Veeran Review: மரகதநாணயம் இயக்குநர் மாஸ் காட்டினாரா? ஹிப் ஹாப் ஆதியின் வீரன் விமர்சனம் இதோ!

Rating:
3.0/5
Star Cast: ஹிப் ஹாப் ஆதி, வினய், ஆதிரா
Director: ஏ.ஆர்.கே. சரவணன்

இசை: ஹிப் ஹாப் ஆதி

நேரம்: 2 மணி நேரம் 40 நிமிடங்கள்

சென்னை: மரகத நாணயம் படத்தையே ஃபேண்டஸி கதையாக எடுத்து ஹிட் கொடுத்த இயக்குநர் ஏ.ஆர்.கே. சரவணன் இயக்கத்தில் ஹிப் ஹாப் ஆதி, ஆதிரா, வினய், முனிஷ்காந்த், காளி வெங்கட் மற்றும் நக்கலைட்ஸ் யூடியூப் சேனல் நடிகர்கள் நடித்துள்ள வீரன் திரைப்படம் இன்று வெளியானது.

தமிழ் சினிமாவில் சூப்பர் ஹீரோ ஜானரில் முகமூடி, வேலாயுதம், கந்தசாமி, ஹீரோ உள்ளிட்ட சில படங்கள் வெளியானாலும், அவை எல்லாமே பேட்மேன் வகையறா படங்கள் தான்.

ஆனால், முதன் முறையாக சூப்பர் சக்தி கொண்ட சூப்பர் ஹீரோ படமாக வெளியாகி உள்ள ஹிப் ஹாப் ஆதியின் வீரன் திரைப்படம் ரசிகர்களை கவந்ததா? ஹிப் ஹாப் ஆதிக்கு ஹிட் கொடுத்ததா? என்கிற முழுமையான விமர்சனத்தை இங்கே பார்க்கலாம் வாங்க..

Veeran Review in Tamil: Hip Hop Aadhis Tamil Super hero movie a good attempt

வீரன் கதை: டைட்டிலுக்கு ஏற்றபடி வீரானூர் எனும் கிராமத்தில் உள்ள சிறுவன் குமரனுக்கு (ஹிப் ஹாப் ஆதி) மின்னல் தாக்கி விபத்து ஏற்படுகிறது. அதன் காரணமாக சுயநினைவை இழக்கிறான். அந்த சிறுவனை அவனது அக்கா சிங்கப்பூருக்கு அழைத்துச் சென்று காப்பாற்றுகிறார்.

தனது வீரானூர் ஊருக்கு மிகப்பெரிய அழிவு ஏற்பட உள்ளதை ஒரு கட்டத்தில் உணரும் குமரன் தனக்குள் இருக்கும் மின்னல் சக்தியை வைத்துக் கொண்டு ஊர் மக்களின் காவல் தெய்வமான வீரன் கெட்டப்பில் தோன்றி வில்லன்களை பந்தாடி அந்த கிராமத்தை எப்படி காப்பாற்றுகிறார் என்பது தான் வீரன் படத்தின் கதை.

படம் எப்படி இருக்கு?: வீரனாகவும் குமரானவும் ஹிப் ஹாப் ஆதி முந்தைய படங்களில் இருந்து நடிக்க ரொம்பவே மெனக்கெட்டு இருப்பது தெரிய வருகிறது. ஆனால், இன்னமும் பயிற்சி தேவை என்று தான் பார்க்கும் ரசிகர்களுக்கு தெரிகிறது.

ஹிப் ஹாப் ஆதி சூப்பர் ஹீரோவாக நடித்தால் மட்டும் படத்தை பார்த்து விடுவார்களா? அதில் ஏதாவது என்டர்டெயின்மென்ட் இருக்க வேண்டுமே என்பதற்காக முனிஷ்காந்த், காளி வெங்கட் காம்போவை உள்ளே வைத்தது தான் படம் பாஸாகவே முக்கிய காரணம்.

நக்கலைட்ஸ் நடிகர்களும் தங்கள் பங்குக்கு ஸ்கோர் செய்துள்ளனர். வில்லன் வினய்யின் தம்பியாக நடித்துள்ள பத்ரியின் நடிப்பு படத்திற்கு கைகொடுத்துள்ளது.

தனது கண்டுபிடிப்புக்காக கிராமத்தையே அழிக்கும் திட்டத்தை அமல்படுத்த வினய் துடித்துக் கொண்டிருக்க, அடுத்தவர் மூளையில் என்ன நினைக்கிறார்கள் என்பதை அறியும் ஆற்றல் கொண்ட குமரன் எல்லைச் சாமியான வீரனாக மாறி ஊர் மக்களின் நம்பிக்கையை பெற்று எப்படி அந்த சதித் திட்டத்தை தடுத்து மக்களை காப்பாற்றுகிறார் என்கிற எடுத்துக் கொண்ட கதையை பக்காவாக சொல்லி இருக்கிறார் இயக்குநர் ஏ.ஆர்.கே. சரவணன்.

Veeran Review in Tamil: Hip Hop Aadhis Tamil Super hero movie a good attempt

பிளஸ்: ஹிப் ஹாப் ஆதியின் நடிப்பு படத்திற்கு பெரிய பலம் என்று சொல்ல முடியவில்லை என்றாலும், போர் அடிக்காமல் தேவையில்லாத பாடி லேங்குவேஜ் செய்யாமல் ஷட்டிலாக நடித்திருப்பதே பெரிய ஆறுதலாகத் தான் உள்ளது.

2 மணி நேரம் 40 நிமிடங்கள் ரசிகர்களை தியேட்டரில் உட்கார வைக்க காமெடியை பெரிதும் நம்பியது பலமாக மாறி உள்ளது. ஒளிப்பதிவாளர் தீபக் டி மேனனின் கேமரா வொர்க் அந்த ஊரை அவ்வளவு அழகாக காட்டுகிறது. அந்த ஸ்டேஷன் காட்சி மற்றும் இடைவேளை காட்சிகள் சூப்பர்.

மைனஸ்: சூப்பர் ஹீரோவாக ஒருத்தர் மாற வேண்டும் என்றால், அதற்கு முன்னாடியே சூப்பர் வில்லன் ஒருவர் உருவாகி இருக்க வேண்டும். ஆனால், அந்த இடத்தில் பெரிய ஓட்டையே விழுந்திருக்கிறது.

டாக்டர், எதற்கும் துணிந்தவன் படங்களில் வில்லனாக நடித்த வினய் இந்த படத்திலும் வில்லனாக நடித்துள்ளார். அவரை பார்த்தால் பெரிதாக பயம் ஏற்படவில்லை. மின்னல் முரளி படத்தின் வெற்றிக்கு காரணமே குரு சோமசுந்தரத்தின் கதாபாத்திரமும் அவரது பிளாஷ்பேக்கும் தான். ஆனால், அந்த வகையில் வீரன் படத்தின் வில்லன் வீக் ஆனதால், படமும் பெரிதாக வொர்க்கவுட் ஆகவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X