twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    Vennila Kabadi Kuzhu 2 Review: வெண்ணிலா கபடிக்குழு 2... மேட்சில் வெற்றியா? தோல்வியா?.. விமர்சனம்!

    தந்தையின் லட்சியத்தை நிறைவேற்ற கபடி விளையாடி ஜெயிக்கும் மகனின் கதை தான் வெண்ணிலா கபடி குழு 2 திரைப்படம்.

    |

    Recommended Video

    vennila kabadi kuzhu 2 Review : வெண்ணிலா கபடிக்குழு 2 படம் எப்படி இருக்கு.. மக்கள் கருத்து- வீடியோ

    Rating:
    2.0/5
    Star Cast: விக்ராந்த், அர்த்தனா, சூரி, கிஷோர், பசுபதி
    Director: செல்வா சேகரன்

    சென்னை: தனது தந்தையின் லட்சியத்தை நிறைவேற்ற மகன் விளையாடும் கபடி ஆட்டம் தான் வெண்ணிலா கபடி குழு 2.

    கதை நடக்கும் ஆண்டு 1989. தென்காசியில் கேசட் கடை நடத்தி வரும் விக்ராந்த், தான் உண்டு தனது வேலை உண்டு என வாழ்பவர். நாயகி அர்த்தனா பினுவை கண்டதும் காதல் கொள்கிறார். இவரும் டூயட் பாடி ஊரை சுற்றி வருகிறார்கள்.

    Vennila kabadi kuzhu 2 review: Fails to meet the impact of its first part

    விக்ராந்த்தின் தந்தை பசுபதி ஒரு அரசு பேருந்து ஓட்டுனர். கபடி பிரியரான அவர் எந்த ஊரில் கபடி போட்டி நடந்தாலும் அரசு பஸ்சை எடுத்துக் கொண்டு போய்விடுவார். அப்படி ஒருமுறை செய்யும் போது, கையும் களவுமாக மாட்டி வேலையை இழக்கிறார். இதனால் விக்ராந்த்துக்கு தந்தை மீது கடும் கோபம். பசுபதியை கடுமையாக திட்டுகிறார்.

    அப்போது தான் அவரது அம்மா மூலமாக தெரிகிறது, பசுபதி ஒரு முன்னாள் கபடி வீரர் என்பது. தனக்காக அந்த விளையாட்டையே தூக்கிப்போட்ட தந்தைக்காக ஏதாவது செய்ய வேண்டும் என முடிவு எடுக்கிறார் விக்ராந்த். பசுபதியின் சொந்த ஊரான கணக்கன்பட்டிக்கு சென்று வெண்ணிலா கபடிக்குழுவில் இணைந்து கபடி போட்டியில் ஜெயித்து கோப்பை வெல்ல சபதம் ஏற்கிறார். அவரது சபதம் என்ன ஆகிறது என்பது தான் மீதிப்படம்.

    Vennila kabadi kuzhu 2 review: Fails to meet the impact of its first part

    வெண்ணிலா கபடிக்குழு முதல் பாகம் அளவுக்கு பெரிதாக எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை இரண்டாம் பாகம். முந்தைய படத்தின் தொடர்ச்சியாகவும் இல்லாமல், வித்தியாசமாகவும் இல்லாமல், அந்த படத்துடன் தொடர்ப்பு படுத்த வேண்டும் என்பதற்காக ஏதேதோ முடிச்சு போட்டிருக்கிறார் இயக்குனர்.

    Vennila kabadi kuzhu 2 review: Fails to meet the impact of its first part

    கடைசி 15 நிமிடங்கள் மட்டுமே படம் விறுவிறுப்பாக இருக்கிறது. முதல் பாதி படத்தில் ஏனோதானோவென நகர்கிறது. தேவையில்லாத காதல் காட்சிகள், பாடல்கள் என செம போரிங். அதுவும் காமெடி என்ற பெயரில் கஞ்சா கருப்பு செய்யும் அலப்பறைகள், நமக்கு கோபத்தை தான் வரவழைக்கிறது.

