Veera Dheera Sooran Public Review: வீர தீர சூரன் பப்ளிக் விமர்சனம்.. விக்ரம் கரியரில் இதுதான் பெஸ்ட்
சென்னை: அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள வீர தீர சூரன் திரைப்படம் பலகட்ட பிரச்னைகளுக்கு பிறகு இன்று மாலை படம் ரிலீஸ் ஆனது. படத்தை பார்க்க ஆவலுடன் காத்திருந்த ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தாலும், தற்போது வந்திருக்கும் செய்திகள் நல்ல செய்தியாகவே இருக்கிறதாம். விக்ரம் கரியரில் இதுதான் பெஸ்ட் படம் என ரசிகர்கள் சிலாகிக்கின்றனர். நீண்ட நேரம் காத்திருப்புக்கு கிடைத்த வெற்றி என படக்குழுவினரும் அவரது ரசிகர்களும் வெற்றி களிப்பில் இருக்கின்றனர். படம் பார்த்த ரசிகர்கள் என்ன சொல்றாங்கனு வாங்க பார்ப்போம்.
சித்தா பட இயக்குநர் எஸ்.யு.அருண்குமார் இயக்கத்தில் விக்ரம், துஷாரா விஜயன், எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, சித்திக் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கும் படம் வீர தீர சூரன். இப்படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியே வெற்றி விழா போல் நடந்தது. இதில், துஷாரா விஜயன் விக்ரமிற்கு கவிதை சொல்லி ப்ரோபோஸ் செய்த காட்சிகளும் வெளிவந்தன. மலையாள நடிகர் சுராஜ் என் வீட்டில் அப்பா மிலிட்டரி, அண்ணன் மிலிட்டரி, நான் மிமிக்ரி என வசனம் பேசி அசத்தினார். பின்பு எஸ்.ஜே.சூர்யா போன்று மிமிக்ரி செய்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். இப்படி பல சுவாரஸ்ய நிகழ்வுகள் மனநிறைவை அளித்தன.

படம் ரிலீஸ் ஆவதில் சிக்கல்: இன்று காலை வெளியாக இருந்த நிலையில் டெல்லியை சேர்ந்த B4U என்ற நிறுவனம் வீர தீர சூரன் படத்தை ரிலீஸ் செய்ய தடை கோரியது. இதனால், காலை 10.30 மணி வரை இடைக்கால தடையை டெல்லி நீதிமன்றம் விதித்தது. இதனால் ரசிகர்கள் ஆத்திரமடைந்தனர். ரசிகர்கள் கோபத்தில் செய்த சம்பவங்களும் வீடியோக்களாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் எல்லா சிக்கல்களும் நீங்கி இன்று மாலை 6 மணிக்கு பல தியேட்டர்களில் படம் ரிலீஸ் ஆவது என உறுதியானது. இதனைத்தொடர்ந்து இயக்குநர் எஸ்.யு.அருண்குமார் ரசிகர்களிடம் மன்னிப்பு கோரினார்.
ரசிகர்கள் ஹேப்பி: முன்னதாக இயக்குநர் அருண்குமார் படத்தின் முதல் 20 நிமிடத்தை மிஸ் பண்ணாதீங்க என்றும் தெரிவித்திருந்தார். அவர் கூறியது போலவே வீர தீர சூரன் படத்தில் சம்பவம் செய்திருக்கிறார். மதுரையை களமாக கொண்டு வெளியாகிருக்கும் இப்படத்தை ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட தொடங்கிவிட்டனர். நீண்ட நேர காத்திருப்புக்கு கிடைத்த வெற்றி எனவும் மகிழ்ச்சியில் தெரிவித்துள்ளனர். ஒவ்வொரு காட்சியும் கொலை மாஸாக இருப்பதாக தெரிவிக்கின்றனர். இன்று வெளியா எம்புரான் சற்று சறுக்கியதால் டாப் கியரில் வீர தீர சூரன் இருக்கிறது.

விக்ரம் கரியரில் பெஸ்ட்: வீர தீர சூரன் படத்தின் டைட்டிலை போலவே காளி சம்பவம் செய்துவிட்டார். ஜி.வி.பிரகாஷ் பிஜிஎம் பின்னிவிட்டதாக தெரிவிக்கின்றனர். தூள், தில், அருள் படங்களின் வரிசையில் வீர தீர சூரன் இடம்பிடித்திருக்கிறது. மேலும், விக்ரம் கரியரில் பெஸ்ட் படம் என்றும் படம் பார்த்த ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். படம் வொர்த் பிளாஸ்ட் தான். மாஸ் பண்ணியிருக்காப்ல என்றும் தெரிவிக்கின்றனர். குடும்பத்தோடு பார்க்க வேண்டிய படமாக இருப்பதாகவும் தியேட்டரில் விசில் சத்தம் பறக்கிறது. வீர தீர சூரன் 2 என முடித்திருக்கிறார்கள். முதல் பாகத்தை பார்க்க ஆவலுடன் இருப்பதாக தெரிவித்துள்ளனர். விக்ரமுக்கு வயசு ஆகாதா மனுஷன் என்ன இப்படி இருக்கிறார். அவர் உடம்பை காட்டி நடிக்கும் போது நம்பவே முடியலை, மனுஷன் சம்பவம் பண்ணிருக்காரு. படமும் சூப்பரா இருக்கு என தெரிவித்துள்ளனர். இதனால், படக்குழு ரொம்ப ஹேப்பியாம். பிளாக்பஸ்டர் ஹிட் என செய்திகள் வெளியாகியுள்ளன.


Click it and Unblock the Notifications











