twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    Rocky Review: ரத்தம் தெறிக்க தெறிக்க ஒரு கேங்ஸ்டர் படமான ராக்கி ரசிக்க வைக்கிறதா? சோதிக்கிறதா?

    |

    சென்னை: இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் ரிலீஸ் செய்துள்ள ராக்கி படத்தை இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கி உள்ளார்.

    Recommended Video

    Rocky Review By Poster Pakiri | Bharathiraja, Vasanth Ravi, Nayanthara, Arum M | Filmibeat Tamil

    தரமணி படத்தில் மிரட்டிய நடிகர் வசந்த் ரவி இந்த படத்திலும் வேற லெவலில் மிரட்டி உள்ளார். வசந்த் ரவி 8 அடி பாய்ந்தால் இயக்குநர் இமயம் பாரதிராஜா நடிப்பில் 16 அடி பாய்ந்துள்ளார்.

    கேங்ஸ்டர் படங்களுக்கு என ஒரு தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கத்தான் செய்கிறது என்பதால் புதிதாக கதை ஏதும் இல்லாமல் காட்சிகளை மட்டுமே நம்பி உருவாக்கப்பட்டது போல இருக்கும் ராக்கி ரசிக்க வைக்கிறதா? சோதிக்கிறதா? என்பது குறித்து விரிவாக பார்ப்போம்.

    கையில் சுத்தியல்.. முகத்தில் வழியும் ரத்தம்.. பதறவிட்ட நயன்தாரா.. ராக்கி ப்ரோமோ வீடியோ!கையில் சுத்தியல்.. முகத்தில் வழியும் ரத்தம்.. பதறவிட்ட நயன்தாரா.. ராக்கி ப்ரோமோ வீடியோ!

    2 ஆண்டுகள் வெயிட்டிங்

    2 ஆண்டுகள் வெயிட்டிங்

    வெறித்தனமான கொலை நடுங்கும் சண்டை காட்சிகள் நிறைந்த ராக்கி டிரைலர் வெளியாகி கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் ஆன நிலையில், அந்த படம் எப்போ ரிலீஸ் ஆகும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், ஒருவழியாக பிரச்சனை எல்லாம் முடிந்து திரையரங்குகளில் இந்த படம் வெளியாகி இருக்கிறது.

    அதே பழிவாங்கும் கதை

    அதே பழிவாங்கும் கதை

    சென்னையில் லோக்கல் டானாக இருக்கும் மணிமாறனிடம் (பாரதிராஜா) அடியாளாக சேர்கிறார் இலங்கையில் இருந்து தஞ்சம் பிழைக்க வந்த ராக்கியின் தந்தை. அப்பாவுக்கு பிறகு மகன் ராக்கியும் (வசந்த் ரவி) மணிமாறனுக்கு அடியாளாக வேலை பார்க்கிறார். மணிமாறனின் மகனை ராக்கி ஒரு காரணத்திற்காக கிண்டல் செய்ய ஏற்படும் ஈகோ கிளாஷால் ராக்கியின் அம்மாவான ரோகிணியை மணிமாறனின் மகன் கொலை செய்கிறான்.

    16 ஆண்டு சிறை தண்டனைக்கு பிறகும்

    16 ஆண்டு சிறை தண்டனைக்கு பிறகும்

    அம்மாவை கொன்றவனை ராக்கி கொலை செய்து விட்டு சிறைக்கு செல்ல 16 ஆண்டுகள் கழித்து சிறையில் இருந்து வெளியே வரும் ராக்கியை கொல்லத் துடிக்கும் மணிமாறனையும் அவனது அடியாட்களையும் ராக்கி எப்படி வதம் செய்தார் என்பதை கிளைமேக்ஸ் ட்விஸ்ட் உடன் சொல்லி இருக்கும் படம் தான் ராக்கி.

    படத்தின் பிளஸ்

    படத்தின் பிளஸ்

    ஹாலிவுட் படங்களில் காணப்படும் அதீத வயலென்ஸ் காட்சிகள் ராக்கி படத்தில் அதிகளவில் இடம்பெற்றுள்ளன. அதற்கு தகுந்தவாறு வசந்த் ரவி மற்றும் பாரதிராஜாவின் நடிப்பு மிரட்டுகிறது. இசையமைப்பாளர் தர்புகா சிவாவின் இசை மற்றும் ஒளிப்பதிவாளர் ஷ்ரியாஸ் கிருஷ்ணாவின் பதைபதைக்க வைக்கும் ஷாட்கள் பயமுறுத்துகின்றன. கடைசி அந்த கிளைமேக்ஸ் காட்சியை ரிவீல் செய்ய விரும்பவில்லை. அந்த காட்சி தியேட்டரில் பயங்கர அப்ளாஸ் அள்ளுகிறது.

    படத்தின் மைனஸ்

    சுத்தியல் கொண்டு மண்டையை உடைப்பது, குடலை உருவி மாலையாக போடுவது, ரத்தம் தெறிக்க தெறிக்க சண்டை காட்சிகள் என அதீத வயலென்ஸ் காட்சிகள் படத்தின் பிளஸ் ஆக பார்க்கப்படும் அதே நேரத்தில் அதுவே மைனஸ் ஆகவும் மாறிவிடுகிறது. மேலும், சில லெந்தான காட்சிகள் பார்வையாளர்களை படுத்து தூங்க வைத்து விடுகிறது. மொத்தத்தில் இந்த ரத்தக்களறியான ராக்கியை இளைஞர்கள் கொண்டாடுவார்கள். குடும்பங்கள் தவிர்த்து விடுவார்கள்!

    English summary
    Director Arun Madheswaran’s Rocky movie finally released in theaters. Actor Vasanth Ravi and Bharathiraja done a spellbound acting in this movie.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X