Veeran Twitter Review: மின்னல் முரளியை மிஞ்சியதா ஹிப் ஹாப் ஆதியின் வீரன்.. ட்விட்டர் விமர்சனம் இதோ!
சென்னை: மரகத நாணயம் படத்தின் மூலம் ஆதிக்கு ஒரு ஹிட் கொடுத்த இயக்குநர் ஏ.ஆர்.கே. சரவணன் இயக்கத்தில் ஹிப் ஹாப் ஆதி நடித்துள்ள வீரன் திரைப்படம் இன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி உள்ளது.
மீசையை முறுக்கு படத்திற்கு பிறகு ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் வெளியான நட்பே துணை சுமாராக ஓடியது. ஆனால், அதன் பின்னர் அவர் நடிப்பில் வெளியான நான் சிரித்தால், சிவகுமாரின் சபதம் மற்றும் அன்பறிவு உள்ளிட்ட படங்கள் படு தோல்வியை சந்தித்தன.

இந்நிலையில், சூப்பர் ஹீரோ சப்ஜெக்ட் படமாக வெளியாகி உள்ள வீரன் ஹிப் ஹாப் ஆதிக்கு ஹிட் கொடுத்ததா? இல்லையா? என்கிற ட்விட்டர் விமர்சனத்தை இங்கே பார்க்கலாம் வாங்க...
அதே அரைச்ச மாவுதான்: வீரன் படமே மின்னல் முரளி காப்பி தான் என ஹிப் ஹாப் ஆதியே ப்ரமோஷன் வீடியோவில் புலம்பிய நிலையில், அந்த படத்தை பார்த்த ரசிகர்கள் இந்த வீரன் அதே அரைச்ச பழைய மாவு தான் என்றும் புதிதாக திரைக்கதையில் ஒன்றுமில்லை. ஒரு சூப்பர் ஹீரோ உருவாக வலுவான காரணமே இல்லை.

ஆனால், எதிர்பார்ப்பே இல்லாமல் சென்ற எனக்கு இந்த படம் சுமாராக வொர்க்கவுட் ஆனதாக இந்த ரசிகர் விமர்சித்துள்ளார்.
நண்பர்களுடன் போகலாம்: ஹிப் ஹாப் ஆதியின் வீரன் படத்தை நண்பர்கள் கூட்டத்தோடு சென்று பார்த்தால் செம ஜாலியா ரசிக்கலாம்.. காமெடி நல்லாவே இருக்கு என இந்த ரசிகர் படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனத்தைக் கொடுத்துள்ளார்.
முனிஷ்காந்த் மாஸ்: வீரன் படத்தில் முனிஷ்காந்தின் காமெடி நீண்ட நாட்களுக்குப் பிறகு பக்காவா வொர்க்கவுட் ஆகி உள்ளது. அவரது அலப்பறைக்காகவே முதல் பாதியை ரசிக்கலாம். இரண்டாம் பாதியும் ரொம்ப நீட்டாகவே உள்ளதாக இந்த ரசிகர் பதிவிட்டுள்ளார்.

படம் வேறலெவல்: வீரன் படம் வேறலெவல்ல இருக்கு, நிச்சயம் மிகப்பெரிய ஹிட் அடிக்கும். VFX காட்சிகள் சொதப்பவில்லை. கதையும் என்கேஜிங்காகவே உள்ளது. ஹிப் ஹாப் ஆதி தனது நடிப்பில் ரொம்பவே முன்னேறி உள்ளார் என்பது திரையில் தெளிவாகவே தெரிகிறது. நிச்சயம் தமிழ் சூப்பர் ஹீரோ வீரனை திரையில் காணலாம் என இந்த ரசிகரும் பாராட்டி உள்ளார்.
காமெடி கலக்கல்: சூப்பர் ஹீரோ மூவியாக உருவாகி உள்ள வீரன் திரைப்படத்தில் முனீஷ்காந்த், காளி வெங்கட், சின்னி ஜெயந்தின் காமெடி காட்சிகள் ரசிகர்களை தியேட்டரில் வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது. காமெடி காட்சிகள் நல்லாவே வொர்க்கவுட் ஆன நிலையில், படம் ஆரம்பித்தது முதல் இறுதி வரை சொதப்பாமல் இருப்பதே இந்த படம் வெற்றிப்படமாக மாறி விடும் என்கிற நம்பிக்கை கொடுக்கிறது என ரசிகர்கள் வீரன் படத்தை வரவேற்றுள்ளனர்.

மின்னல் முரளியை மிஞ்சியதா: மின்னல் முரளிக்கும் இந்த படத்துக்கும் சம்மந்தமே இல்லை என மின்னல் முரளி இயக்குநர் பசில் ஜோசப்பே சொல்லி விட்டார். படத்தை பார்த்த ரசிகர்கள் மின்னல் முரளியில் காமெடி அதிகம் இல்லை. ஆனால், ஆக்ஷன் காட்சிகள் மற்றும் மிரட்டலான வில்லன் போர்ஷன் இருக்கும். வீரன் படத்தில் காமெடிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து ரசிகர்களை என்டர்டெயின் செய்துள்ளார் இயக்குநர் சரவணன் என ரசிகர்கள் விமர்சனங்களை அடுக்கி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