    Vennila kabadi kuzhu 2 review: Fails to meet the impact of its first part

    இரண்டாம் பாதியில் கபடி மேட்சும், சூரியின் காமெடியும் கொஞ்சம் மனநிம்மதி தருகிறது. ஆனால் கறிக்குழம்பு காமெடி சிரிப்பை வரவைத்தாலும், அருவருப்பின் உச்சம். க்ளைமாக்ஸ் காட்சியில் யாரையாவது சாகடிக்க வேண்டும் எனும் செண்டிமெண்டுக்காக ஒருவரை பலிகடாவாக்கி இருக்கிறார்கள்.

    Vennila kabadi kuzhu 2 review: Fails to meet the impact of its first part

    விஷ்ணு விஷால், சூரி உள்பட முதல் பாகத்தில் நடித்த அனைவருக்கும் பெரிய அடையாளத்தை கொடுத்த படம் வெண்ணிலா கபடிக்குழு. ஆனால் இந்த படம் யாருக்கும் அடையாளத்தை ஏற்படுத்தி தருவதற்கு வாய்ப்பில்லை.

    எனவே விக்ராந்த் எதிர்பார்க்கும் திருப்பம், இந்த படத்தின் மூலம் கிடைக்காது என்பதே நிதர்சனம். தனது மற்றப் படங்களை போலவே இதிலும் உடலை வருத்திக்கொண்டு, மிகுந்த மெனக்கெடலுடன் தான் நடித்திருக்கிறார் விக்ராந்த். ஆனாலும் அவருக்கான நேரம் இன்னும் வரவில்லை.

    Vennila kabadi kuzhu 2 review: Fails to meet the impact of its first part

    நாயகி அர்த்தனா பினு வழக்கம் போல அழகு பொம்மையாக வந்து போகிறார். பாவாடை தாவணியில் அர்த்தனா கொள்ளை அழகு. அவரது தந்தையாக வரும் ரவி மரியா, படத்தை கொஞ்சம் கலகலப்பாக்குகிறார். கபடி கோச்சாக மட்டும் வந்து போகிறார் 'ஆடுகளம்' கிஷோர்.

    அப்பாவாக வரும் பசுபதி மகனை நினைத்து உருகும் காட்சியில் நெகிழவைக்கிறார். வெறுமனே கபடி, கபடி என படத்தை கொண்டு செல்லாமல் அப்பா - மகன் பாசத்தையும் சைட் டிராக்கில் கொண்டு சென்றிருப்பது இயக்குனரின் நல்ல யுத்தி.

    Vennila kabadi kuzhu 2 review: Fails to meet the impact of its first part

    80களில் நடக்கும் கதை என்பதால் இளையராஜா போல் இசையமைக்க வேண்டும் என நினைத்து அதேபோன்ற மெட்டுக்களை பயன்படுத்தி இருக்கிறார் இசையமைப்பாளர் செல்வகணேஷ். ஆனால் அது இளையராஜாவின் பல்வேறு பாடல்களில் இருந்து கொஞ்சம் கொஞ்சம் தாளங்களை எடுத்து ஒன்றாக இணைத்தது போல் இருக்கிறது. பின்னணி இசையும் அப்படியே தான்.

    Vennila kabadi kuzhu 2 review: Fails to meet the impact of its first part

    ஒளிப்பதிவாளர் கிருஷ்ணசாமியின் கேமரா கபடி போட்டியை நன்றாக படம் பிடித்திருக்கிறது. சண்டைக்காட்சிகளை சிறப்பாக அமைத்திருக்கிறார் சூப்பர் சுப்பராயன்.

    Vennila kabadi kuzhu 2 review: Fails to meet the impact of its first part

    வெண்ணிலா கபடிக்குழு ஏற்படுத்திய மேஜிக், இரண்டாம் பாகத்தில் டோட்டலாக மிஸ்சிங்.

    English summary
    The tamil movie Vennila kabadi kuzhu 2, starring Vikranth, Arthana binu in the lead roles fails to create impact of its first part.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X