twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    Veeramae Vaagai Soodum Review: விஷால் நடித்த "வீரமே வாகை சூடும்" படம் எப்படி இருக்கு ?

    |

    சென்னை: விஷால் பல புது முயற்சிகள் செய்யும் குறும்பட இயக்குர்களுக்கு அங்கீகாரம் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் பல நல்ல கதைகள் கேட்டு வந்தார் . அந்த சமயத்தில் மிகவும் தன்னை பாதித்த ஒரு கதையை தான் திரைப்படமாக தன் சொந்த தயாரிப்பில் எடுத்து வெளியிட்டு உள்ளார்.

    ஹீரோ விஷால் எஸ்.ஐ பதவிக்கு தேர்வு எழுதி ரிசல்ட்டுக்காக காத்துக்கொண்டிருக்கிறார். அவரது அப்பா போலீஸ் ஏட்டாக பணிபுரிகிறார். வழக்கமான போலீஸ் கதைதான்.

    போலீஸ் அதிகாரியாக ஆக நினைக்கும் ஒருவரின் வாழ்க்கையில் பிரச்சினைகள் எப்படி எல்லாம் வருகிறது என்பதை பல படங்களில் ரசிகர்கள் பார்த்து இருக்கிறார்கள். அதேதான் இந்தப் படத்திலும் கூறியிருக்கின்றனர்.

    Rating:
    2.5/5

     ரவுடியின் தம்பி

    ரவுடியின் தம்பி

    இருந்தாலும் அதையே கொஞ்சம் சுவாரசியமாக சொல்லி இருப்பது படத்திற்கு பலமாக அமைந்துள்ளது. விஷாலின் தங்கையான ரவீனா ரவிக்கு ஏற்படும் பிரச்சனையே கதையின் முக்கிய அம்சமாக காட்டப்பட்டுள்ளது. ரவீனா வை லோக்கல் ஏரியாவில் இருக்கும் ரவுடியின் தம்பி குணா காதலித்து வருகிறார். ரவீனா அந்த காதலை ஏற்க மறுக்கிறார். ரவீனாவை மிரட்டி காதலை ஏற்க வைக்க முயற்சி செய்கின்றனர். பிறகு ரவீனாவை கடத்தவும் முயற்சி செய்கின்றனர். இந்தப் பிரச்சனைகள் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கும் பொழுது எதிர்பாராத விதமாக மற்றொரு கும்பல் ரவீனாவை கடத்துகின்றனர்.

    கடத்தலை   கண்டுபிடிப்பதே

    கடத்தலை கண்டுபிடிப்பதே

    ரவீனாவை கடத்திய கும்பல் யார்? அவர்களிடமிருந்து விஷால், தனது தங்கையை எவ்வாறு காப்பாற்றுகிறார், தனது தங்கையை ஏன் கடத்தினார்கள் என்று கண்டுபிடிப்பதே இப்படத்தின் கதை.. விஷால் படம் என்றால் எப்பொழுதுமே சண்டை காட்சிகளுக்கு பஞ்சம் இருக்காது. இப்படத்தில் சண்டைக்காட்சிகள் அதிகமாகவே இருக்கிறது.

    எதார்த்தமாக சொன்ன விதம்

    எதார்த்தமாக சொன்ன விதம்


    தனக்குறிய பாணியில் இந்தப் படத்திலும் ஒவ்வொரு சண்டை காட்சிகளிலும் மிரட்டியிருக்கிறார். தங்கை மீது உள்ள பாசம், சராசரி மனிதனுக்கு ஏற்படும் கோபம் அனைத்தையும் எதார்த்தமாகவே காட்டியுள்ளார். விஷாலை சுற்றியுள்ள அனைத்து கதாபாத்திரங்களும் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை உணர்ந்து கச்சிதமாகவே நடித்துள்ளனர். தங்கையாக வரும் ரவீனா, நாயகியாக வரும் டிம்பிள் ஹயாதி, வில்லனாக வரும் பாபுராஜ், அங்கங்கே சிரிக்க வைக்கும் யோகிபாபு என்று அனைவரும் சிறப்பாகவே நடித்துள்ளனர்.

    பின்னணி இசையில்  மிரட்டி

    பின்னணி இசையில் மிரட்டி

    போலீஸ் அதிகாரியாக நினைக்கும் ஒருவருக்கு ஏற்படும் பிரச்சினைகளும், தங்கை பாசம், கடத்தல், சண்டைக்காட்சி என்று அனைத்து விஷயங்களும் பல படங்களில் ரசிகர்கள் பார்த்துள்ளனர். அதனால் படத்திற்கு பாசிட்டிவாக அமைந்த பல விஷயங்கள் நெகட்டிவாகவும் அமைந்துள்ளது. யுவன் சங்கர் ராஜாவின் இசை கேட்கும் ரகத்தில் தான் உள்ளது. யுவன் பாடல்களை விட இந்த படத்தின் பீ ஜீ எம் மிகவும் தரம் .பல காட்சிகள் பின்னணி இசையில் மிரட்டி உள்ளார். அடுத்தடுத்து நடக்கப் போகும் காட்சிகளை யூகிக்க முடிகிறது. இதுவே படத்திற்கு முக்கிய பலவீனமாகவும் அமைந்துள்ளது.

    எதற்காக இப்படி ஒரு பெயர்

    எதற்காக இப்படி ஒரு பெயர்

    திவ்யா என்னும் கதாபாத்திரத்தில் நடித்த தீப்தி மிகவும் எதார்த்தமாக கதையின் ஆழத்தை புரிந்து கொண்டு நன்கு நடித்துள்ளார். விஷால் கதாபாத்திரத்தின் பெயர் "போரஸ்". எதற்காக இப்படி ஒரு பெயர் இயக்குனர் வைத்துள்ளார் என்பதை படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் தான் விளக்கியுள்ளார். விஷால் ரசிகர்கள் என்று சண்டைக்காட்சிகள் பார்ப்பதற்காக பரபரப்பான திரைக்கதை கொண்ட இந்தப் படத்தை குடும்பத்துடன் தியேட்டரில் கண்டிப்பாக காணலாம்.

    ஸ்வாரசிஸ்யத்தை கூட்டி

    கொரோனா காலகட்டத்தில் பெரிய பெரிய படங்களே தியேட்டரில் வெளியிட தயங்கும் சமயத்தில், படக்குழுவினர் படத்தை திரையரங்குகளில் வெளியிட்டது பெரிய விஷயம் தான். இருந்தாலும் படத்தில் இன்னும் ஸ்வாரசிஸ்யத்தை கூட்டி இருக்கலாம். அடுத்ததடுத்து யூகிக்க முடியும் காட்சிகளை சற்று மாற்றி இருந்தால் " வீரமே வாகை சூடும்" நிஜமாகவே வாகை சூடி இருக்கும் இந்த படம்.

    English summary
    Actor Vishal acted "Veeramae Vaagai Soodum" Movie got released in theaters and with lots of emotional impact with stunt sequences.This action thriller film written and directed by Thu Pa Saravanan and produced by Vishal under the banner of Vishal Film Factory. The film features Vishal and Dimple Hayathi in the lead roles
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X