Don't Miss!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Lifestyle பானை போன்று வீங்கியிருக்கும் தொப்பையை குறைக்கணுமா? அப்ப இந்த 2 விதையை நீரில் கொதிக்க வெச்சு குடிங்க..
- Finance கடன் வாங்கி சம்பளம் கொடுத்த பைஜூஸ் சிஇஓ.. நாளுக்கு நாள் மோசம்..!
- News போட்டு கொடுத்த உறவினர்? ரூ.4 கோடி விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் -உதவியாளருக்கு சம்மன்! பின்னணி
- Automobiles மதுரை, திருச்சி சேலம் ஸ்டேஷன்களில் ரூ20க்கு ஃபுல் மீல்ஸ்! முன்பதிவில்லாத பெட்டி அருகே விற்பனை செய்ய உத்தரவு!
- Technology ஆளுக்கு 1 ஆர்டர்.. ரூ.10,999 போதும்.. 50எம்பி கேமரா.. புதிய Realme 5ஜி போன்கள் அறிமுகம்.. எந்த மாடல்?
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
துப்பாக்கி குண்டு..ரணகளம்..வெந்து தணிந்தது காடு டிரைலர்..எப்படி இருக்கு?
சென்னை : கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள 'வெந்து தணிந்தது காடு' திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் சார்பாக ஐசரி கணேஷ் தயாரித்துள்ள இப்படத்தின் வெளியீட்டு உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது.
இப்படம் வருகிற செப்டம்பர் 15-ஆம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது. இப்படத்தின் டிரைலர் எப்படி இருக்குனு பார்க்கலாமா?
“இதுல கதையே கிடையாது“..மிரட்டலாக வெளியானது வெந்து தணிந்தது காடு டிரைலர்!
வெந்து தணிந்தது காடு
ராதிகா சரத்குமார், கயடு லோஹர், சித்திக் மற்றும் நீரஜ் மாதவ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் வெந்து தணிந்தது காடு. இந்த படத்திற்கான சிம்பு, உடல் எடையை குறைத்து 20 வயது இளைஞர் போல காணப்பட்டார். கிட்டத்தட்ட 3 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு அண்மையில் முடிந்துள்ளது.
மூவர் கூட்டணி
வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில், கவுதம் மேனன் இயக்கத்தில், சிம்பு மற்றும் ஏ.ஆர்.ரகுமான் கூட்டணி மூன்றாவது முறையாக இப்படத்தில் இணைந்துள்ளனர். இந்த படத்தில் இருந்து 2 பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. அதே போல டீசரும் வெளியாகி ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை தூண்டி உள்ளது.
மிரட்டலான டிரைலர்
இந்நிலையில், இத்திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. டிரைலரின் ஆரம்பத்தில், கௌதம் மேனனின் மிரட்டலான குரலில், சில சமயம் உண்மையை சொல்வது கதை சொல்வதைவிட கஷ்டம்..இது ஒரு உண்மையான மனுஷனோட வாழ்க்கை என்று ஏ.ஆர் ரஹ்மானில் பின்னணி இசையில் டிரைலர் ஆர்வத்தை தூண்டுகிறது.
கொல்லுவியா..?
என்னை கொல்லுவியா..? என்னை கொல்லுவியா.. கொல்லு.. என்ற வார்த்தைகளுடன் அடிதடி, துப்பாக்கி சத்தம் என ரணகளமாக இருக்கிறது டிரைலர். டிரைலரின் முடிவில் போ போயி சாவு என்ற வசனத்தோடு டிரைலர் முடிகிறது. அதுவரை கிராமத்து இளைஞனாக வரும் சிம்பு, இறுதியில் கோட் சூட் என மொத்தமாக மாறி கேங் ஸ்டாராக உள்ளார். இந்த டிரைலரை சிம்புவின் ரசிகர்கள் இணையத்தில் டிராண்டாக்கி வருகின்றனர்.
எழுத்தாளர் ஜெயமோகன்
எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய அக்னி குஞ்சொன்று கண்டேன் கதையை மையமாக வைத்து இந்த படம் உருவாகி உள்ளது உள்ளது. மணிரத்னம், ஷங்கர், வெற்றிமாறன், பாலா உள்ளிட்ட முதன்மை இயக்குனர்களின் திரைப்படங்களில் பணிபுரிந்துள்ள எழுத்தாளர் ஜெயமோகன் முதன்முறையாக கௌதம் மேனனுடன் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் இணைகிறார்.
மும்பை கேங்ஸ்டர்
ராமநாதபுரம் மாவட்டத்தில் முள்வெட்டும் தொழில் செய்யும் இளைஞன் ஒரு துப்பாக்கியை வைத்து எப்படி மும்பையில் கேங்ஸ்டர் ஆகிறான் என்பதுதான் இப்படத்தின் அக்கதை. படத்தின் சுவாரசியத்திற்காக சில காதல் காட்சிகள் படத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாக இயக்குநர் கௌதம் மேனன் கூறியுள்ளார். இத்திரைப்படம் செப்டம்பர் 30ந் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது.
-
லேடி கெட்டப் போடுறது எவ்ளோ கஷ்டம்ப்பா.. மெலோடியாக கவின் எப்படி மாறுறாரு பாருங்க.. மேக்கிங் வீடியோ!
-
மதுரை சித்திரை திருவிழா.. மறக்க முடியாத நாள் இதுதான்! நடிகர் சூரி எமோஷனல்.. கடைசியில் செய்தது ஹைலைட்
-
Pandian stores 2: குமரனை சம்பவம் செய்ய ஒன்றுசேரும் சகோதரர்கள்.. தடுக்க பரிதவிக்கும் பழனிவேல்!