Jothi Public Review :படத்தை பார்த்து அழுதுவிட்டேன்..ஜோதி எப்படி இருக்கு?மக்களின் கருத்து!
சென்னை : உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இன்று வெளியாகி உள்ள திரைப்படம் ஜோதி.
இப்படத்தில் ஷீலா ராஜ்குமார்,வெற்றி, கிரிஷா குரூப், மைம் கோபி, நான் சரவணன் ஆகியோர் நடித்துள்ள இப்படத்தை ஏவி கிருஷ்ண பரமாத்மா இயக்கி உள்ளார். மேலும், ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் இசையமைத்துள்ள இப்படத்திற்கு சத்ய மூர்த்தி படத்தொகுப்புகளை கவனித்துள்ளார்.
குழந்தை கடத்தலை மையக்கருவாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இத்திரைப்படம் பற்றி மக்கள் கூறும் விமர்சனத்தை பார்க்கலாமா?
வயிற்றை அறுத்து குழந்தை கடத்தல்
நான்கு நாளில் பிரசவம் ஆகவிருக்கும் டாக்டர் ஒருவரின் கர்ப்பிணி மனைவி ஜோதியின் வயிற்றை அறுத்து குழந்தையை திருடி செல்கிறான் ஓர் மர்ம ஆசாமி. இதை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கேள்விப்பட்டு அதிர்ச்சி அடைந்து. துருவி துருவி விசாரணை நடத்துகிறார். மர்ம ஆசாமியை நெருங்கியது போல் தோன்றினாலும் அவனை கண்டறிய முடியவில்லை.
செம கிளைமாக்ஸ்
பலர் மீது சந்தேகம், அடுக்கடுக்கான மர்ம முடிச்சுகள் என கதை சுவாரசியமாக செல்கிறது. குற்றவாளிகளை நெருங்கிவிட்டது போல தோன்றினாலும், குற்றவாளிகளாக பிடிக்க முடியாமல் திணறுகிறது போலீஸ். குழந்தை கடத்தலுக்கு பின்னால் ஒரு கூட்டம் வியாபாரம் நடத்தும் விவகாரம் அம்பலமாகிறது. ஆனாலும் வயிற்றை கிழித்து குழந்தையை திருடும் பயங்கரம் நடந்தது எப்படி என்பதுதான் கிளைமாக்ஸ் செம ட்விஸ்ட்.
அழுதுவிட்டேன்
இன்று திரையரங்கில் வெளியாகி உள்ள படத்தை பார்த்த பொதுமக்கள் பலர், இப்படி எல்லாம் நடக்குமா என்ற இறுக்கமான மனதுடன் வெளியில் வந்தனர். இந்த படத்தை பார்த்து ஒரு கட்டத்தில் என்னால், அழுகையை அடக்க முடியவில்லை, ஒரு தாயின் பாச போராட்டத்தையும், அதன் வலியையும் இயக்குநர் அழகாக சொல்லி இருக்கிறார் ஒவ்வொரு கர்ப்பிணியும் பார்க்க வேண்டிய படம் என்றனர்.
பார்க்கவேண்டிய படம்
இந்த படம் ஒரு சமூக அக்கறை கொண்ட படம், அதில் குழந்தையை இழந்து தவிக்கும் வலியை வைத்து ஒரு உணர்ச்சிபூர்வமான கதையாக கொடுத்து இருக்கிறார்கள் ஒவ்வொரு குடும்பத்தில் இருப்பவர்களும் கட்டாயம் இந்த படத்தை பார்க்கவேண்டும். டிவியில், செய்திதாளில் நாம் பார்த்து எதார்த்தமாக கடந்து போன செய்திக்கு பின்னால் இருக்கும் வலி, இந்த படத்தை பார்க்கும் போது தெரிகிறது.
இயல்பான நடிப்பு
ஜோதி கதாபாத்திரத்தில் நடித்த ஷீலா ஒரு இயல்பான சாதாரணமான உணர்ச்சிவசப்பட்ட பெண்ணாக நடித்திருக்கிறார். அதே போல, வெற்றியும் தனது கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். அடுத்தடுத்து என்ன நடக்கும்.. அடுத்து என்ன நடக்கும் என எதிர்பார்ப்புடன் ஒவ்வொரு காட்சியும் நகர்கிறது. அப்பா பெண்ணின் பாசம்,குழந்தை இல்லாதவர்களின் மனவேதனை என அனைத்தையும் இப்படத்தில் அழகாக சொல்லி இருப்பதாக பொதுமக்கள் கூறியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











