Veera Dheera Sooran 2 X Review: வீர தீர சூரன் ட்விட்டர் விமர்சனம்.. விக்ரம் மாஸ்.. படம் வொர்த்தா?

சென்னை: சியான் விக்ரம் ரசிகர்கள் காலை முதலே படம் வெளியாகவில்லை என்கிற விரக்தியில் இருந்த நிலையில், இன்றே படத்தை எப்படியாவது ரசிகர்களுக்கு கொடுத்து விட வேண்டும் என சியான் விக்ரம் காட்டிய ஆர்வத்தால் தான் படம் பல தடைகளை தாண்டி மாலை வெளியானதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

படத்தின் ஓடிடி உரிமத்தை பெற்றிருந்த B4U என்டர்டெயின்மென்ட் ஓடிடி வியாபாரம் நடப்பதற்கு முன்னதாகவே ரிலீஸ் தேதியை தயாரிப்பு நிறுவனமான HR பிக்சர்ஸ் முடிவு செய்த நிலையில், தங்களுக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டு விட்டதாக தொடர்ந்த வழக்கு தான் இன்று காலை முதல் படம் வெளியாக முடியாமல் திணற காரணம் என்கின்றனர்.

Veera Dheera Sooran 2 X Review in Tamil  Chiyaan Vikram finally gets a blockbuster movie

ஆனால், மதியம் 3 மணிக்கு மேல் நடந்த சமரச பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்ட நிலையில், படம் மாலை 5 மணிக்கு சில தியேட்டர்களிலும் 6 மணிக்கு மேல் பல தியேட்டர்களிலும் வெளியாகி ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஓடி வருகிறது. இந்நிலையில், இந்த வெயிட்டிங்கிற்கு படம் வொர்த்தா? இல்லையா? என ரசிகர்கள் கூறி வரும் ட்விட்டர் விமர்சனத்தை இங்கே பார்க்கலாம் வாங்க..

காளி வேட்டை: சியான் விக்ரம் இந்த படத்தில் காளி எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சுராஜ் வெஞ்சரமுடு கண்ணன் கதாபாத்திரத்தில் தமிழில் அறிமுகமாகி உள்ளார். எம்புரான் படத்தில் அவரை ஊறுகாய் போல மட்டுமே பயன்படுத்திய நிலையில், இந்த படத்தில் அவருக்கு சிறப்பான ரோல். சுராஜ் வெஞ்சரமுடு மற்றும் அவரது அப்பாவிடம் அடியாளாக வேலை பார்த்து வந்த காளி அவர்களை விட்டு விலகி துஷாராவை திருமணம் செய்துக் கொண்டு தனியாக வாழ்ந்து வருகிறார். சுராஜ் வெஞ்சரமுடுவையும் அவரது அப்பாவையும் என்கவுன்ட்டர் பண்ணத் துடிக்கும் போலீஸ் அதிகாரியாக வரும் எஸ்.ஜே. சூர்யாவிடம் இருந்து தன்னையும் தனது மகனையும் காப்பாற்ற முன்னாள் முதலாளி விக்ரமை நாட அதன் பின்னர் நடக்கும் காளி வேட்டை தான் இந்த வீர தீர சூரன் 2ம் பாகம் என ரசிகர்கள் விமர்சனத்தை ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.

சித்தா இயக்குநர் செதுக்கியிருக்காரு: செய்யாத தப்புக்கும் ரசிகர்கள் மனம் வருந்திவிடக் கூடாது என்பதற்காக வீடியோ வெளியிட்டு மன்னிப்புக் கேட்ட சித்தா படத்தின் இயக்குநர் எஸ்.யு. அருண் குமார் சியான் விக்ரமை வைத்து தரமான சம்பவத்தை செய்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். விக்ரம், எஸ்.ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமுடு என ஒவ்வொரு நடிகர்களின் ஒட்டுமொத்த நடிப்புத் திறனையும் வெளிக்கொண்டு வந்து தியேட்டருக்கு வந்த ரசிகர்களை மெய் சிலிர்க்க வைத்திருக்கிறார் இயக்குநர் அருண் குமார்.

ஜி.வி. பிரகாஷ் மிரட்டிவிட்டாரு: சியான் விக்ரம் நடிப்புக்கும் மாஸ் காட்சிகளுக்கும் ஜி.வி. பிரகாஷ் குமார் போட்டுள்ள பின்னணி இசை மிகப்பெரிய பலமாக மாறியுள்ளது என ரசிகர்கள் ஜி.வி. பிரகாஷ் குமாரை கொண்டாடி வருகின்றனர். அதிலும் அந்த கண்ணி வெடி காட்சிகளில் வரும் இசையெல்லாம் டோட்டல் வெறித்தனம் என்கின்றனர்.

வொர்த் வர்மா: காலை முதல் படம் வெளியாகாமல் மாலையில் வெளியான போதும் சியான் விக்ரமுக்காக தியேட்டருக்குச் சென்று பார்த்த ஒவ்வொரு ரசிகர்களும் வொர்த் வர்மா என்றே கூறிக்கொண்டு வெளியே வருவார்கள் என ரசிகர்கள் படத்துக்கு 5க்கு 5 மார்க் போட்டு வருகின்றனர். எம்புரான் படம் ஓவர் பில்டப் மட்டுமே நம்பி உருவாக்கப்பட்ட நிலையில், வீர தீர சூரன் ஒவ்வொரு சீனும் கொல மாஸ் என்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X