Veetla Vishesham Twitter Review: ஆர்ஜே பாலாஜியின் வீட்ல விசேஷம் எப்படி இருக்கு? மக்கள் கருத்து என்ன?

சென்னை: ஆர்ஜே பாலாஜி மற்றும் என்.ஜே சரவணன் இயக்கி உள்ள வீட்ல விசேஷம் திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது.

இந்தியில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் வெளியான பதாய் ஹோ படத்தின் அதிகாரப்பூர்வ தமிழ் ரீமேக் தான் இந்த படம்.

சத்யராஜ், ஊர்வசி, ஆர்ஜே பாலாஜி, அபர்ணா பாலமுரளி, ஷிவானி நாராயணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படம் எப்படி இருக்கு என நெட்டிசன்கள் வெளியிட்டுள்ள விமர்சனங்களை இங்கே காண்போம்.

குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி

குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி

இயக்குநராகவும் நடிகராகவும் ஆர்ஜே பாலாஜி இந்த படத்தில் கலக்கி உள்ளார் என்றும் லெஜண்டரி நடிகர்களான சத்யாராஜ், ஊர்வசி மற்றும் கே.பி.ஏ.சி. லலிதா இந்த மூன்று பேரும் தான் வீட்ல விசேஷம் படத்தின் முக்கிய தூண்கள் என்றும், நிச்சயம் குடும்பங்கள் இந்த படத்தை கொண்டாடும் என கெளஷிக் எல்.எம் தனது விமர்சனந்த்தை முன் வைத்துள்ளார்.

புதிய காட்சிகள் இருக்கு

புதிய காட்சிகள் இருக்கு

இந்தியில் வெளியான பதாய் ஹோ படத்தை விட தமிழ் ரசிகர்களை கனெக்ட் பண்ணும் விதமாக ஏகப்பட்ட புதிய காட்சிகளும் இந்த படத்தில் இருப்பதாக ரமேஷ் பாலா ட்வீட் போட்டுள்ளார். 3.5 மதிப்பெண்கள் இந்த படத்திற்கு கொடுத்துள்ளார். சினிமா பாக்ஸ் ஆபிஸ் நிலவரங்களை டிராக் செய்து வெளியிட்டு வரும் இவரது விமர்சனத்தை ஏகப்பட்ட ரசிகர்கள் லைக் செய்துள்ளனர்.

சத்யராஜ் கலக்கிட்டாரு

சத்யராஜ் கலக்கிட்டாரு

வீட்ல விசேஷம் படத்தில் அப்பாவியான அப்பா கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டி எடுத்து இருக்கிறார் நடிகர் சத்யராஜ் என பலரும் பாராட்டி வருகின்றனர். படம் வெளியாகும் முன்னரே இந்த படம் கண்டிப்பாக ஹிட் அடிக்கும் என சத்யராஜ் பேட்டி அளித்த நிலையில், இந்த ரசிகரும் அவரது நடிப்பை பாராட்டி உள்ளார். ஆர்ஜே பாலாஜி, அபர்ணா பாலமுரளி சிறப்பாக நடித்துள்ளனர் என்றும் பாராட்டி உள்ளார்.

கிளைமேக்ஸ் காட்சி கலக்கல்

கிளைமேக்ஸ் காட்சி கலக்கல்

சத்யராஜ் பல நடிகர்களுடன் இணைந்து காமெடியில் கலக்கி உள்ளார். இந்நிலையில், முதன்முறையாக ஆர்ஜே பாலாஜி மற்றும் சத்யராஜின் காம்போ இந்த படத்தில் வேறலெவலில் வொர்க்கவுட் ஆகி உள்ளது. குறிப்பாக அந்த கிளைமேக்ஸில் வரும் மருத்துவமனை காட்சி தான் எல்லாத்தையும் விட அசத்தல் என பலரும் பாராட்டி வருகின்றனர்.

ஊர்வசி எனும் நடிப்பு ராட்சசி

ஊர்வசி எனும் நடிப்பு ராட்சசி

வீட்ல விசேஷம் படத்தின் கதை ரொம்ப சிம்பிள் தான். ஆனாலும், அதை ஆர்ஜே பாலாஜி இயக்கிய விதம் தான் இத்தனை பெரிய வெற்றிக்கு காரணம் என இந்த ரசிகர் பாராட்டி உள்ளார். சத்யராஜ் மற்றும் நடிப்பு ராட்சசி ஊர்வசி நடித்துள்ள இந்த படம் ரசிகர்களை கட்டாயம் தியேட்டருக்கு வரவழைக்கும் என இந்த ரசிகர் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X