வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்- விமர்சனம்

By Shankar

-எஸ் ஷங்கர்

Rating:
2.5/5
Star Cast: விஷ்ணு விஷால், நிக்கி கல்ராணி, சூரி
Director: எஸ் எழில்

நடிப்பு: விஷ்ணு விஷால், நிக்கி கல்ராணி, சூரி, ரோபோ சங்கர், ரவி மரியா

ஒளிப்பதிவு: சக்தி

இசை: சி சத்யா

தயாரிப்பு: ஃபாக்ஸ் ஸ்டார் & விஷ்ணு விஷால்

இயக்கம்: எஸ் எழில்

துள்ளாத மனமும் துள்ளும், பெண்ணின் மனதைத் தொட்டு என கொஞ்சம் சீரியஸ் காதல் கதைகளை நகைச்சுவை ஊறுகாயோடு தந்து வந்த இயக்குநர் எழில், மனம் கொத்திப் பறவையிலிருந்து 'ஊறுகாயை'யே பிரதானமாக வைத்து ஓரளவு வெற்றியும் பெற ஆரம்பித்துவிட்டார்.

velainu vandhutta vellaikaaran Review

அவரது தேசிங்கு ராஜா, வெள்ளைக்கார துரை பாணியில் வந்திருக்கிற காமெடிப் படம் இந்த 'வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்'.

ஊரில் டெய்லர் கடை வைத்திருக்கும் விஷ்ணு, லோக்கல் எம்எல்ஏ ரோபோ சங்கரின் வலது கரம் மாதிரி. அந்த ஊரில் சாப்பாட்டுக் கடை நடத்துபவரின் மகள் நிக்கி கல்ராணி. போலீஸ் வேலையில் சேர்வதுதான் இவருக்கு லட்சியம்.

விஷ்ணுவுக்கு இருக்கும் அரசியல் செல்வாக்கைக் கண்டு, அவர் மூலம் நிக்கியை போலீசில் சேர்க்க ரூ 10 லட்சம் தருகிறார் நிக்கியின் அப்பா. நிக்கியை போலீசாக்கி, அப்படியே தன் மனைவியாகவும் ஆக்கிக் கொள்ள ஆசைப்படுகிறார் விஷ்ணு.

velainu vandhutta vellaikaaran Review

எம்எல்ஏவிடம் அந்த பணத்தைக் கொடுத்து சிபாரிசு பண்ணும்படி கேட்கிறார். அப்போது எம்எல்ஏவின் குரு மாதிரி இருக்கும் மந்திரி உடல் நிலை மோசமாகிறது. அவரைப் பார்க்க மருத்துவமனைக்குச் செல்கிறார் எம்எல்ஏ. அங்கு தான் பதுக்கி வைத்திருக்கும் ரூ 500 கோடி பணம் குறித்த ரகசியத்தை, ரோபோ சங்கரிடம் சொல்லிவிட்டு உயிரை விடுகிறார் மந்திரி.

இந்த ரகசியத்தை அறிய மந்திரியின் மச்சான் ரோபோவைத் துரத்த, அது விபத்தில் முடிகிறது. நினைவு தப்பிப் போன ரோபோ, 10 வயது குழந்தையின் மனநிலைக்கு வந்துவிடுகிறார். அவரிடமிருந்து ரூ 500 கோடி ரகசியத்தைப் பெற பாடாய் படுகிறார்கள்.

velainu vandhutta vellaikaaran Review

இன்னொரு பக்கம், சொந்த தகுதியிலேயே போலீஸ் வேலைக்கு வந்துவிடும் நிக்கி, விஷ்ணு நடத்திய தில்லுமுல்லுகளை அறிந்து தனது 10 லட்சம் ரூபாயை திரும்ப தருமாறு விஷ்ணுவை பின்னி எடுக்கிறார்.

ரோபோ சுயநினைவுக்கு வந்தாரா? விஷ்ணு - நிக்கி பிரச்சினை தீர்ந்து திருமணத்தில் இணைந்தார்களா? என்பது மீதிக்கதை.

இடையில் புஷ்பா புருஷனாக வரும் சூரியின் 'கலகல' சோகக் கதை!

velainu vandhutta vellaikaaran Review

நீர்ப்பறவை, ஜீவா போன்ற வித்தியாசமான முயற்சிகளில் இறங்கிய விஷ்ணுவுக்கு இது ரொம்ப சாதாரண வேடம். லோக்கல் அல்டாப்பு & எம்எல்ஏவின் வலதுகரமாக இயல்பாக நடித்திருக்கிறார். ஒவ்வொரு முறையும் அவர் சூரியை சிக்கலில் மாட்டிவிடும்போது கலகலக்க வைக்கிறார்.

நிக்கி கல்ராணி முரட்டுத்தனமாக அறிமுகமாகிறார். கொஞ்ச நேரத்தில் சாதாரணப் பெண்ணாகிவிடுகிறார். அவருக்கும் விஷ்ணுவுக்கும் இந்த கெமிஸ்ட்ரி என்பார்களே... அது பெரிதாக ஒர்க் அவுட் ஆகவில்லை இந்தப் படத்தில்!

புஷ்பா புருஷனாக வரும் சூரியும், எம்எல்ஏ ரோபோ சங்கரும் படத்தை தூக்கி நிறுத்துகிறார்கள். இவர்களைப் பார்த்ததுமே சிரிக்க ஆரம்பித்துவிடுகிறார்கள் பார்வையாளர்கள். அதிலும் அந்த 500 கோடி ரூபாய் ரகசிய விசாரணையின்போது, 'காலங்காத்தால ஆறு மணிக்கு...' என ரோபோ சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லும் காட்சி அத்தனை நீளமாக இருந்தாலும், சிரிப்பில் குலுங்குகிறது தியேட்டர்.

velainu vandhutta vellaikaaran Review

புஷ்பா புருஷன் என்ற லேபிளிலிருந்து கடைசி வரை மீள முடியாமல் சூரி படும் பாட்டை ரசித்துச் சிரிக்கிறார்கள் மக்கள். ரவி மரியா, பாவா லட்சுமணன் உள்ளிட்ட குழுவினர் சரியான பக்கவாத்தியம்!

இரண்டே கால் மணி நேரம்தான் படம். இதில் பல காட்சிகள் ஏற்கெனவே வந்தவை.. அடுத்து என்னவாக இருக்கும் என யூகிகக் கூடியவைதான். என்றாலும் காட்சிக்குக் காட்சி பார்வையாளர்களைச் சிரிக்க வைக்க வேண்டும் என்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு வேலைப் பார்த்திருக்கிறார் எழில்.

வித்தியாசமான க்ளைமாக்ஸ் வேண்டுமே என யோசித்து, கடைசியில் மொட்டை ராஜேந்திரனை ஆவிக் கூட்டத் தலைவனாக்கியிருப்பது காதில் பூ அல்ல, பூந்தோட்டம்!

velainu vandhutta vellaikaaran Review

படத்தின் மைனஸ் இசை. பாடல்களுக்கு முழுசாகக் கத்தரி போட்டிருந்தால் இன்னும்கூட நன்றாக இருந்திருக்கும். சக்தியின் ஒளிப்பதிவு ஓகே. ரசித்து காட்சிப்படுத்துமளவுக்கு திரைக்கதை இல்லாததால், அவருக்கு பெரிய வேலையில்லை.

குடும்பத்துடன் விடுமுறை நாளில் சிரித்துவிட்டு வர இந்த வெள்ளைக்காரன் ஏத்தவன் தான்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X