொறுமையை ரொம்பவே சோதித்து விட்டது என இந்த அஜித் ரசிகரே போட்டுள்ள நெகட்டிவ் கமெண்ட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

பான் இந்தியா படமா

பான் இந்தியா படமா

வலிமை திரைப்படம் இந்தியா முழுவதும் பல மொழிகளில் உருவாகி உள்ள நிலையில், எதிர்பார்த்த அளவுக்கு சிறப்பாக இல்லை என விஜய் ரசிகர்கள் வச்சு செய்து வருகின்றனர். இதே விஷயத்தை பீஸ்ட் படம் வரும் போது பதிலுக்கு அஜித் ரசிகர்களும் செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வினோத் ஏமாத்திட்டாரு

வினோத் ஏமாத்திட்டாரு

சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று மற்றும் நேர்கொண்ட பார்வை உள்ளிட்ட மூன்று படங்களிலும் திரைக்கதை வலிமையாக இருக்கும். ஆனால், வலிமை திரைப்படத்தில் அஜித்தின் வலிமை மட்டுமே தென்படுகிறதே தவிர வினோத்தின் வலிமை காணாமல் போனது ஏன்? என்கிற கேள்வியைத் தான் ரசிகர்கள் எழுப்பி தங்களது ஏமாற்றத்தை தெரிவித்து வருகின்றனர்.

மரண மாஸ் கிளைமேக்ஸ்

மரண மாஸ் கிளைமேக்ஸ்

இந்திய சினிமாவிலேயே இதுவரை எடுக்காத அளவுக்கு மரண மாஸ் கிளைமேக்ஸ் ஸ்டன்ட் காட்சி ரசிகர்களுக்கு நிச்சயம் கூஸ்பம்ப்ஸ் கொடுக்கும். நெகட்டிவ் விமர்சனங்களை தள்ளி வைத்து விட்டு அஜித் குமாரின் வலிமை படத்திற்கு டிக்கெட் கிடைத்தால் கண்டிப்பாக தியேட்டரில் பார்த்து விடுங்கள்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X